உலகக் கோப்பை போட்டியில் 237 ரன்கள் எடுத்து புதிய உலக சாதனை படைத்துள்ள நியூசிலாந்து வீரர் மார்ட்டின் கப்திலுக்கு இடது காலில் 3 விரல்கள் கிடையாது. விபத்து ஒன்றில் சிக்கிய அவர் 3 விரல்களை இழக்க நேரிட்டது.
உலகக் கோப்பைத் தொடரில் நேற்று நியூசிலாந்து அணியும் மேற்கிந்திய தீவுகள் அணி மோதின. இந்த போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கிய நியூசிலாந்தின் மார்ட்டின் கப்தில் 237 ரன்களை அடித்து உலக சாதனை படைத்தார். இந்த தொடரில் இதற்கு முன்னதாக ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணியின் கெயில் 215 ரன்களை அடித்து புதிய சாதனை படைத்திருந்தார். அதனை இந்த உலகக் கோப்பை போட்டியிலேயே முறியடித்த கப்திலுக்கு இடது காலில் 3 விரல்கள் கிடையாது.
கப்திலுக்கு 13 வயதாக இருக்கும் போது பளுதுக்கும் இயந்திரம் ஒன்றில் அவரது கால்கள் சிக்கி நசுங்கியது. இதில் கால்களில் உள்ள 3 விரல்களை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். எனினும் மனதை தளரவிடாத கப்தில் எதிலாவது சாதிக்க வேண்டுமென்பதை குறிக்கோளாக கொண்டிருந்தார்.கடுமையான தீவிர பயிற்சிக்கு பின் சிறந்த கிரிக்கெட் வீரராக உருவெடுத்து நியூசிலாந்து அணியில் இடம் பிடித்தார். இப்போது உலகக் கோப்பை போட்டியில் 237 ரன்கள் அடித்து உலக சாதனையை ஏற்படுத்தியுள்ளார்.
தற்போது 28 வயதான கப்திலுக்கு திருணமம் முடிந்துவிட்டது. அவரது மனைவி டி.வி. தொகுப்பாளராக பணியாற்றுகிறார். திறமைமிகுந்த மார்ட்டின் கப்திலுக்கு இன்னும் ஐ.பி.எல். தொடரில் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. அவரை ஏலம் எடுக்க எந்த அணியும் முன்வராததே இதற்கு காரணம்.. உலகக் கோப்பை சாதனை விரைவில் மார்ட்டின் கப்திலுக்கு ஐ.பி.எல். கதவை திறந்து விடும் என்று நம்புவோம்.

No comments:
Post a Comment