சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

9 Mar 2015

அடுத்த அத்திப்பட்டியாக மாற காத்திருக்கும் கிராமங்கள்!

ராமநாதபுரம் மாவட்டம் , திருப்புல்லாணி ஒன்றிய பகுதியை சேர்ந்த 'கோரைகூட்டம் , மேலபுதுக்குடி , கீழவலசை , சேதுக்கரை மற்றும் அதைச் சுற்றி உள்ள பல கிராமங்களை அடியோடு அழித்து வருகிறது இறால் பண்ணைகள்.
இந்த பகுதியில் செயல்பட்டு வரும் 97% இறால் பண்ணைகளுக்கு அரசு அனுமதி வழங்கவில்லை, இதை விட மிக மிக முக்கியமாக இறால் பண்ணைகள் செயல்படுவதற்கு மத்திய அரசு விதித்த எந்த ஒரு விதிமுறைகளையும் இங்கு செயல்படும் இறால் பண்ணைகள் கடைபிடிப்பதில்லை இதுதான் இங்கு பெரும் பிரச்னை.

மாவட்ட நிர்வாகத்தில் இருந்து உள்ளூர் நிர்வாகம் வரை அத்தனை நபர்களும் இதற்கு கூட்டு. இது சம்பந்தமாக மாவட்ட நிர்வாகத்தில் அளிக்கப்பட மனுக்களை ஒன்று சேர்த்து பழைய பேப்பர் கடையில் விலைக்கு போட்டால் ஒரு குடும்பமே உட்கார்ந்து சாப்பிடும் அளவுக்கு இருக்கும். கடந்த 20 வருட காலத்தில் இந்த பகுதியில், அதுவும் குறிப்பாக கோரைகூட்டம் கிராமத்தில் சுமார் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த ஊரை காலி செய்து விட்டார்கள்.

இதில் முக்கிய பிரச்னையே என்னவென்றால் ஒரு இறால் பண்ணை 5 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டால் அதை சுற்றி உள்ள 20 ஏக்கர் நிலங்கள் நாசமாகும். பனை மரம், தென்னை மரம் என்று இந்த பகுதியில் இருந்த மரங்கள் அனைத்தும் நாசமாகி விட்டது. விவசாயம் முற்றிலும் அழிந்தே போய் விட்டது. 

கொட்டக்குடி ஆறு இன்று முற்றிலும் மாசுபட்டு கிடப்பதற்கு முக்கிய காரணமே இறால் பண்ணைகளில் வெளியேற்றப்படும் கழிவு நீர்தான். இதைபற்றி பல முறை சம்பந்தப்பட்டவர்களிடம் முறையிட்டும் போராட்டங்கள் நடத்தியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
ஃபேஸ்புக் சமூக வலைதளத்தில் 'இறால் பண்ணை எதிர்ப்பு இயக்கம்' என்று ஒரு பக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அந்த பக்கத்தின் முகவரி :  www.facebook.com/sfpmk .



No comments:

Post a Comment