சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

25 Mar 2015

ஆடம்பரம்... வாழ்க்கையை தொலைக்கும் மாணவிகள், குடும்ப பெண்கள்!

ன்று தனிமனித ஒழுக்கம் சீர்குலைந்து வருவதற்கு பல சம்பவங்களை சுட்டிக்காட்டலாம். எப்படியும் வாழலாம் என்ற சிந்தனை இன்றைய மக்களிடம் தலைதூக்கி உள்ளது. இதுவே மக்களை தவறான பாதைக்கு அழைத்துச் சென்று கொண்டு இருக்கிறது.

கோவை அவினாசி சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் மார்ச் முதல் வாரம் காவல்துறையினர் நடத்திய சோதனையில் விபச்சார அழகிகளும், புரோக்கர்களும் பிடிப்பட்டனர். இதில் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைப்பார்க்கும் பெண் என்ஜினீயரும் சிக்கினார். அவரிடம் விசாரணை நடத்தியபோது 'தற்போது வாங்கும் சம்பளம் எனது ஆடம்பர வாழ்க்கைக்கு போதுமானதாக இல்லை. இதனால் இந்த தவறான தொழிலுக்கு வந்து உங்களிடம் மாட்டிக்கொண்டேன். இனிமேல் இந்த பக்கம் தலைவைத்து திரும்பிப் பார்க்க மாட்டேன்' என்று கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.
 

அடுத்து சிக்கிய பெண் பி.டெக் மாணவி. மதுரையை சேர்ந்த இவர், கோவையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வருகிறார். அப்போது, அதே கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவனை காதலித்துள்ளார். இருவரும் சந்தோஷமாக இருந்தப்போது மாணவிக்கு தெரியாமல் காதலன் அதை செல்போனில் வீடியோ எடுத்துள்ளான். இந்த வீடியோவை காண்பித்து மாணவியிடம் பணம் கேட்டு காதலன் மிரட்ட, வேறு வழியின்றி விபச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார் அந்த மாணவி. இதில் கிடைக்கும் பணத்தை காதலனுக்கு கொடுப்பதாக மாணவி சொன்னதும், காவல்துறையினருக்கே தலை சுற்றி இருக்கிறது. இந்தளவுக்கு தரம் தாழ்ந்து போயிருக்கும் இவர்கள் வெளியுலகிற்கு தெரிந்து விட்டார்கள். ஆனால் ஆடம்பர வாழ்க்கைக்காக  பல இடங்களில் குடும்ப பெண்கள், மாணவிகள் விபச்சாரத்தில் ஈடுபட்டு வருவது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு தாம்பரம் பகுதியில் நடந்த சம்பவம் இது: கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனைவி தாய் வீட்டுக்கு செல்கிறார். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி கணவன், விபச்சார அழகியை வீட்டுக்கு அழைத்து வந்து சந்தோஷத்தில் ஈடுபட்டு இருக்கிறார். நள்ளிரவில் வீட்டுக்குத் திரும்பிய மனைவி கதவை தட்டிய போது, தேள்கொட்டிய திருடனாக கணவனின் அந்தரங்க லீலை வெளிச்சத்துக்கு தெரியவந்தது. இதில் இன்னொரு காமெடி என்னவென்றால் விபச்சார அழகிக்கு பணம் கொடுப்பதில் ஏற்பட்ட பிரச்னைக்குக் காவல்துறையினர் தலையீட்டு தீர்வு கண்டுள்ளனர். இப்படி தமிழகம் முழுவதும் விபச்சார தடுப்பு பிரிவு காவல்துறையினரின் அதிரடி வேட்டையில் சிக்குபவர்களின் கதை ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமாக இருக்கின்றன.

தென்மாவட்டத்தை சேர்ந்த விபச்சார அழகி ஒருவரின் கதை இது; 
கல்லூரியில் காதலித்தவனுடன் சென்னைக்கு வந்துள்ளார் இவர். திருமணமும் செய்து இல்லற வாழ்க்கையை இனிதே தொடங்கி இருக்கிறார்கள். உயிருக்கு உயிராய் காதலித்த காதலன், திருமணமான சில மாதங்களிலேயே கம்பியை நீட்டி விட்டார். தாய் வீட்டுக்கு செல்ல முடியாமல் தவித்த அவர், விபச்சார கும்பலிடம் சிக்கி இந்த தொழிலுக்குள் வந்து இருக்கிறார். இப்போது பெற்றோர் வீட்டிலிருந்து பார்ட் டைமாக இந்த தொழிலில் குடும்பத்தினருக்குத் தெரியாமல் ஈடுபட்டு வருதாக அவர் சொல்கிறார்.
 
முன்பெல்லாம் விபச்சாரத்தில் ஈடுபடுபவர்களை விபச்சார தடுப்பு பிரிவு காவல்துறையினர் எளிதில் கண்டறிந்து விடுவார்கள். ஆனால், இப்போது விபச்சாரம் நடப்பதை கூட ஹைடெக்காக நடத்த தொடங்கி விட்டனர் இந்த கும்பல். பங்களாக்களில் விபச்சாரம் நடந்தால் அந்த தகவல் தங்களுக்கு எளிதில் கிடைத்துவிடும் என்கிறார்கள் காவல்துறையினர். ஆனால் இப்போது எல்லாம் பாலியல் தொழில்களின் புகலிடமாக சில மசாஜ் சென்டர்கள் மாறி இருக்கின்றன. இதையும் காவல்துறையினர் மோப்பம் பிடித்து விட்டனர். 

காவல்துறையினரின் கண்காணிப்பு வளையத்துக்குள் இத்தகைய மசாஜ் சென்டர்கள் இருப்பதால் இங்கேயும் அந்த தொழில் அவ்வளவாக நடப்பதில்லை. இதனால் வீட்டுக்கே பெண்களை அனுப்பும் யுக்தியை விபச்சார புரோக்கர்கள் கையாளுகின்றனர். இது இந்த கும்பல் மீது நடவடிக்கை எடுக்க முடியாமல் காவல்துறையினர் திணறுகின்றனர்.  இன்னொரு புறம் பாலியல் தொழில் நடப்பது காவல்துறையினரில் சிலருக்கு தெரிந்தும் மாதந்தோறும் மாமூல் வருவதால் அவர்கள் எதையும் கண்டுகொள்ளாமலும் இருக்கிறார்கள். 

வறுமையில் வாடும் குடும்ப பெண்களை குறி வைத்து வேலை வாங்கித் தருவதாக கூறி விபச்சார புதைக்குழிக்குள் தள்ளிவிடுவதுண்டு. ஒரு முறை தவறு செய்துவிட்டு அதிலிருந்து மீள முடியாதவர்களும் இந்த கும்பலில் இருக்கிறார்கள். விலைமாதுக்களிடம் பாதுகாப்பற்ற உடலுறவால் எய்ட்ஸ் உள்ளிட்ட பாலின நோய்கள் அதிகம் பரவுவதாக கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பெரும்பாலும் விபச்சார வழக்குகளில் சிக்கும் பெண்கள் குடும்ப வறுமையின் காரணமாகவே இந்த தொழிலுக்கு வந்ததாக காவல்துறையினரிடமும், நீதிமன்றங்களிலும் வாக்குமூலம் கொடுக்கிறார்கள். 


திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாததைப் போல தனிமனித ஒழுக்கத்தை கடைப்பிடிக்கும் போது மட்டுமே இதை தவிர்க்க முடியும். அதோடு ஒருத்தனுக்கு ஒருத்தி என்ற பண்பாட்டையும் மறக்கக் கூடாது. 
 


No comments:

Post a Comment