சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

23 Mar 2015

இந்தியா- ஆஸ்திரேலியா மோதல்; பொய்யான மோடியின் கணிப்பு

லகக் கோப்பை இறுதி ஆட்டத்தின் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மோதும் என்ற பிரதமர் நரேந்திர மோடி கணிப்பு பொய்யாகிப் போனது.

பிரதமர் நரேந்திர மோடி தீவிர கிரிக்கெட் ரசிகர். இதனால்தான் ஒவ்வொரு போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற அடுத்த நிமிடமே மோடியிடம் இருந்து வீரர்களுக்கு வாழ்த்து செய்தி பறந்து போகும்.. உலகக் கோப்பை போட்டிக்கு முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
அப்போது மெல்பர்ன் மைதானத்தில் கிரிக்கெட் நட்சத்திரங்கள்,ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபாட், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் உலகக் கோப்பையுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.அந்த நிகழ்வின் போது, உலகக் கோப்பைத் தொடரின் இறுதி ஆட்டத்துக்கு எந்த எந்த முன்னேறும் என்று கருதுகிறீர்கள் என மோடியிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு பதிலளித்த நரேந்திர மோடி,இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் இறுதிப் போட்டியின் விளையாடும் என்றார்.
ஆனால் இப்போது அரையிறுதியிலே« இந்த இரு அணிகளும் மோதும் நிலை ஏற்பட்டு விட்டது. இதனால் மோடியின் கணிப்பு பொய்யாகிப் போனது. எனினும் இரு அணிகளும் அரையிறுதி வரை வந்து விட்டதால் மோடியின் கணிப்பு பாதி உண்மையாகியுள்ளது.


No comments:

Post a Comment