சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

7 Mar 2015

சும்மா சும்மா வாழ்த்து சொல்லிக்கிட்டு... கடுப்பேத்றார் மைலார்ட்...!

முன்பெல்லாம் இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வென்று விட்டால் அல்லது ஷார்ஜாஷா போட்டியில் சாம்பியனாகி விட்டால்தான் இந்திய பிரதமரிடம் இருந்து வாழ்த்து செய்தி பறக்கும். பிரதமரிடம் இருந்து வாழ்த்து செய்தி வந்து விட்டால், அதையெல்லாம் கிரிக்கெட் வீரர்கள் சொல்லி சொல்லி மாளுவார்கள். பிரதமர் அப்படி வாழ்த்திருக்காரு... இப்படி வாழ்த்திருக்காருனு புலகாங்கிதம் அடைவார்கள். ஆனால் இப்போது காலம் மாறி விட்டது, பிரதமரும் தன்னை ஒரு கிரிக்கெட் ரசிகன் என்று காட்டிக் கொள்ளும் காலம் இது...!

அதனால்தான் என்னவோ இந்த உலகக் கோப்பையில் எந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றாலும் பிரதமர் மோடியிடம் இருந்து அடுத்த நிமிடமே கிரிக்கெட் வீரர்களுக்கு வாழ்த்து போய் விடுகிறது. இந்த உலகக் கோப்பைத் தொடரில் முதல் ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தியதும் பிரதமர் மோடி வாழ்த்தினார். இது வெகு சாதாரணமாக பார்க்கப்பட்டது.

அதனை தொடர்ந்து தென்ஆப்ரிக்க அணியை தோற்கடித்த போதும் பிரதமர் வாழ்த்தினார். தொடர்ந்து கத்துக்குட்டி யு.ஏ.இ. அணியை வீழ்த்தியபோது பிரதமரின் வாழ்த்து செய்தி மிஸ்சிங்... சரி இனி உலகக் கோப்பையை வென்றால்தான் பிரதமரிடம் இருந்து வாழ்த்து கிடைக்கும் என்று எதிர்பார்த்தால், நேற்று மேற்கிந்தி தீவுகள் அணியை எதிர்த்து வெற்றி பெற்றதற்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

பிரதமர் ஏன் இப்படி ஒவ்வொரு போட்டிக்கும் விழுந்து விழுந்து வாழ்த்து தெரிவித்து கொண்டிருக்க வேண்டும். அவருக்கு வேறு வேலை இல்லையா? உலகக் கோப்பையை வென்று விட்டால் அதற்கு வாழ்த்து தெரிவித்தால் கவுரவமாக இருக்கும். அவது வாழ்த்துக்கும் ஒரு மரியாதை இருக்கும். ஆனால், அதையெல்லாம் தாண்டி ஒவ்வொரு போட்டிக்கும் வாழ்த்து தெரிவித்து, தானும் இந்த நாட்டின் சாதாரண பிரஜை போல,ஒரு கிரிக்கெட் ரசிகன்தான் என்பதை நிரூபிக்க முயற்சிக்கிறாரோ? என்னவோ தெரியவில்லை.No comments:

Post a Comment