சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

9 Mar 2015

பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டினால் ரூ.25 ஆயிரம் அபராதம்!

சென்னையில் பொது இடங்களில் பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டினால் ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

சென்னை நகரை தூய்மையாக வைத்து கொள்வதற்காக மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து குப்பைகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. மேலும், பொது இடங்களில் குப்பை கொட்டினால் ரூ.500 அபராதம் என மாநகராட்சி ஏற்கனவே அறிவித்துள்ளது.

இதேபோல், மக்காத குப்பைகளான பிளாஸ்டிக் பொருட்களை சேகரிக்க சென்னையிலுள்ள 200 வார்டுகளிலும், 200 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், பொது இடங்கள், தெரு வீதிகளில் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுவதால் பொது சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. மேலும் சாக்கடை கால்வாய், மழை நீர் கால்வாய், கூவம் ஆற்றுப்பகுதியிலும் பிளாஸ்டிக் கழிவுகள் மலைபோல் தேங்கி அடைப்பை ஏற்படுத்துகின்றன.

இதனை தடுக்கும் வகையில் மாநகராட்சி அதிரடி நடவடிக்கை எடுக்க உள்ளது. பிளாஸ்டிக் கழிவுகளை பொது இடங்களில் கொட்டும் பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் உற்பத்தியாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளது.

முதல் தடவை தவறு செய்தால் ரூ.5 ஆயிரம் அபராதமும், 2வது முறையாக ரூ.10 ஆயிரமும், தொடர்ந்து 3வது முறையாக ஈடுபட்டால் 3 மாதம் சிறைத் தண்டனையோ அல்லது ரூ.25 ஆயிரம் அபராதமோ விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், ரயில் நிலையம், தெருவோரத்தில் வியாபாரம் செய்யும் இடங்கள், கடைகள், மார்க்கெட், கோவில், தனியார் அலுவலகங்கள், வங்கிகள், பொழுதுபோக்கு மையங்கள் உள்ளிட்ட பல பகுதிகளில் விரைவில் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்கும் மையம் அமைக்கவும் மாநகராட்சி முடிவு செய்துள்ளது.



No comments:

Post a Comment