சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

16 Mar 2015

மர்மமான பைக்... டெலிபோன் சீக்ரெட்...

க்ரி கிருஷ்ணமூர்த்தி விவகாரம் சூடுபிடித்து வருகிறது. வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை விவகாரத்தை சி.பி.சி.ஐ.டி விசாரிக்க ஆரம்பித்த பிறகு அச்சம் பலருக்கும் அதிகரித்துக்கொண்டு போகிறது.
வேளாண் துறையில் முத்துக்குமாரசாமி​யுடன் பணியாற்றிய சிலரை சந்தித்தோம். 'இந்தத் துறையின்கீழ் வேளாண்மைத் துறை, வேளாண் பொறியியல் துறை, தோட்டக்கலைத் துறை ஆகியவை உள்ளன. ஒவ்வொரு துறையிலும் உள்ள அதிகாரிகள் அந்தந்த துறைகளுக்கு உள்ளேயே மாற்றம் செய்யப்படுவார்கள். ஆனால், இந்த மூன்று துறைகளுக்கும் ஒரே செயலாளர், ஒரே இயக்குநர் மட்டுமே. மூன்று துறைகளுமே ஒரே அமைச்சரின் கீழ் வருவதால் நாங்கள் படும் அவஸ்தையைச் சொல்ல முடியாது. மேலிடத்து டார்ச்சரைத் தாங்க முடியாமல் ஒரு முத்துக்குமாரசாமி தற்கொலை செய்துகொண்டார். ஆனால், ஓராயிரம் முத்துக்குமாரசாமிகள் வேதனையோடு காலத்தைக் கழிக்கிறோம்'' என வேதனைப் பெருமூச்சு விட்டவாறு தொடர்ந்து பேசினார்கள்.
''முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டு உள்ளது. இந்தச் சூழ்நிலையில், அந்தத் துறையில் நடந்துள்ள முறைகேடுகள் பற்றி முழுமையாக விசாரணை நடத்தினால் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியே வரும். இந்தத் துறையில் பணிமூப்பின் அடிப்படையில் வழக்கமாக வரக்கூடிய பதவி உயர்வுக்குக்கூட கணிசமாக கவனித்தால் மட்டுமே உத்தரவு கிடைக்கும் என்ற நிலைமை இருந்தது.

