சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

7 Mar 2015

பேட்டை சுழற்றினார் தோனி... இந்திய அணி அபார வெற்றி !

லகக் கோப்பை போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி தோற்கடித்து காலிறுதிக்குள் நுழைந்தது. இந்திய அணியின் நிதானமான ஆட்டம் இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டது.
        
பெர்த் நகரில் நடந்து வரும் இந்த போட்டியில் இந்திய கேப்டன் தோனி டாஸ் போட, ஜேசன் ஹோல்டர் தலை கேட்டார். இதில் தலையே விழ, டாஸ் வென்ற ஜேசன் ஹோல்டர் முதலில் பேட் செய்வதாக அறிவித்தார்.
மேற்கிந்திய தீவுகள் அணி 4.5 ஓவர்களில்  8 ரன்கள் எடுத்திருந்த போது முகமது ஷமி பந்தில் விக்கெட் கீப்பர் தோனியிடம் பிடிகொடுத்து ஸ்மித் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து சாமுவேல்ஸ் கெயிலுடன் இணைந்தார். ஆனால் சாமுவேல்சும் நீடிக்கவில்லை. 2 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட்டனார்.அடுத்து கெயில் 21 ரன்கள் எடுத்த நிலையில், முகமது ஷமி பந்தில் மோகித் சர்மாவிடம் பிடிகொடுத்து வெளியேறினார். கெயிலை தொடர்ந்து வந்த ராம்தீன் சந்தித்த முதல் பந்திலேயே போல்டாகி வெளியேறினார். தொடர்ந்து சிம்மன்சும் 6 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
அடுத்து ஜோடி சேர்ந்த ரஸ்சல்,  டாரன் ஷமி ஜோடி ஓரளவுக்கு இந்திய பந்துவீச்சை சமாளித்து ஆடியது. எனினும் ரன்களை வேகமாக எடுக்க முடியவில்லை. டாரன் சமி, முகமது ஷமி பந்துவீச்சில் தோனியிடம் பிடிகொடுத்தார். ரஸ்சல் 8 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து களமிறங்கிய 
 ஜேசன்ஹோல்டர் பொறுப்பை உணர்ந்து நிதானமாக விளையாடினார். அவருக்கு பக்கபலமாக மறுமுனையில் ஜெரோம் டெய்லர் இணைந்தார்.
ஜேசன் ஹோல்டர் அபாரமாக விளையாடி ரன்களை குவிக்க ஆரம்பித்தார். 56 பந்துகளை சந்தித்து மூன்று பவுண்டரி மூன்று சிக்சர்களுடன் ஜேசன் ஹோல்டர் அரைசதமடித்தார்.  ஜெரோம் டெய்லர் 11 ரன்களில் உமேஷ் யாதவ் பந்தில் காட்டன் போல்டானார். இறுதியில் 44.2 ஓவர்களில் மேற்கிந்திய தீவுகள் அணி 182 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. ஜேசன் ஹோல்டன் 57 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட் ஆகாமல் இருந்தார். 

இந்திய தரப்பில் முகமது ஷமி 3 விக்கெட்டுகளையும் உமேஷ் யாதவ், ரவீந்தர ஜடஜா தலா இரு விக்கெட்டுகளையும் அஸ்வின், மோகித் சர்மா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்
அடுத்து இந்திய அணி பேட்டிங்கை தொடங்கியது. தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஆகியோர் களமிறங்கினர். இந்திய அணி 11 ரன்கள் எட்டிய நிலையிர் 9 ரன்கள் எடுத்திருந்த ஷிகர் தவான் டெய்லர் பந்துவீச்சில் டாரன் ஷமியிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து துணை கேப்டன் விராட் கோலி ரோகித்துடன் இணைந்தார்.ஆனால் இந்த ஜோடியும் நிலைக்கவில்லை. ரோகித் சர்மா 7 ரன்கள் எடுத்த நிலையில் வீழ்ந்தார். பின்னர் விராட்கோலி, ரகானே ஜோடி ஓரளவு நிலைத்து விளையாடியது. எனினும் விராட்கோலி 33 ரன்களிலும் ரகானே 14 ரன்களிலும் வெளியேறினர். அடுத்து சுரேஷ் ரெய்னாவும் 22 ரன்கள் எடுத்த நிலையில், ஸ்மித் பந்தில் ராம்தீனிடம் பிடிகொடுத்தார். தொடர்ந்து ஜடேஜாவும் சொற்ப ரன்களில் அவுட் ஆனார்.
தொடர்ந்து அஸ்வின் கேப்டன் தோனியுடன் இணைந்தார்.இந்த ஜோடி நிதானமாக விளையாடி இந்திய அணியை வெற்றியை நோக்கி அழைத்து சென்றது. இறுதியில் 39.1 ஓவர்களில் 185 ரன்கள் எடுத்து இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தோனி 45 ரன்களும், அஸ்வின் 16 ரன்களும் எடுத்தனர்.
இந்த வெற்றியை அடுத்து இந்திய அணி 4 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தது

No comments:

Post a Comment