மெய்ன் ஹூன் ரஜினிகாந்த் பட வழக்கில் சினிமா பைனான்ஸ்சியர் முகுல்சந்த் போத்ரா தாக்கல் செய்துள்ள மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்றும், தனது பெயரை பயன்படுத்தி கஸ்தூரி ராஜா பணம் பெற்றதாக கூறப்படும் புகார் பற்றி தெரியாது என்றும் நடிகர் ரஜினிகாந்த் புதிய மனு ஒன்றை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.
‘மெய்ன் ஹூன் ரஜினிகாந்த்’ என்ற (நான்தான் ரஜினிகாந்த்) பெயரில் இந்தி படத்தை மும்பையை சேர்ந்த திரைப்பட தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில், ரஜினிகாந்த் என்ற கதாபாத்திரம் தரம் தாழ்ந்து சித்தரிக்கப்பட்டுள்ளதாக கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர் ரஜினிகாந்த் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ‘மே ஹூன் ரஜினிகாந்த்’ என்ற படத்தை வெளியிட நிரந்தர தடை விதித்து கடந்த மாதம் உத்தரவிட்டது.
இந்த நிலையில், சினிமா பைனான்ஸ்சியர் முகுல்சந்த் போத்ரா, வழக்கில் தன்னையும் ஒரு மனு தாரராக சேர்த்து விசாரிக்கக் கோரி மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், ‘இயக்குனர் கஸ்தூரி ராஜா, என்னிடம் கடன் கேட்டார். நான் தர மறுத்து விட்டேன். அப்போது, ‘நான் பணம் தரவில்லை என்றால், என் சம்மந்தி ரஜினிகாந்த் தருவார் என்று கைப்பட கடிதம் எழுதிக் கொடுத்து, கடனை வாங்கினார். ரஜினிகாந்தின் தீவிர ரசிகன் என்பதால், நானும் கடன் கொடுத்தேன். ஆனால் சொன்னப்படி கடன் தொகை முழுவதையும் கஸ்தூரிராஜா கொடுக்கவில்லை.
இதுகுறித்து செய்தி ஊடகங்களிலும் வெளியானது. ஆனால், இதுதொடர்பாக ரஜினிகாந்த் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஆனால், வடஇந்தியாவில் எடுக்கப்படும் படத்தினால், தன் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுவதாக கூறி ரஜினிகாந்த் வழக்கு தொடர்ந்து தடை பெற்றுள்ளார். தன் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் சம்மந்தி விவகாரத்தில் அவர் தலையிடாமல் உள்ளார். எனவே, இந்த வழக்கில் என்னையும் ஒரு மனுதாரராக சேர்க்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் ரஜினிகாந்த் இன்று மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், சினிமா பைனான்ஸ்சியர் முகுல்சந்த் போத்ரா இந்த வழக்கில் தாக்கல் செய்துள்ள மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்றும், தனது பெயரை பயன்படுத்தி கஸ்தூரி ராஜா பணம் பெற்றதாக கூறப்படும் புகார் பற்றி தெரியாது என்றும் கூறியுள்ளார்.

No comments:
Post a Comment