ஒரு மாவட்டத்தில் மட்டும் பதவி உயர்வுக்காக ஒருவரை 'கவனித்துவிட்டு’ ஒன்பது பேர் ஏமாந்து உள்ளனர். எல்லா துறைகளிலும் உள்ள இணை இயக்குநர்கள், துணை இயக்குநர்கள், உதவி இயக்குநர்கள் என எல்லா பொறுப்புகளுக்குமே கொடுக்க வேண்டியதைக் கொடுத்தால் மட்டுமே பதவி உயர்வு என்பது எழுதப்படாத சட்டமாகிவிட்டது. அதனால், முத்துக்குமாரசாமி மரணத்தை விசாரிக்கும் போலீஸார், கடந்த செப்டம்பர் மாதம் முதல் நடந்திருக்கும் முறைகேடுகளை ஆய்வுசெய்ய வேண்டும். அப்போதுதான் இந்த வழக்கின் பின்னணி பற்றிய முழு விவரமும் தெரியவரும்.
அரசுத் துறைகளில் நிர்வாக ரீதியிலான விவகாரங்கள் முழுவதும் அந்தந்தத் துறையின் செயலாளர் மற்றும் இயக்குநரிடம் மட்டுமே இருக்க வேண்டும். அப்படி இருந்திருந்தால் பணி நியமனம் போன்ற விவகாரங்களில் அமைச்சர்கள் குறுக்கீடு இருந்திருக்காது. முத்துக்குமாரசாமி போன்ற நேர்மையான அதிகாரிகள் தற்கொலைக்குப் போக மாட்டார்கள்' என்று வேதனையோடு சொன்னார்கள்.
தொடங்கியது சி.பி.சி.ஐ.டி விசாரணை!
எஸ்.பி அன்பு தலைமையிலான டீம் நெல்லைக்கு வந்து முத்துக்குமாரசாமி தற்கொலை செய்துகொண்ட இடத்தை ஆய்வு செய்தது. பின்னர், முத்துக்குமாரசாமி பணியாற்றிய அலுவலகத்துக்குச் சென்று அங்கு அவருடன் பணியாற்றியவர்கள் சிலரிடம் இந்தச் சம்பவத்துக்கு முன்பு அவரது மனநிலை எப்படி இருந்தது? தனக்கு டார்ச்சர் கொடுக்கப்பட்டதாக ஏதாவது சொன்னாரா? உயர் அதிகாரிகள் யார் யாரெல்லாம் தொடர்பு கொண்டார்கள்? என்ற கோணங்களில் விசாரணை நடத்தினர். முத்துக்குமாரசாமியின் வீட்டுக்குச் சென்று அந்தக் குடும்பத்தினரிடமும், நெருங்கிய உறவினர்களிடமும் விசாரணை நடத்தினர்.
'விசாரணையில் உள்ளூர் ஆளும் கட்சிப் பிரமுகர்கள் சிலர் மூலமாகவும் அமைச்சர் அலுவலகத்தில் இருந்து டார்ச்சர் கொடுக்கப்பட்டது தொடர்பான தகவல் கிடைத்து இருக்கிறதாம். அதனால் இந்த வழக்கில் விரைவில் மேலும் சிலரது பெயர்கள் சேர்க்கப்பட்டு கைது படலமும் நடக்கலாம்' என்கிறது, சி.பி.சி.ஐ.டி போலீஸ் வட்டாரம்.
நெருக்கடியில் குடும்பம்!
முத்துக்குமாரசாமியின் குடும்பத்தினர் மற்றவர்களிடம் மிகுந்த அச்சத்துடனே பேசுகிறார்கள். பெரும்பீதியில் உள்ள அந்தக் குடும்பத்தினருக்குப் போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்து வருகிறது. குடும்பப் பிரச்னை காரணமாக மனம் உடைந்து தற்கொலை செய்துகொண்டார் என்றுதான் வழக்கை ஜோடிக்க போலீஸ் ரெடி ஆனது. ஆனால், முதலில் ஜூ.வியின் செய்தி, பின்னர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் தலையீடு என பிரச்னை போனவுடன் வேறு வழியில்லாமல் போலீஸ் தரப்பு மௌனமானது.
முத்துக்குமாரசாமி மென்மையான சுபாவம் கொண்டவர் என்றபோதிலும் அவர் தற்கொலை செய்யும் அளவுக்கு கோழை அல்ல என்கிறார்கள் அவருடன் பணியாற்றியவர்கள். அத்துடன், 7 தற்காலிக ஓட்டுநர்களைத் தேர்வு செய்ததில் அவர் நேர்மையாக நடந்துகொண்டார். உள்ளூர் அரசியல் பிரமுகர்கள் சிலருக்கு இதில் வருத்தமாம். அவர்கள், வேலை வாங்கித் தருகிறோம் என்று சொல்லி சிலரிடம் இருந்து தலா ரூ.3 லட்சங்களை வாங்கிவிட்டார்களாம். ஆனால், அவர்கள் கொடுத்த லிஸ்டையும் முத்துக்குமாரசாமி ஏற்றுக்கொள்ளாததால் அவரிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்ட விவரங்களும் சி.பி.சி.ஐ.டி விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. அந்தப் பிரமுகர்கள் ஆளும் கட்சியினர். அவர்களிடம் விசாரணை நடத்த
சி.பி.சி.ஐ.டி போலீஸார் முடிவு செய்துள்ளனர். வீட்டில் யாரிடமும் சொல்லாமல், தனது பி.எஃப் கணக்கில் இருந்து ஆறரை லட்சம் ரூபாயை வாங்கியிருக்கிறார் முத்துக்குமாரசாமி. அந்தப் பணம் சேரன்மாதேவியில் உள்ள ஒரு வங்கிக் கணக்கில் உள்ளதை போலீஸ் கண்டுபிடித்திருக்கிறது.
' 'அந்தப் பணத்தை மட்டும்தான் என்னால் ஏற்பாடு செய்யமுடிந்தது. எனவே, இதை உங்களிடம் கொடுத்துவிடுகிறேன். என்னை டார்ச்சர் செய்யாதீர்கள்’ என்று சாவதற்கு முன்பு மிரட்டல் பேர்வழிகளிடம்  கெஞ்சியிருக்கிறார் முத்துக்குமாரசாமி. ஆனால், அவர்கள் சம்மதிக்கவில்லையாம். அதனால்தான் பி.எஃப்  பணம் அப்படியே முத்துக்குமாரசாமியின் வங்கிக்கணக்கில் இருந்திருக்கிறது' என்று விவசாயத் துறை அதிகாரி ஒருவர் சொல்கிறார்.
கண்டுபிடிக்கப்படாத பைக்!
''வீட்டில் இருந்து முத்துக்குமாரசாமி,  ஹீரோ ஹோண்டா சி.டி 100 பைக்கில் (டி.என்.67 ஒய் 7011) போயிருக்கிறார். அவர் உயிரிழந்த இடத்தில் இருந்து பைக் காணாமல் போய்விட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் நடந்து மூன்று வாரங்கள் ஆகியும் இன்னும் அந்த பைக்கை போலீஸார் கண்டுபிடிக்கவில்லை. கடைசியாக யார் போன் செய்தது என்பதையும் இன்னமும் சொல்லவில்லை. முத்துக்குமாரசாமி தற்கொலைக்குக் காரணமான யாரையும் இதுவரை சி.பி.சி.ஐ.டி போலீஸார் கைது செய்யவில்லை. சி.பி.ஐ விசாரித்தால்தான் உண்மை தெரியவரும்'' என்று கோரிக்கை வைக்க ஆரம்பித்து இருக்கிறார்கள் நெல்லையைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள்.  
'அக்ரி’யின் ஜாதகம் ஸ்கேன் செய்யப்படுகிறது!
முத்துக்குமாரசாமியின் தற்கொலை விவகாரம் வேகம் எடுத்திருக்கும் இந்த நேரத்தில், அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு எதிராகக் கட்சி மேலிடத்துக்கு அவரது எதிர் கோஷ்டியினர் அனுப்பிய நூற்றுக்கணக்கான புகார்கள் தூசிதட்டி எடுக்கப்பட்டு உள்ளது என்று அ.தி.மு.க வட்டாரத்தில் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது. பெரும்பாலும் திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து வந்துள்ள அந்தப் புகார்கள் குறித்து கட்சி மேலிடத்தில் ரகசிய விசாரணை நடக்கிறது என்று செய்திகள் கசிந்துள்ளன.

