சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

7 Mar 2015

நிர்பயா ஆவணப் படத்தில் பேட்டி கொடுக்க ரூ 40 ஆயிரம் வாங்கிய முகேஷ் சிங்!

நிர்பயா` ஆவணப் படத்திற்கு பேட்டியளிக்க குற்றவாளி முகேஷ் சிங் ரூ.40 ஆயிரம் வாங்கிக் கொண்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன. 
டெல்லியில், கடந்த 2012 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் தேதி தனது நண்பருடன் பேருந்தில் சென்ற மருத்துவ மாணவி ஒருவரை 6 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்து சீரழித்தது.

அந்தக்  கும்பலால் கடுமையாக தாக்கப்பட்ட அந்த மாணவி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

நாடு முழுவதிலும் பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக தலைமறைவாக இருந்த 6 குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இவர்களில் ஒருவர் சிறுவன் என்பதால் பின்னர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டான். ஒரு குற்றவாளி சிறையில் தற்கொலை செய்து கொண்டான். பேருந்தின் ஓட்டுநர்  முகேஷ் சிங் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்.

இந்நிலையில், இங்கிலாந்தைச் சேர்ந்த திரைப்பட பெண் தயாரிப்பாளர் லெஸ்லீ உத்வின் மற்றும் பி.பி.சி. 4 குழுவினர் இந்த பாலியல் வன்கொடுமை  சம்பவத்தை மையமாக வைத்து ‘இந்தியாவின் மகள்’ என்ற ஆவணப்படத்தை தயாரித்து உள்ளனர்.

இதற்காக திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் முகேஷ் சிங்கிடம், சிறை அதிகாரிகள் அனுமதியுடன் பேட்டியும் எடுத்தனர். குற்றவாளி முகேஷ் சிங் அளித்த பேட்டி முழுமையாக ஊடகங்களில் வெளியானது.

இந்த நிலையில் முகேஷ் சிங்கிற்கு பேட்டி எடுக்க லெஸ்லீ உத்வின் ரு 40 ஆயிரம் வழங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.

பல முறை முகேஷ் சிங்கிடம் பேட்டி எடுக்க உத்வின் முயன்று உள்ளார் ஆனால் முடிய 
வில்லை.அவருக்கு  பேட்டி எடுக்க உதவியவர் முல்லர் என்பவர் ஆவார். பின்னர் உத்வினுக்கு, திகார் சிறைச்சாலையில் முகேஷ் சிங்கை சந்தித்து பேட்டி எடுக்க  மத்திய உள்துறை அலுவலகத்தில் இருந்து அனுமதி கிடைத்து உள்ளது. 

முதலில் இந்த பேட்டிக்காக முகேஷ் சிங் ரூ. 2 லட்சம் கேட்டு உள்ளான். பின்னர் அது பேரம் பேசப்பட்டு ரூ.40 ஆயிரம் வழங்கப்பட்டு உள்ளது. அதனைத் தொடர்ந்து பேட்டி  கொடுக்க அவன் சம்மதம் தெரிவித்ததும் உடனடியாக அவனை சந்தித்து பேட்டி எடுக்க அனுமதி கிடைத்து உள்ளது.
குற்றவாளி முகேஷ் சிங்கின் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டு உள்ளது. பின்னர் அவரது குடும்பத்தினர் அந்த பணத்தை எடுத்து உள்ளனர் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.


No comments:

Post a Comment