சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

9 Mar 2015

முடங்கி வரும் மூங்கில் கூடை விற்பனை!

ழைகளின் மரம், பச்சை தங்கம் என்று அழைக்கப்படும் மூங்கிலின் தேவை நாளுக்கு நாள் அதிகரிக்கவே செய்கிறது. மூங்கில் சார்ந்த பொருள்கள் ஏற்றுமதியில் இந்தியா இரண்டாம் இடம் வகிக்கின்றது.

மூங்கிலில் பலதரப்பட்ட கூடைகள் முணையப்படுகிறது. தமிழ்நாட்டில் பல இடங்களில் இத்தொழில் நடைபெற்றாலும், தஞ்சை, திருச்சி போன்ற பகுதிகளில் குறிப்பிட்ட அளவில் நடைபெறுகிறது. இத்தொழிலுக்கு நல்ல வரவேற்பும் இருந்து வருகிறது.
இந்நிலையில், நாகரீக சுழற்சிக்கு ஏற்ப நகர்புறம் மற்றும் கிராமங்களில் வீட்டு உபயோகத்துக்கும், விவசாய தொழிலுக்கும் பிளாஸ்டிக் கூடைகள் சமீப காலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. பிளாஸ்டிக் கூடைகள், மூங்கில் கூடைகளை விட விலை குறைவாக விற்பனை செய்யப்படுகிறது. இதனால், மலிவு விலையில் கிடைக்கும் பிளாஸ்டிக் கூடைகளின் விற்பனை அதிகமாகி உள்ளது. இதனால், மூங்கில் கூடை தயாரிப்பாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி வருகிறது.

இதுகுறித்து, திருச்சியை சேர்ந்த கூடை தயாரிக்கும் குருசாமி கூறுகையில், "இந்த தொழிலை 20 வருடமாக செய்து வருகிறேன். மூங்கில் தட்டு, முறம், கூடை, பெட்டு, ஜாடு, காய்கறிக் கூடை, தட்டுக்கூடை, பொட்டி கூடை, விசிறி போன்றவற்றை தயாரித்து விற்பனை செய்கிறோம். சேலம், எடப்பாடி போன்ற இடங்களில் மூங்கில் கூடைகளை வாங்கி விற்பனை செய்கிறோம். ஒரு கூடை ரூ.150 முதல் ரூ.250 வரை விற்பனையாகும். சிறிய கூடைகள் ரூ. 60லிருந்து 130 வரை போகும். பனை ஓலை மூலம் செய்யப்படும் ஓலைப்பெட்டிகள் சிவராத்திரி போன்ற பூஜை காலங்களில் நல்ல விலை போகும். மூங்கில் சல்லடைகள் திருச்சி, திருவானைக்காவலில் இருந்தும், சாணித்தட்டு ஜெயங்கொண்டந்திலிருந்தும் வாங்கி விற்கப்படுகிறது. கோடை காலத்தில் மூங்கில் விசிறியும் செய்து விற்பனை செய்வோம்.
இருந்தாலும், தற்போது பிளாஸ்டிக் கூடைகள், தட்டுக்கள், அலங்கார ஜார்கள் என அனைத்தும் பிளாஸ்டிக் மயமாகிவிட்டதால், மூங்கில் கூடைகளின் மவுசு குறைந்து வியாபாரம் டல்லாக உள்ளது. பிளாஸ்டிக் பொருட்களின் ஆயுட்காலம் குறைவு. ஆனால், மூங்கில் கூடை எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அப்படியே இருக்கும். பிளாஸ்டிக் பொருட்களின் வரத்து அதிகரிப்பு மற்றும் கூடை பயன்படுத்துவோரின்  எண்ணிக்கை குறைந்து உள்ளதாலும், தொழில் நலிவடைந்துள்ளது. இருப்பினும், தெரிந்த தொழில் என்பதால் இதை செய்து வருகிறோம்" என்றார்.

அதிக உழைப்பும், குறைந்த வருவாயும் கொண்ட இக்கலையானது, நெகிழிப் பொருட்களின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறி வருகிறது. சுற்றுப்புறத்தை பாதுகாக்கும் வகையில் மூங்கில் பொருட்களின் பயன்பாடு அதிகரித்தால், தொழிலும் வளரும், சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும்.


1 comment: