சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

26 Mar 2015

ஆள் கடத்தல் பணத்தில் ஸ்ரீலங்காவுக்கு டூர் சென்ற அதிமுக பிரமுகர்!

சிவகாசி தொழிலதிபரை கடத்தி, அதில் கிடைத்த பணத்துடன், ஸ்ரீலங்காவுக்கு டூர் சென்ற அ.தி.மு.க. பிரமுகரை, அவரது மனைவி மூலம் போலீசார் கைது செய்துள்ளனர்.

சிவகாசி ரத்தினவிலாஸ் பஸ் ஸ்டாப் அருகே வசிப்பவர் பன்னீர்செல்வம் (வயது 47). பட்டாசு மூலப்பொருளான வெடி உப்பு வியாபாரம் செய்து வந்தார். கடந்த மார்ச் 4ஆம் தேதி போலீஸ் உடையில் வந்த மர்ம கும்பல் விசாரணைக்கு அழைத்து செல்வதாக நாடகமாடி, அவரை கைது செய்வதாக கூறி அழைத்துச் சென்றது. பிறகு ஒரு கோடி ரூபாய் கேட்டு மிரட்டிய அந்த மர்ம கும்பல், இறுதியாக ரூ.25 லட்சம் வாங்கி விட்டு அவரை விடுவித்தது.

இதற்கு தனது கார் டிரைவர் சார்லஸ் உடந்தையாக இருந்ததை அறிந்த பன்னீர்செல்வம், இது தொடர்பாக சிவகாசி கிழக்கு போலீசில் புகார் செய்தார். சிவகாசி டி.எஸ்.பி. வெள்ளையன், டிரைவர் சார்லசை விசாரணை செய்ததில் அ.தி.மு.க.வை சேர்ந்த திருத்தங்கல் 13வது வார்டு கவுன்சிலர் துரைப்பாண்டியன் மற்றும் அ.தி.மு.க.வின் அண்ணா தொழிற்சங்க துணை செயலாளர் வி.சி.ராஜ், எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் சீமைச்சாமி உள்பட 14 பேர் சம்மந்தப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதில் தொழிற்சங்க துணைச்செயலாளர் வி.சி.ராஜ், கடத்தல் பணத்தை பங்கிட்டு சில லட்சங்களை பெற்றார். பின்னர் அவர் தனது மனைவி செல்வியிடம்  ஒரு லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்து, அவரை நாகர்கோவிலில் உள்ள உறவினர்கள் வீட்டில் விட்டுவிட்டு, சில லட்சங்களுடன் ஸ்ரீலங்காவுக்கு டூர் புறப்பட்டு சென்றார். இதை அறிந்த டி.எஸ்.பி. வெள்ளையன் தலைமையிலான போலீசார், நாகர்கோவிலில் தங்கியிருந்த செல்வியை பிடித்து சிவகாசி கொண்டு வந்தனர்.

பிறகு போலீஸ் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்த அவர்கள், செல்வியை செல்போன் மூலம் ஸ்ரீலங்காவில் இருந்த அ.தி.மு.க. நிர்வாகி வி.சி.ராஜ்ஜிடம் பேச வைத்தனர். உங்களது கணவர் இங்கே வரவில்லை என்றால், உங்களை கைது செய்ய வேண்டியதிருக்கும் என்று எச்சரித்தனர். இதை மனைவி செல்வி மூலம் அறிந்த வி.சி.ராஜ் பதறிப்போனார். உடனே விமானம் மூலம் சிவகாசி வந்து விடுவதாக போலீசாரிடம் கெஞ்சினார்.

அதைத்தொடர்ந்து, ஸ்ரீலங்காவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்து அங்கிருந்து மதுரைக்கு விமானத்தில் வந்தார். தகவல் அறிந்த சிவகாசி டி.எஸ்.பி. வெள்ளையன்,அவரை மதுரை விமான நிலையத்தில் வைத்து கைது செய்தார்.
தொழிலதிபர் கடத்தல் வழக்கில் மூளையாக செயல்பட்ட அ.தி.மு.க. கவுன்சிலர் துரைப்பாண்டியன், வி.சி.ராஜ்., சீமைச்சாமி ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த கடத்தல் பணம் ரூ.13 லட்சத்தை மீட்டனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய பிறரையும் கைது செய்யும் பணியில் தீவிரமாக உள்ளனர்.


No comments:

Post a Comment