அ.தி.மு.கவில் 'அக்ரி’யின் குறுகிய கால வளர்ச்சி குறித்து அ.தி.மு.கவைச் சேர்ந்த மூத்த நிர்வாகிகள் சிலரிடம் விசாரித்தோம். 'திருவண்ணாமலையில் இருந்து வேலூர் செல்லும் சாலையில் கலசப்பாக்கத்தை அடுத்த தென்பள்ளிப்பட்டு என்ற கிராமத்தில் சில கல்வி நிறுவனங்கள் உள்ளன. அவை அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் தொடர்பில் உள்ளவை என்று அந்த வட்டாரத்தில் பேசிக்கொள்கிறார்கள். அதே இடத்தில், வேளாண்மைக் கல்லூரி விஸ்தரிக்கும் பணி துரிதமாக நடந்து வருகிறது. இந்தக் கல்லூரி கட்டப்படும் நிலமும் அதனைச் சுற்றி பல ஏக்கருக்குமேல் உள்ள நிலமும் வேறு பெயர்களிலும் வாங்கப்பட்டுள்ளன. விவசாயிகளுக்கு நெருக்கடி கொடுத்தும் மிரட்டியும் அந்த விளைநிலங்கள் வாங்கப்பட்டுள்ளன. விவசாயிகளுக்கு மானியத்தில் கொடுப்பதற்காகத் தோட்டக்கலைத் துறைக்கு வந்த நிழல்வளைகள், கட்டடம் கட்டும் இடத்தை மறைப்பதற்குப் பயன்பட்டுள்ளன. அம்மா’ சிமென்ட் மூட்டைகள்தான் பெரும்பாலும் அந்தக் கல்லூரி கட்டடத்துக்குப் பயன்படுத்தப்படுவதாகவும் பேச்சு. அதுமட்டுமல்ல, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் பெயர்களில் சொத்துகள் வாங்கிக் குவித்துள்ளனர்' என்று அடுக்குகிறார் அ.தி.மு.கவின் திருவண்ணாமலை மாவட்ட முன்னாள் நிர்வாகி ஒருவர்.
அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆதரவாளர்களோ, ''முத்துக்குமாரசாமியிடம் அக்ரி கிருஷ்ணமூர்த்தி நேரடியாகப் பேச வேண்டிய அவசியம் எதுவும் இல்லை. யார் பேசினார்கள் என்று போலீஸார் தாராளமாக விசாரிக்கட்டும்!'' என்று சொல்கிறார்கள்.
மாவட்டச் செயலாளர், அமைச்சர் பதவி என அடுத்தடுத்து பறிக்கப்பட்டாலும் அக்ரியை சுற்றும் சர்ச்சை இன்னும் ஓயவில்லை. எந்த நேரத்திலும் அக்ரியை சி.பி.சி.ஐ.டி போலீஸ் விசாரணைக்கும் அழைக்கலாம்.
கடைசியாகப் பேசியது முதன்மை இன்ஜினீயர் செந்திலா?
முத்துக்குமாரசாமியுடன் கடைசியாகப் போனில் பேசியது யார் என்பதைத்தான் இப்போது சி.பி.சி.ஐ.டி போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். அந்த வகையில், சி.பி.சி.ஐ.டி போலீஸ் சந்தேக லிஸ்டில் இருப்பவர்களில் சென்னை நந்தனத்தில் இயங்கும் வேளாண் பொறியியல் துறை முதன்மை இன்ஜினீயர் (பொறுப்பு) செந்திலும் ஒருவர். அவரிடம் கடந்த 11-ம் தேதி விசாரணை நடந்தது. போலீஸார் கேட்ட கேள்விகளுக்கு அவர் 'தெரியாது’, 'இல்லை’ என்று ஒற்றை வரியில் மட்டுமே பதிலளித்துள்ளார். அதையும் போலீஸார் பதிவு செய்து இருக்கிறார்கள். இதுகுறித்து விசாரிக்க செந்திலின் அலுவலகத்துக்கு நாமும் சென்றோம். அப்போதுதான் போலீஸ் விசாரணை நடந்துகொண்டிருந்தது. அதனால் செந்திலை சந்திக்க முடியவில்லை.
விசாரணைக்குப் பிறகு செந்திலிடம் போனில் பேசினோம். 'முத்துக்குமாரசாமி தற்கொலைக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அவரது மரணம் பற்றி பத்திரிகைகளில் பார்த்துத்தான் நானே தெரிந்து கொண்டேன். இப்போது
சி.பி.சி.ஐ.டி விசாரணை நடந்து வருகிறது. என்னைப் பொறுத்தவரை நான் தூய்மையானவன். நீங்கள் எங்களுடைய துறையில் யாரிடம் வேண்டுமானாலும் விசாரியுங்கள். என்னைப் பற்றிச் சொல்வார்கள். யாரையும் நான் கடிந்துகூட பேச மாட்டேன். ரிப்போர்ட் கொடுக்கவில்லை என்றால் சத்தம் போட்டு இருப்பேன். நான் முத்துக்குமாரசாமியிடம் அப்படிக்கூட எதுவும் பேசியது கிடையாது. நான் அப்படிப் பேசி இருந்தால் காலர் ஐ.டி மூலம் கண்டுபிடித்து இருக்கலாம்! என் மீது தவறு இல்லை என்பதை நிரூபிப்பேன்' என்று சொன்னார்.


No comments:

Post a Comment