சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

11 Mar 2015

கிரிக்கெட் செய்த கைமாறு: வங்கதேச வீரர் மீது பாலியல் வழக்கு வாபஸ் !

ங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்திய வங்கதேச வீரர் ரூபெல் ஹொசைனின் சாதனையை தொடர்ந்து, அவர் மீது கொடுத்த பாலியல் பலாத்கார வழக்கினை வாபஸ் பெறுவதாக அவரது முன்னாள் காதலியும் நடிகையுமான நஸ்னின் அக்தர் தெரிவித்துள்ளார்
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் மிக முக்கியமாக ஆட்டத்தில் வங்கதேச அணி, இங்கிலாந்து அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில், பந்துவீசிய பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கிய வங்கதேச பந்துவீச்சளார் ரூபெல் ஹொசைன் தொடக்கத்தில் இங்கிலாந்து வீரர்கள் இயார்ன் பெல், அடுத்து கேப்டன் மோர்கன் ஆகியோரை வீழ்த்தினார்.

தொடர்ந்து இறுதிக்கட்டத்தில் சிக்சர் அடித்து மிரட்டிய பிராட் மற்றும் ஆண்டர்சன் ஆகியோரையும் ரூபெல் ஹொசைன் அவுட் ஆக்கினார். இக்கட்டான சூழலில் சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதால் இங்கிலாந்து அணியை வீழ்த்தி வங்கதேச அணி உலகக் கோப்பை போட்டியில் முதல் முறையாக காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

கிரிக்கெட்டில் வளர்ந்து வரும் நாடானா வங்கதேசம் இந்த வெற்றியை உறசாகமாக கொண்டாடியது. நாட்டுமக்கள் அனைவருமே வங்க தேச கிரிக்கெட் வீரர்களை கொண்டாடி வருகின்றனர். வங்கதேச அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்த ரூபெல் ஹொசைனின் வாழ்க்கையிலும் இந்த வெற்றி திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, மைதானத்தில் ரூபெல் ஹொசைன் காட்டிய திறமையால் மனமகிழ்ந்த அவரது முன்னாள் காதலி நஸ்னின் அக்தர் மிகுந்த உற்சாகம் அடைந்து அவர் மீது தொடுத்துள்ள வழக்கினை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளார். 

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''ஹொசைன் செய்த சாதனையால் நான் தற்போது மிகுந்த சந்தோஷமாக உள்ளேன். அவரை  நான் மன்னித்து விட்டேன். இதனால், அவர் மீது கொடுத்திருந்த வழக்கை வாபஸ் பெறப்போகிறேன்'' என்றார்.

வங்கதேச சினிமா நடிகையான நஸ்னின் அக்தருக்கும் ரூபெல் ஹொசைனுக்கும் இடையே காதல் இருந்துவந்ததாக கூறப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதம், நஸ்னின் அளித்த புகாரில்,  ரூபெல் தன்னை காதலித்து வந்ததாகவும், திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்ததால், இருவரும் கணவன்- மனைவி போல இணைந்து வாழ்ந்ததாகவும், ஆனால், திடீரென ரூபெல் திருமணம் செய்ய மறுப்பு தெரிவிப்பதாகவும் கூறப்பட்டிருந்தது.

உலக கோப்பைக்காக தயாராகி வந்த வேளையில் இந்த புகார் காரணமாக ரூபெல் ஹொசைன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து கடந்த ஜனவரி 11 ஆம் தேதி டாக்கா நீதிமன்றம் அவரை ஜாமினில் விடுவித்தது. பின்னர் வங்கதேச அணியில் இணைந்த ரூபெல்  ஹொசைன்தான் இங்கிலாந்து அணியை வீட்டுக்கு அனுப்பி வைத்தார். வழக்கு வாபஸ் காரணமாக இனிமேல் ரூபெல்  ஹொசைனும் சந்தோஷமாக தாய்நாடு திரும்ப முடியும்.



No comments:

Post a Comment