வேலையில்லா படித்த இளையசமுதாயத்தை ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒன்றிணைய வைத்தால், அரசியல் கட்சிகளுக்கு கூடும் கூட்டத்தை விட மிக அதிகமாக இருக்கும். அந்த அளவுக்கு வேலையில்லாமல் அல்லது சரியான வேலை கிடைக்காமலும் உள்ளனர்.
பெற்றோர்கள் கடன் வாங்கி பல லட்சங்கள் செலவு செய்து படிக்க வைத்து, 5000 ரூபாய் சம்பளம் கூட கிடைக்காமல் மாணவர்கள் கஷ்டபடுகின்றனர்.
ஒரு சிலர், BE முடித்து வேலை கிடைக்காததால் ME படிக்கின்றனர். ஒரு சிலர், தனது தந்தை பார்த்த தொழிலை பார்த்து கொள்கின்றனர்.
கற்றது BE வாழ்க்கையை தொலைத்தோம் என்ற முகப்பு பக்கத்தில் 50,000 நண்பர்கள் உள்ளனர். நமது வாட்ஸ்அப் குழுவிலும் பலர் வேலை தேடி கொண்டுள்ளனர்.
இந்த வேலையில்லா திண்டாட்டத்தை வெளியே தெரியாதவாறு அரசும், ஊடகங்களும் பார்த்து கொள்கின்றன.
கூடிய விரைவில் வேலையில்லாதவர்கள் ஒரு மிக பெரிய போராட்டம் அறிவித்தால், அதுதான் மிக பெரிய புரட்சியாக இருக்கும்.
தமிழ்நாட்டை சார்ந்த RBI கவர்னர் திரு. ரகுராம் ராஜன். இந்தியாவில் உள்ள பணத்தை வைத்து நிறைய வேலைவாய்ப்புகள் உருவாக்க முடியும்போது, ஏன் ஒவ்வொரு நாட்டிற்க்கும் சென்று பன்னாட்டு நிறுவனத்திடம் கையேந்த வேண்டும் என கேள்வி எழுப்பினார்.
ஆம் நண்பர்களே, நிறைய வேலைவாய்ப்புகளை அரசு மூலம் உருவாக்க பல அறிஞர்களிடம் நிறைய வழிமுறை உள்ளது. ஆனால் படிக்காத சுயநலம் மிக்க அரசியல்வாதிகள், பன்னாட்டு நிறுவனங்களிடம் பணத்தை பெற்று கொண்டு அனுமதி கொடுத்து, அவர்கள் பெயரில் நிறைய கல்லூரிகள், மருத்துவமனைகள், என ஆரம்பித்து மக்கள் பணத்தை கொள்ளை அடிக்கின்றனர்.
நமது நாட்டை காப்பாற்ற தனி ஒரு மனிதனால் ஒன்றும் செய்ய முடியாது. நமக்க நிறைய நல்ல படித்த திறமைமிக்க நேர்மையானவர்கள் தேவை. அவ்வாறு செய்தால்தான், நாம் வருங்கால சந்ததியை காப்பாற்ற முடியும்.
நம்மை ஆளும் அரசனை மாற்ற வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம். நாம் விழித்தெழ வில்லையென்றால், மிக பெரிய விளைவுகளை சந்திக்க நேரிடுவோம். கூடிய விரைவில் நடக்கவிருக்கும் கலந்தாலோசனை கூட்டத்தில் இது போன்ற பல பிரச்சனைகளை பற்றியும், அதை எப்படி களைவது பற்றியும் விரிவாக எடுத்து கூறப்படும்.
நம்மை பின் தொடர facebook-இல் LIKE செய்யுங்கள். https://www.facebook.com/TN.ilayathalaimurai
கீழே கொடுக்கப்பட்டுள்ள பதிவு விகடனில் இருந்து எடுக்கப்பட்டது.
