சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

23 Mar 2015

'லூசியா' மாத்திரை சாப்பிட்ட பிரபலங்களின் கனவு!

‘எனக்குள் ஒருவன்’ படத்தில் ‘லூசியா’ என்ற மாத்திரையைச் சாப்பிட்டு, கனவில் விருப்பப்பட்ட வாழ்க்கையை வாழ்வார் ஹீரோ சித்தார்த். நிஜத்தில் சில பிரபலங்களிடம் இந்த மாத்திரையைக் கொடுத்தால் என்ன கனவு கண்டிருப்பார்கள்?

ரஜினி: கட் பண்ணா... இமயமலை அடிவாரத்தில் உறைந்துபோன ஒரு ஏரிக்குப் பக்கத்தில் எளிமையாய் இளநீர்கடை போட்டபடி உட்கார்ந்திருப்பார். ‘பாபாஜி கை பட்ட இளநீர்மா... சீ...விடுவேன்...’ என பக்தர்களுக்கு சீவிக்கொடுப்பார். ‘இளநில தண்ணி இல்லைங்க’ என யாரும் சொன்னால், ‘எல்லாம் மாயா’ என மேலே கையைக் காட்டி கிறுகிறுக்க வைப்பார் இந்த லிங்கா ஸ்வாமிஜி!


கமல்: 
அவருடைய கனவுப் படமான ‘மருதநாயகம்’ கெட்-அப்பில் கிரேசி மோகன் டயலாக்கில் காமெடிப் படத்தை இயக்கிக்கொண்டிருப்பார். ‘இந்தப் படத்தோட பேரு புசாவதாரம்... நான் ஆஸ்காருக்கு இந்தப் படத்தை அனுப்பப் போவதில்லை. ஆஸ்கார் என்பது இங்கு ஒரு மாய விளையாட்டு. ஆனாலும் ஆஸ்காரை நான் வேண்டாம் என்று சொல்லவில்லை. அதைத் தந்தால் நல்லா இருக்கும் என்றுதான் சொல்கிறேன்’ என பேட்டி எடுப்பவர்களின் போட்டியை உருவிக்கொண்டிருப்பார். 

கலைஞர்: யாருமில்லா ஒரு தனித்தீவில் ஹாயாக கரீபியன் தீவின் பனியனும் பெர்முடாஸையும் போட்டுக்கொண்டு, ‘பனியனோடு திரிவது தவம்... தனியனாக இருப்பது சுகம். சனியனாக குடும்பம் வராதவரை’ என மொக்கை ரைமிங் கவிதை சொல்லி, சூரியனையே வியர்க்க வைத்தபடி மணலில் மல்லாந்து படுத்துக்கிடப்பார்!

ஜெயலலிதா: கேஸ் எதுவும் இல்லாத விறகு அடுப்பில் சமையல் செய்தபடி ஓர் ஓலைக் குடிசையில் நிம்மதியாக நெல்லுச்சோறு சமைத்து சாப்பிட்டுக்கொண்டிருப்பார். கண்ணுக்கு எட்டிய தூரம்வரை குனிந்தபடி இவர் வளர்க்கும் ஆட்டுக்குட்டிகள் வயலில் மேய்ந்து கொண்டிருக்கும்!

விஜய்:
 ஒருநாள் முதல்வர் படத்தை அர்ஜூனுக்குப் பதில் இவர் நடித்து முழுநீளப் படமாய் ஓடிக்கொண்டிருக்கும். சங்கவியோ, சுவாதியோ கலைராணி கேரக்டரில் அம்மாவாக ஒப்பாரி வைத்து அழுவார்கள். ஒரே ட்விஸ்ட்டாய் க்ளைமாக்ஸில், கருப்புக் கம்பளி போர்த்தி, ‘தம்பி கொஞ்சும் நில்லுப்பா... தப்பிருந்தா சொல்லுப்பா’ என்று தன்முன் பாட்டு பாடும் புது வில்லனை போட்டுத் தள்ளி சென்னையை வல்லரசாக்கி இருப்பதோடு ‘எ ஃபிலிம் பை ஷங்கர்’ டைட்டில் ஓடும்!

அஜித்: ஆல் இந்தியா பெர்மிட் லாரியில் தலப்பா கட்டி சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் ஒரு சிங் டிரைவராய் இருப்பார். ராஜஸ்தானில் செக் போஸ்ட் ஒன்றில் இவரை வழிமறிக்கும் போலீஸிடம், ‘என் வாழ்க்கையில ஒவ்வொரு கிலோ மீட்டரும், ஒவ்வொரு ஸ்டேட்டும், ஒவ்வொரு ஊரும் நானா டிரைவ் பண்ணதுடா! .****** யூ ’ என கெட்ட வார்த்தை பேசியபடி இந்த லாரி டிரைவர் ரேஸ் விட்டிருப்பார்!


கேப்டன்:
 பாகிஸ்தான் தீவிரவாதிகள் கண்ணீரோடு கதறிய வண்ணம் இருக்க எதிரே நம்ம கேப்டன் மிலிட்ரி உடையில். ‘பாகிஸ்தான்ல தீவிரவாதிகளோட எண்ணிக்கை பத்தாயிரத்து நானூத்தி பன்னிரெண்டு பேரு... அதுல தினமும் குளிக்கிறவன் நாலாயிரத்து இருபத்தி ஆறு பேரு... அதுல... ’ என நாள் முழுக்க புள்ளி விபரம் சொல்லி கதறவிட்டிருப்பார்!

No comments:

Post a Comment