கிரிக்கெட் விளையாட்டை பொறுத்த வரை, இந்தியா-பாகிஸ்தான் மட்டும்தான் பரம விரோதிகள் இல்லை. நடப்பு உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் மோதவுள்ள ஆஸ்திரேலியாவும், நியூசிலாந்தும் கூட ஒருவிதத்தில் பரம எதிரிகள்தான். பக்கத்து நாடுகளான இந்த இரு அணிகளும் எப்போதும் முறைத்து கொண்டுதான் திரியும். நியூசிலாந்துகாரர்கள் பெரியதாக எந்த சர்ச்சையிலும் சிக்கியது இல்லை. உண்மையிலேயே ஜென்டிலாக கிரிக்கெட் விளையாடுபவர்கள். ஆனால் ஆஸ்திரேலியர்கள் அப்படியில்லை. வெற்றிக்காக எந்த எல்லையை நோக்கியும் செல்வார்கள். இதற்கு ஒரு சம்பவத்தை உதாரணமாக சொல்ல முடியும் .
கடந்த 1981 ஆம் ஆண்டு, இந்த இரு அணிகளுக்கும் இடையே உலக சீரிஸ் தொடர் நடைபெற்றது. 3 போட்டிகள் கொண்ட தொடரில் முதல் இரு ஆட்டங்களில் இரு அணிகளும் ஒன்றில் வெற்றி பெற்றிருந்தன. மூன்றாவது போட்டி இதே மெல்பர்ன் மைதானத்தில்தான் நடைபெற்றது. ஆஸ்திரேலிய அணி 236 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. இலக்கை விரட்டி சென்ற நியூசிலாந்து அணிக்கு கடைசி பந்தில் 6 ரன்கள் தேவைப்பட்டது. சிக்ஸ் அடித்தால் போட்டி 'டை' ஆகிவிடும் என்ற நிலை. கடைசி பந்தை நியூசிலாந்து வீரர் மெக்கன்னே எதிர்கொண்டார்.
அப்போது ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக இருந்த கிரேக் சேப்பல், பந்துவீசிய தனது சகோதரர் டிரிவர் சேப்பலிடம் பந்தை அண்டர்ஆர்மாக வீச அறிவுரை கூறினார். அந்த காலக்கட்டத்தில் அண்டர்ஆர்ம் பந்துவீச்சும் நடைமுறையில் இருந்தது. கடைசி பந்து அண்டர்ஆர்மில் உருட்டி வீசப்பட்டதால், மெக்கன்னேவால் ரன் எடுக்க முடியவில்லை.இதன் காரணமாக இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. கிரேக் சேப்பலின் இந்த முடிவுக்கு உலகம் முழுக்க கடும் கண்டனம் எழுந்தது.
அப்போதைய நியூசிலாந்து பிரதமர் ராபர்ட் மால்டூன் இதனை வெட்கக்கேடான செயல் என்றார். அப்படி ஏமாற்றி ஜெயித்த கிரேக் சேப்பல்தான் இந்திய அணிக்கு பயிற்சியாளராக இருந்து பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தினார். இப்படிதான் ஆஸ்திரேலியாவும், நியூசிலாந்தும் பரம விரோதிகளாக மாறின.

No comments:
Post a Comment