வேலை வாய்ப்பகம் ஒவ்வொரு மாநிலத்திலும் செயல்படுகிறது. எதற்காக செயல்படுகிறது? வேலை கொடுப்பதற்காக என்று நினைத்தால்இல்லை என்றுதான் பெரும்பாலானவர்களின் பதிலாக உள்ளது. ஆட்சியாளர்கள் எல்லோரும் பணம் உள்ளவர்களுக்கே வேலை கொடுக்கிறார்கள் ‘வேலை இல்லை’ எனும் வார்த்தை இந்திய இளைஞர்களை அச்சுறுத்தும் ஒரு வார்த்தையாக உருவெடுத்து உள்ளது. ஒரு மனிதனின் அடிப்படைத் தேவையை பூர்த்தி செய்வது மட்டுமல்லாது அம்மனிதன், பூமியில் வாழும் வரை அவனுக்கு உறுதியாய், ஊக்கமாய் இருப்பது இந்த வேலையே.
பல படித்த இளைஞர்கள்தான் படித்ததற்கும், செய்கின்ற வேலைக்கும் சம்பந்தம் இல்லாமல் பணி செய்கின்றனர். இதில் பலர் ஆட்டோக்களை ஓட்டுபவர்களாகவும், தொண்டு நிறுவனங்களில் பணிபுரிபவராகவும், சுய தொழில்புரிபவர்களாகவும் பரிணமித்திருக்கிறார்கள். வேலைஇல்லாத் திண்டாட்டம் பல குற்றங்கள் உருவாக காரணமாக அமைந்து விட்டது. பல செயின் பறிப்பு முதல் நவீன தொழில் நுட்ப திருட்டுவரை படித்த இளைஞர்கள் ஈடுபட்டு கைது ஆவது இப்போது நிறைய நடக்கிறது.
2011ல், 3.5 சதவீதமாக இருந்த, வேலைவாய்ப்பின்மை, 2012ல், 3.6 சதவீதமாக உயர்ந்து, கடந்த ஆண்டில், அதாவது, 2013ல், 3.7 சதவீதமாக இருந்துள்ளது. கிராமப்புறங்களில் இருந்து, ஏராளமானோர், நகர்ப்புறங்களுக்கு இடம்பெயர்வதால், கிராமப்புறங்களில் வேலைவாய்ப்புகள் குறைந்து, அங்கு வேலையில்லா திண்டாட்டம் அதிகரிக்கிறது. அவ்வாறே, நகர்ப்புறங்களில், திறமையில்லாத, கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள் அதிகரிப்பதால், நகர்ப்புறங்களிலும் வேலையில்லா திண்டாட்டம் அதிகரிக்கிறது.
NASSCOM (National Association of Software and Services Companies) அண்மையில் வெளியிட்ட புள்ளிவிபரத்தின்படி இந்தியாவில் 75 % பொறியியல் பட்டதாரிகள் வேலைபெற தகுதியற்றவர்கள். ஒவ்வொரு வருடமும் 7,50,000 பொறியியல் பட்டதாரிகள் படித்துவிட்டு வெளியே வருகின்றனர். இது ஆண்டுக்கு 5 % என்று வருடா வருடம் உயர்கிறது, கலை மற்றும் அறிவியல் பட்டதாரிகளின் எண்ணிக்கை 15,00,000க்கும் அதிகம்.
இதற்க்கு தீர்வாக பல புதிய தொழில்கள் தொடங்கப்படவேண்டும். அப்போதுதான் வேலை வாய்ப்பு பெருகும். பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு பிடிக்காத படிப்பை படிக்க சொல்லி கட்டாயப்படுத்தக்கூடாது. மேலும் மாணவர்களும் பிடித்த துறையை கண்டு, அதை படிக்கவேண்டும். இதனால் பாடத்திட்டத்தையும் தாண்டி நம் திறன் வளரும்.
'படிப்பு என்பது பிடிப்பாக இருக்க வேண்டுமே தவிர திணிப்பாக இருக்க கூடாது. திணிப்பு இல்லாத படிப்பின் மூலமே புதிய கண்டுபிடிப்புகளும் வேலை வாய்ப்பும் பெருகும்.
நன்றி,
இளையதலைமுறை
#Whatsappஇளையதலைமுறை
No comments:
Post a Comment