சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

21 Mar 2015

காதலர்களை குறிவைக்கும் கயவர்கள்...காரைக்குடியில் அரங்கேறிய 'பகீர்' பலாத்காரம்!

காரைக்குடி-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நின்று பேசிக்கொண்டிருந்த  காதல் ஜோடியிடம் போலீஸ் எனக்கூறி இளம்பெண்ணை கடத்தி பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே ஆவுடைபொய்கை  கிராமம் உள்ளது. திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த கிராமத்தை சுற்றி வனப்பகுதியும், ஆள் நடமாட்டம் குறைவாக இருப்பதால் இந்த சாலை ஓரத்தில் காதலர்கள் அதிக அளவில் பேசிக்கொண்டிருப்பது வழக்கம்.
இதேபோல், நேற்று மாலை ஆறு மணி அளவில் காரைக்குடி அருகே உள்ள தானாவயல் கிராமத்தை சேரந்த இளம்பெண் ஒருவர், காரைக்குடி அருகே உள்ள ரஸ்தாவை சேரந்த தனது காதலருடன் டூவிலரில் நின்று பேசிக்கொண்டிருந்திருக்கிறார். அப்பொழுது இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், காதலர்களிடம் நாங்கள் போலீஸ் எனக்கூறி, 'நீங்கள் யார்?' என்று விசாரித்திருக்கிறார்கள். மேலும், "இரண்டு பேரிடமும் விசாரணை நடத்தணும், எனவே, பள்ளத்தூர் காவல்நிலையத்திற்கு வந்துவிடு!' என காதலனிடம் கூறிவிட்டு, இளம்பெண்ணை தங்கள் டுவீலரில் அழைத்து சென்றிருக்கின்றனர்.


காதலனும் தனது காதலியை மீட்க வேண்டும் என்ற பரபரப்பில் அவர்களை பின் தொடரந்து சென்று கொண்டிருந்த பொழுதே சிறிது நேரத்தில் அவர்கள் மாயமாக மறைய, அவர் பள்ளத்தூர் காவல் நிலையம் சென்றிருக்கிறார். அங்கிருந்த காவலர்களிடம் கேட்டபோது, 'நாங்கள் அப்படி யாரையும் கூட்டி வரவில்லை!' என தெரிவித்திருக்கின்றனர். இதையடுத்து, மீண்டும் அந்த சாலையில் வந்து  தங்களை மிரட்டியவர்களை தேடியுள்ளார். ஆனால் வந்த தடம் கூட தெரியாமல் இருந்தது. மேலும், காதலியின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டபோது, சுவிட் ஆஃப் செய்யப்பட்டுள்ளது எனக் கூறியிருக்கிறது.

இந்நிலையில், இன்று காலை அந்த இளம்பெண் காரைக்குடி மகளிர் காவல் நிலையத்திற்கு வந்து புகார் மனு அளித்துள்ளார். அதில், ''நாங்கள் இருவரும் பேசிக்கொண்டிருந்தபோது, காக்கி பேண்ட் அணிந்த இருவர் வந்து நாங்கள் போலீஸ் என்று கூறி, என்னை வண்டியில் ஏற்றி கொண்டு சென்று விட்டனர். அவர்கள் என்னை காட்டிற்குள் அழைத்து சென்று இரவு முழுவதும் என்னை இருவரும் மாறி மாறி பலாத்காரம் செய்தனர். அதிகாலை நான்கு மணி அளவில் என்னை மீண்டும் ரோட்டிற்கு கொண்டு வந்து விட்டு விட்டு சென்று விட்டனர்” என கூறியுள்ளார்.

இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், ''தொடர்ச்சியாக அந்த பகுதியில் இதுபோன்று சம்பவம் நடைபெற்று வருகிறது. போலீஸ் என்று கூறினால் இளம் வயதினர் பயந்துவிடுவார்கள் என்று இவ்வாறு செய்கின்றனர். அந்த பெண் கூறிய அடையாளங்களை வைத்து விசாரணை செய்து வருகிறோம். விரைவில் அவர்களை கைது செய்து விடுவோம்'' என்றனர்.

ஆனால், இதுபோன்று நடப்பது இது முதல் முறை அல்ல என்று அப்பகுதி மக்கள் கூறுகி்ன்றனர். ''காதலர்கள் தனிமையில் இப்பகுதியில் வருவதை நோடமிட்டு, அவர்களை பின் தொடர்ந்து வந்து மிரட்டி, பெண்ணை பலாத்காரம் செய்வது இந்த பகுதியில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. காதலர்கள் வீட்டிற்கு தெரியாமல் வருவதால், மானத்திற்கும் பயந்து வெளியே சொல்லாமல் இருக்கிறார்கள். இதுவே இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு வசதியாக போய்விட்டது. பலரிடம் நகையை பறித்து கொண்டு, பலாத்காரமும் செய்துள்ளனர். அந்த பெண்கள் ரோட்டில் செல்வோரிடம் சொல்லி அழுதுள்ளனர்” என்கின்றனர். 

போலீஸ் என்று கூறி பலாத்கார செய்பவர்கள் உண்மையிலேயே போலியானவர்களா? அல்லது காவல்துறைக்கு நெருக்கமானவர்களா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த குற்றவாளிகள் சிக்கினால், இவர்களால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வெளியே தெரியவரும்.


No comments:

Post a Comment