மார்ச் 8, பெண்கள் தினத்தன்று தொலைக்காட்சியிலும், சோஷியல் மீடியாக்கள் மூலமாகவும் எக்கச்சக்க வாழ்த்துக்கள் குவிந்த அதே நேரத்தில், ‘பெண் பாதுகாப்பாவது மண்ணாவது’ என்று அனைவரின் புடனியில் அறைந்திருக்கிறது ஒரு வீடியோ.
குஜராத் மாநிலத்திலுள்ள அகமதாபாத்தில், உறவினர் ஒருவரைப் பார்க்க தனது வேகன்-ஆர் காரில் மருத்துவமனைக்குச் சென்று கொண்டிருந்தார் அமி தஹிலியானி என்ற பெண். காரை தானே ஓட்டிச் சென்றவர், சின்ன டிராஃபிக் சிக்கல் ஒன்றில் ஒரு இனோவா காரின் மீது லேசாக உரச, பயத்தில் காரிலிருந்தபடியே மன்னிப்புக் கோரியிருக்கிறார் அமி.
‘‘என்ன நடந்தது என்று யோசிப்பதற்குள் தடாலென இறங்கி வந்த அந்த இனோவா காரர், என்னைக் கெட்ட வார்த்தைகளில் கண்டபடி திட்ட ஆரம்பித்துவிட்டார். சாலையில் கூட்டம் கூடிவிட்டது. எனக்கு ஒரே அவமானமாகப் போய்விட்டது. அவர் காரிலிருந்து என்னைக் கீழே இறங்கக்கூட எனக்கு வாய்ப்பளிக்கவில்லை. யாருக்கோ போன் போட்டு வரவழைத்த அவர், தனது காரிலிருந்த குழந்தையை அவர் நண்பரிடம் கொடுத்துவிட்டு, படுகோபமாக தனது இனோவா காரால் எனது வேகன்-ஆரை ஆத்திரம் தீர வேண்டுமென்றே இடிக்க ஆரம்பித்து விட்டார். நான் சீட் பெல்ட் போட்டதால் எனக்கு அடி ஏதும் படவில்லை!’’ என்று நடந்ததை நினைவுகூர்ந்தார் அமி தஹிலியானி.

இதை அங்கே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ஒருவர் வீடியோவாக எடுத்து, உடனே ஆன்-லைனில் அப்லோட் செய்துவிட, இப்போது நாடு முழுவதும் பரபரப்பாகிவிட்டது வீடியோ. இதில் செம வேடிக்கை என்னவென்றால், டிராஃபிக் போலீஸ் ஒருவர் இந்த நிகழ்ச்சியை சும்மா ‘ஜஸ்ட் லைக் தட்’ வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததும் வீடியோவில் பதிவாகி இருப்பதால், குஜராத் காவல்துறையினருக்கு இப்போது பயங்கர பிரஷராம். சம்பவம் நடந்தபோது எந்த நடவடிக்கையும் எடுக்காத காவல்துறையினர், வீடியோ ரிலீஸாகி ஹிட் ஆனதும், பரபரவென்று அந்த இனோவாவை ஓட்டிய யோகேஷ் புஜாரா என்பவரையும், அவரது நண்பரையும் கைது செய்திருக்கிறது.
‘‘இம்மாதிரி ஆட்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்பதுதான் எனது ஆசை!’’ என்று செம டென்ஷனாகப் பேட்டி கொடுத்தார் அமி தஹிலியானி.
யோகேஷ் மாதிரியான ஆட்களை என்ன செய்யலாம்? நீங்கள் என்ன சொல்கிறீர்கள் நண்பர்களே?
No comments:
Post a Comment