சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

24 Mar 2015

ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 15 ஆண்டுகளாக தொடரை இழக்காத ஒரே அணி எது?

ரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக வெற்றி பெற்ற அணிகள் வரிசையில், இந்திய அணிக்கு மூன்றாவது இடம் கிடைத்துள்ளது.டெஸ்ட் அங்கீகாரம் பெற்ற 10 அணிகளில் ஒருநாள் போட்டிகளில் அதிக வெற்றி பெற்ற அணிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 

இந்த பட்டியலில் ஆஸ்திரேலிய அணி முதலிடத்தில் உள்ளது. இதுவரை 854 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ஆஸ்திரேலிய அணி, 527 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதில் 1987,99, 2003,07ஆம் ஆண்டுகளில் உலகக் கோப்பையையும் வென்றுள்ளது.

பாகிஸ்தான் அணி, பட்டியலில் 2வது இடத்தை பிடிக்கிறது. 1973ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டி வரை, பாகிஸ்தான் அணி 837 போட்டிகளில் விளையாடி 444 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதில் 1992ஆம் ஆண்டு உலகக் கோப்பையை கைப்பற்றியது. ஒருநாள் போட்டிகளை பொறுத்த வரை இந்த அணியை கணிக்கவே முடியாது. பலமான ஆஸ்திரேலியாவை எளிதாக வீழ்த்தும் அடுத்த நாள் ஜிம்பாப்வே அணியிடம் பரிதாபமாக தோற்கும்.
இந்திய அணி, 1974ம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை 879 போட்களில் விளையாடி 444 வெற்றிகளை ருசித்துள்ளது. ஆனால் பாகிஸ்தானை விட அதிக போட்டிகளில் விளையாடியுள்ளதால் பட்டியலில் 3வது இடமே கிடைத்துள்ளது. 1975ஆம் ஆண்டு, உலகக் கோப்பை தொடருக்கு ஒரு ஆண்டுக்கு முன்னதாகத்தான் இந்திய அணி, ஒருநாள் போட்டியில் விளையாடத் தொடங்கியது. 1983 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற பின்னர்,  இந்தியாவில் ஒருநாள் கிரிக்கெட்டுக்கு அமோக வரவேற்பு கிடைத்தது. தற்போது ஐ.சி.சி.க்கு வரும் வருவாயில் 90 சதவீதம் இந்திய அணியை வைத்தே வருகிறது. ஆண்டுக்கு சராசரியாக 30 முதல் 35 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி விளையாடுகிறது. 

இரண்டு முறை உலகச் சாம்பியனான மேற்கிந்திய தீவுகள் அணி, 731 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 373 வெற்றிகளை பெற்றுள்ளது. கடந்த 10 வருடங்களில் மேற்கிந்திய தீவுகள் அணி கடும் சரிவை சந்தித்துள்ளது. தற்போது உலகத் தரவரிசையில் இந்த அணி 8வது இடத்தில் உள்ளது. ஒரு காலத்தில் ஒருநாள் போட்டிகளில் மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்துவது என்பது கடலை வற்ற வைப்பதற்கு சமமாக பார்க்கப்பட்டது. 1970ஆம் ஆண்டு முதல் 1985ஆம் ஆண்டு வரை 15 ஆண்டுகாலம், ஒரு தொடரை கூட  மேற்கிந்திய தீவுகள் அணி இழந்தது இல்லை.
இலங்கை அணி 1996ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் கோப்பையை வென்றது. தொடர்ந்து 2007 மற்றும் 2011ஆம் ஆண்டுகளில் உலகக் கோப்பை இறுதி ஆட்டத்துக்கும் முன்னேறியது. இதுவரை 752 போட்டிகளில் விளையாடியுள்ள இலங்கை அணி, 356 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 

இனபாகுபாடு காரணமாக தென்ஆப்ரிக்க அணிக்கு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது. 1991ஆம் ஆண்டு இந்த தடை நீக்கப்பட்ட பிறகு தோழமை நாடான இந்தியாவுக்குதான் தென்ஆப்ரிக்க அணி முதல் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இந்தியாவில் கெப்லர் வெஸ்சல்ஸ் தலைமையில் அந்த அணி, 3 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றது. 1992,99,2007ஆம் ஆண்டுகளில் அரையிறுதிக்கு முன்னேறியது. தென்ஆப்ரிக்க அணி 535 போட்டிகளில் விளையாடி 331 வெற்றிகளை ருசித்துள்ளது. 

கிரிக்கெட்டை கண்டுபிடித்த இங்கிலாந்து அணி 1971ஆம் ஆண்டு முதல் மிக நீண்டகாலமாக ஒரு நாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்த அணி மூன்றுமுறை உலகக் கோப்பை இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியும் கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்தது. இங்கிலாந்து அணி 644 போட்டிகளில் விளையாடி 309 வெற்றிகளையே பெற்றுள்ளது. 

நியூசிலாந்து அணி 680 போட்டிகளில் விளையாடி, 298 வெற்றிகளை பதிவு செய்துள்ளது. தொடர்ச்சியாக 4 முறை உலகக் கோப்பை அரையிறுதி  ஆட்டத்துக்கு முன்னேறியும் ஒரு முறை கூட இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றதில்லை. 


1983 ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டி முதல் ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று வரும் ஜிம்பாப்வே அணி, 443 போட்டிகளில் விளையாடி 114 வெற்றிகளேயே பெற்றுள்ளது. ஆன்டி ஃப்ளவர், கிரான்ட் ஃபிளவர் என புகழ்பெற்ற வீரர்கள் இந்த நாட்டில் இருந்து உருவானாலும்,  ஜிம்பாப்வே அணியின் ஒரு நாள் கிரிக்கெட் ரசிக்கும் வகையில் முன்னேற்றம் காணவில்லை.

இந்த பட்டியலில் வங்கதேச அணி 10வது இடத்தை பிடிக்கிறது. இந்த அணி,  300 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடி 88 வெற்றிகளையே பெற்றுள்ளது.

No comments:

Post a Comment