சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

10 Mar 2015

எனக்கு கிடச்ச மிகப்பெரிய வாழ்த்து - மிர்ச்சி செந்தில் சிறப்பு பேட்டி!

ரேடியோ, சின்னத்திரையில் பிரபலமான முகங்கள் சினிமாவில் வெற்றிக் கொடி நாட்டிவருவது அனைவரும் அறிந்ததே. அப்படி பல்வேறு ஊடகங்களில் பணியாற்றி தனக்கான இறுதி இலக்காக சினிமாவில் தடம் பதித்தவர்களில் ஒருவர் மிர்ச்சி செந்தில். ரேடியோவில் பணியாற்றி, சின்னத்திரையில் “சரவணன் மீனாட்சி” நாடகம் மூலமாக தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமாகி, சேரனின் ’தவமாய் தவமிருந்து’ படத்தில் அறிமுகமாகி சினிமாவில் அடியெடுத்து அடுத்தடுத்து ’எவனோ ஒருவன்’, ’வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’, ’பப்பாளி’, ’வெண்ணிலா வீடு’,  தற்போது ’ரொம்ப நல்லவண்டா நீ’ படமும் நடித்து வெளியாகியிருக்கிறது. அனைத்து ஊடகங்களிலும் பணியாற்றிய மிர்ச்சி செந்திலை பிடித்து சில கேள்விகளை தட்டிவிட்டோம்.

இயக்குநர் வெங்கடேஷின் 21வது படம் “ரொம்ப நல்லவண்டா நீ”, படம் பற்றி சொல்லுங்க? 

இந்த வாரம் வெளியான 7 படங்களில் இந்த படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைச்சிருக்கு, காமெடி, அடுத்து என்ன நடக்கப் போகுதுனு தெரியாத அளவுக்கு த்ரில்லர் கலந்து இயக்கிருக்காரு இயக்குநர் எ.வெங்கடேஷ். வித்தியாசமான கதைக் களம், அதுனால எல்லோருக்கும் இந்தப் படம் பிடிக்கும். படத்துல நான் காமெடி பண்ணக்கூடாது, சுத்தியிருக்கறவங்க என்ன வச்சி காமெடி பண்ணுவாங்க. நாம எப்போதுமே சீரியஸா இருக்கனும். அது ரொம்ப சேலஞ்சிங்கா இருந்துச்சு. 


இந்த படத்துக்காக உங்களுக்கு கிடைத்த முக்கியமான வாழ்த்து? 

நான் ரொம்ப சீரியஸா எடுத்துக்குற ஒருத்தரோட கமெண்ட் தான். அவங்களே ரொம்ப பெரிய நடிகை. அவங்க இந்தப் படத்த 3 முறை பார்த்தாங்க. நல்லா இல்லனா நல்லா இல்லைனும், மாத்தனும்னா மாத்தனும்னு நேர்மையா சொல்லுவாங்க. ’ரொம்ப நல்லவண்டா நீ’ படத்துல ரொம்ப நல்லா இருக்கீங்கனு சொன்னது என் மனைவி தான். ஸ்ரீஜா அவங்கதான் என்னோட முக்கியமான செலிஃப்ரிட்டி.

ரேடியோ, சின்னத்திரை, இப்போ சினிமா எல்லாத்துக்கும் சேர்த்து ஒரு விளக்கம் குடுங்க? 

எல்லாமே மிடியா தான். மக்கள் மனசுக்குள்ள போகுறதுக்கான ஒவ்வொரு வழிதான் இந்த ரேடியோ, சின்னத்திரை எல்லாம். நானும் மக்கள் மனசுக்குள்ள நுழையுறதுக்குத் தான் குட்டிகரணம், தோப்பு கரணம் எல்லாம் போடுறேன். நான் எவ்வளவு ஜெயிச்சிருக்கேன்னு என்னால சொல்லமுடியாது. ஆனா எல்லோரும் கண்டிப்பா என்னை ஆதரிக்கணும், அதுக்கான வேலைய நான் செய்வேன்.

ட்ரீம் ரோல் இல்லனா ரோல் மாடல் யாரு? 

இப்போதைக்கு ட்ரீம் ரோல் பத்தி யோசிக்க முடியல. வர ரோல நல்லாப் பண்ணனும். எல்லா மொழிகள்’லயும் நிறைய நடிகர்கள் இருக்காங்க. கஷ்டப்பட்டு உழச்சு நடிப்ப வெளிப்படுத்துன எல்லாரையும் பிடிக்கும். அவங்கதான் என்னோட ரோல் மாடல் .

அடுத்தப் படம்? 

3 கதை இருக்கு. இன்னும் முடிவெடுக்கல. எனக்கு எது சரியா இருக்குமோ அந்தப் படமா தேர்ந்தெடுத்து பண்ணனும். நடிச்சா ஹீரோதானு சொல்லல. நல்ல கதாபாத்திரமா எனக்கு ஏத்த மாதிரி இருந்துச்சுன்னா கண்டிப்பா நடிப்பேன்.

டிவி அல்லது ரேடியோவிலிருந்து சினிமாவிற்கு அதிகமான நடிகர்கள் வர ஆரம்பிச்சுட்டாங்க. உங்களுக்கு போட்டி இருக்கா இல்லையா? 


சினிமாவில் நிறைய பேர் தேவைப்படுறாங்க. அதுக்கான துருப்புச் சீட்டு தான் மீடியா. புதுமுகங்களின் தேவை சினிமாவில் அதிகமா இருக்கு. எல்லா தயாரிப்பாளராலும் பெரிய பட்ஜெட் படங்களை இயக்கிட முடியாது. அதோட புதுமுக நடிகர்களை வெச்சு இயக்குவதும் எளிது. மக்களுக்குத் தெரிஞ்சவங்க சினிமாவில நடிக்கும் போது ஈஸியா ஏத்துக்குவாங்க. இதனால போட்டியெல்லாம் இல்ல. இன்னும் நிறைய பேரு சினிமாவுக்கு வரனும். இடம் நிறைய இருக்கு. போட்டி என்ற வார்த்தை குறைவாதான் இருக்கு. 



No comments:

Post a Comment