உலகக் கோப்பை வரலாற்றில் முதல் முறையாக நாக்அவுட் ஆட்டம் ஒன்றில் தென்ஆப்ரிக்க அணி வெற்றி பெற்றுள்ளது. இதற்கு முன் அந்த அணி 5 உலகக் கோப்பை போட்டிகளில் சந்தித்த நாக்அவுட் தோல்விகளை திரும்பி பார்ப்போம்...
1992ஆம் ஆண்டு அரையிறுதியில் இங்கிலாந்து அணியை, தென்ஆப்ரிக்கா எதிர்கொண்டது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 253 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. ஒரு கட்டத்தில் 13 பந்துகளில் 22 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் தென்ஆப்ரிக்க அணி இருந்தது. அப்போது மழை குறுக்கிட்டது. டக்வெர்த் லீவிஸ் விதியின்படி, ஒரு பந்துக்கு 22 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலைக்கு தென்ஆப்ரிக்க அணி தள்ளப்பட்டது. இதனால் இந்த போட்டியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
1996 ஆம் ஆண்டு அனைத்து லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்ற தென்ஆப்ரிக்க அணி, காலிறுதியில் மேற்கிந்திய தீவுகள் அணியுடன் மோதியது. லாரா அதிரடியாக விளையாடி 111 ரன்களை எடுத்தார். மேற்கிந்திய தீவுகள் அணி 265 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. தென்ஆப்ரிக்க அணி 245 ரன்களில் சுருண்டது. இதனால் 19 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றது.
1999 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் தென்ஆப்ரிக்க அணி தோற்றவிதம் உலக கிரிக்கெட் ரசிகர்கள் கண்களில் கண்ணீரை வரவழைத்தது. முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா 213 ரன்கள் எடுத்தது. தென்ஆப்ரிக்க அணியும் தட்டுத்தடுமாறி இலக்கை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் 6 பந்துகளுக்கு 9 ரன்கள் தேவை என்ற நிலை. குளுஸ்னர் தொடர்ச்சியாக இரு பவுண்டரிகளை அடித்து விட்டார். 213 ரன்கள் எடுத்து இரு அணிகளும் சமநிலையில் இருந்தன. அடுத்த பந்தில் வெற்றிக்கு தேவையான ஒரு ரன்னை எடுக்க குளுஸ்னர் ஓடிய போது, அதனை சரியாக கவனிக்காமல் மறுமுனையில் நின்ற கடைசி விக்கெட்டான ஆலன் டொனால்ட் ரன் அவுட் ஆனார். இதனால் இந்த ஆட்டம் டையில் முடிந்தது. ஏற்கனவே நடந்த சூப்பர் சிக்ஸ் ஆட்டம் ஒன்றில் ஆஸ்திரேலிய அணி தென்ஆப்ரிக்க அணியை வீழ்த்தியிருந்தது. அதனடிப்படையில் ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்கு முன்னேறியது. தென்ஆப்ரிக்க அணி சோகத்துடன் வெளியேறியது.
2007ஆம் ஆண்டு அரையிறுதியில் ஆஸ்திரேலிய அணியிடம், தென்ஆப்ரிக்க அணி மீண்டும் படுதோல்வியை சந்தித்தது. முதலில் விளையாடிய தென்ஆப்ரிக்க அணி, 149 ரன்கள் அடித்தது. ஆஸ்திரேலிய அணி, 32 ஓவர்களில் வெற்றிக்கு தேவையான ரன்களை அடித்து முடித்து விட்டது.
2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை காலிறுதி சுற்றில் நியூசிலாந்து அணியை, தென்ஆப்ரிக்க அணி எளிதாக வீழ்த்தி விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்றார்போல், நியூசிலாந்து அணியை 211 ரன்களுக்கு சுருட்டியது. ஆனால் ஜேக்கப்ஓரம் அபாரமாக பந்து வீசியதில் தென்ஆப்ரிக்க அணி 172 ரன்களில் சுருண்டது. நியூசிலாந்து அணி 49 ரன்களில் வெற்றி பெற்றது.
2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை காலிறுதி சுற்றில் நியூசிலாந்து அணியை, தென்ஆப்ரிக்க அணி எளிதாக வீழ்த்தி விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்றார்போல், நியூசிலாந்து அணியை 211 ரன்களுக்கு சுருட்டியது. ஆனால் ஜேக்கப்ஓரம் அபாரமாக பந்து வீசியதில் தென்ஆப்ரிக்க அணி 172 ரன்களில் சுருண்டது. நியூசிலாந்து அணி 49 ரன்களில் வெற்றி பெற்றது.
கடந்த உலகக் கோப்பை போட்டிகளில் தென்ஆப்ரிக்க அணி சந்தித்த சோகங்கள் இவை.
No comments:
Post a Comment