சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

21 Mar 2015

பேசும் வார்த்தைகள் பணமாகிறது..அந்த பணம் என்ன செய்கிறது...?

லகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் வர்ணனையாளராக பணியாற்றி வருகின்றனர். ஸ்டீவ் வாக், டென்னிஸ் லில்லி, மெக்ரத், ஷேன் வார்ன் என்று கிரிக்கெட் உலகின் சாதனை மன்னர்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் டி.வி நிறுவனங்கள் காசை அள்ளி வழங்குகின்றன. ஆனால் இந்த பணத்தை அந்த வீரர்கள் என்ன செய்கிறார்கள் என்று கேட்டால் ஆச்சரியப்பட்டுப் போவீர்கள்!
இந்த பணம் மொத்தமும் அவர்கள் நடத்தும் அறக்கட்டளைகளுக்குதான் செல்கின்றன. அதன் மூலம் உலகம் முழுக்க ஏழை குழந்தைகள் படிக்கின்றனர், மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்கள் சிகிச்சை பெறுகின்றனர், பசியால் துடிக்கும் குழந்தைகளின் வயிறு பசியாறுகிறது. உன்னதமான சேவையில் ஈடுபட்டு வரும் இந்த வீரர்களில், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மெக்ரத்தின் கதை சற்று சோகமானது.


மெக்ரத்தின் காதலி ஜேனுக்கு மார்பக புற்றுநோய் இருப்பது திருமணத்திற்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டது. ஆனாலும் அவரேயே மணந்து காதலில் ஜெயித்த மெக்ரத்தால் தனது மனைவியை காலனிடம் இருந்து காப்பாற்ற முடியவில்லை. கடந்த 2008 ஆம் ஆண்டு, தனது 31வது வயதில் ஜேன் மரணமடைந்தார். மனைவியின் மரணத்திற்கு பின் சிறிது காலம் உடைந்து போய் இருந்த மெக்ரத், பிறகு அதில் இருந்து மீண்டுதான் க்ளென் மெக்ரத் அறக்கட்டளையை நிறுவினார். 

உலகம் முழுக்க பெண்களிடம் மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதுதான் இந்த அறக்கட்டளையின் முக்கிய பணி. தற்போது க்ளென் மெக்ரத் அறக்கட்டளையில் ஆயிரத்திற்கு மேற்பட்ட நர்சுகளும், மருத்துவர்களும் பணியாற்றி வருகின்றனர். 

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக் நடத்தி வரும் அறக்கட்டளை மூலமாக, உலகம் முழுக்க அரியவகை நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மற்றும் அனாதை குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 40 கோடி ரூபாய்க்கு மேல் ஏழை குழந்தைகளின் மருத்துவச் செலவுக்காக ஸ்டீவ் வாக் அறக்கட்டளை செலவழித்துள்ளது
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் டென்னிஸ் லில்லி, மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர் வீராங்கனைகளுக்கு அறக்கட்டளை நிறுவியுள்ளார். அதன் மூலம் பொருளாதா ரீதியாக அவர்களுக்கு உதவி வருகிறார். அறக்கட்டளை நிறுவி சேவை புரியும் வீரர்கள் வரிசையில் கடைசியாக இணைந்தவர் ஆஸ்திரேலிய முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் ஷேன் வார்னே. இவரது அறக்கட்டளை மோசமான நோயால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு உதவி செய்து வருகிறது. 


இந்திய கிரிக்கெட்டர்களுடன் ஒப்பிடும் போது ஆஸ்திரேலிய கிரிக்கெட்டர்களுக்கு பெரிய அளவில் வருமானம் கிடையாது. ஆனால் அவர்களது மனம் பெரியது என்றே தோன்றுகிறது. கிரிக்கெட் மைதானங்களில் அவர்கள் பேசும் வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. ஆனால் அவர்களின் அறச்செயல்களுக்கு மதிப்பே கிடையாது. இவர்கள்தானே கிரிக்கெட்டின் நிஜ தூதர்கள்! 

No comments:

Post a Comment