சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

17 Mar 2015

நான் உனக்கு பாய் பிரண்ட்தான்...பெண் காவலரிடம் `வழிந்த` உதவி கமிஷனர்!

சென்னை போலீஸ் உதவி கமிஷனர் ஒருவர், பெண் காவலர் ஒருவரிடம் செல்போனில் பேசிய கிளுகிளுப்பான பேச்சு, வாட்ஸ்அப்பில் வேகமாகப்  பரவி வருகிறது. இது போலீசார் மத்தியில் பெரும் பரபரப்பையும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியையும்  ஏற்படுத்தியுள்ளது.
இடையிடையே போலீஸ் வயர்லெஸ் ஒலியுடன் கேட்கும்  அந்த ஆடியோ வாய்சில், உதவி கமிஷனர் மிகவும் கஷ்டப்பட்டு அந்த பெண்காவலரை தேடி பிடித்து நம்பரை வாங்கி பேசுவதாகக்  கூறுகிறார். உரையாடலின் தொடக்கத்தில் பெண் காவலரை 'செல்லம்' என்று கொஞ்சியபடி பேசுகிறார். "நேற்று 2, 3 முறை கூப்பிட்டேன். ஏன் கட் பண்ணிட்டே...?"  என்று பேசும் அவர், பெண் பெயரை சொல்லி பெரு மூச்சு விடுகிறார்.

மேலும், " உன்னை பார்த்து எத்தனை நாள் ஆகிவிட்டது. 2, 3 மாதமாக உன்னை கண்டே பிடிக்க முடியவில்லை. உன் நம்பரை பிடிப்பதற்குள் போதும் போதும் என்று ஆகி விட்டது" என்றும்,  குழந்தை மற்றும் கணவன் பற்றி விசாரிக்கும் அவர், உன் வீட்டுக்காரர் என்னை விட அழகாக இருப்பாரா? என்றும் கேட்கிறார். 'ஆமாம்!' என்று பெண் காவலர் சொன்னவுடன், "வாட்ஸ் அப்பில் வீட்டுக்காரர் படத்தையும், உன்னுடைய அழகான படத்தையும் அனுப்பு. என்னிடம் இருப்பது ஸ்மார்ட்போன். அதில் உன் அழகான முகத்தை பார்ப்பேன்" என்று கொஞ்சுகிறார்.

பின்னர், எந்த ஊர் என்று பெண் காவலரிடம் கேட்கும் உதவி கமிஷனர், அவருக்கு ராஜபாளையம் என்றவுடன், தனியாவா செல்கிறாய், நானும் உன்னுடன் வரட்டுமா என்கிறார். என்னை உதவி கமிஷனர் என்று நினைத்து சார்... என்று கூப்பிடாதே. நான் உனக்கு  பாய் பிரண்ட்தான். அப்படி நினைத்தபடிதான் பேச வேண்டும்.

அதிகாரி என்று நினைக்காதே. எந்த உதவி வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருக்கிறேன் என்று கூறியவர், ஒருநாள் என்னுடன் தனியாக வருகிறாயா என்று கேட்கிறார். பிறகு அந்த பெண் காவலரின் உடல் அழகை வர்ணிக்கிறார்.அத்தோடு தொடர்ந்து தன்னிடம் போன் பேச வேண்டும் என்று கூறி தனது வாட்ஸ் அப் வசதி உள்ள செல் போன் எண்ணையும் கூறுகிறார்.

அவரின் எண்ணை பற்றி விசாரிக்கையில்தான் , அது வடசென்னையில் உள்ள உதவி கமிஷனர் ஒருவரின் எண் என்பதும், அவர்தான் பெண் காவலரிடம் கொஞ்சியபடி கிளுகிளுப்பாகப்  பேசியதும் தெரியவந்துள்ளது. இதனால் இந்த காம உரையாடல் குறித்து சென்னை உட்பட அனைத்து பகுதி போலீசாரிடமும் அதிர்ச்சியோடு பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது.

இந்நிலையில், உதவி கமிஷனரின் இந்த ஆபாச பேச்சு குறித்து விசாரணை நடத்த சென்னை மாநகர போலீஸ்  கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார். இதன் முடிவில் சம்பந்தப்பட்ட உதவி கமிஷனர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.

விசாரணை முடிவில் அவர் சஸ்பெண்ட்  செய்யப்பட  வாய்ப்புள்ளதாகவும்    போலீஸ் அதிகாரிகள் மத்தியில் தகவல் பரவி வருகிறது. பெண் காவலரிடம் அத்துமீறி பேசிய உதவி கமிஷனர் வேலூரைச் சேர்ந்தவர் என்றும் இன்னும் 8 மாதத்தில் பணியில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாகவும்  கூறப்படுகிறது. 

துறை ரீதியான நடவடிக்கைகள் தீவிரமாகி இருப்பதால் உதவி கமிஷனர் மீதான பிடி இறுகியுள்ளது.  ஏற்கனவே காவல் துறை உயரதிகாரிகள் யார் மீதாவது இதுபோன்று பாலியல் ரீதியான குற்றச்சாட்டுக்கள் அவ்வப்போது எழுந்து அடங்குவது உண்டு. தற்போது மீண்டும் இப்பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளது.

இதற்கிடையே தற்போதைய பிரச்னை, மறைக்க முடியாதவாறு வெளிப்பட்டுவிட்டதால், சட்டரீதியான நடவடிக்கைகள் எடுப்பது பற்றியும் உயர் அதிகாரிகள் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்கள். இந்த விவகாரத்தைப்  பெண்கள் அமைப்பினர் கையில் எடுத்து விட்டால், இன்னும் காவல்துறைக்கு அசிங்கமாகி விடும் என்றும் போலீஸ் அதிகாரிகள் கருதுகிறார்கள்.

ஒரு பெண் காவலருக்கே இப்படி பாலியல் தொந்தரவு அவர் சம்பந்தப்பட்ட துறையின் உயர் அதிகாரியால் தரப்படுகிறது  என்றால், சாதாரண பெண்களின் கதி என்ன என்றும், வேலியே பயிரை மேய்வதா என்றும் எதிர்ப்புக் குரல்கள் வலுத்துள்ளதால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்  கூறப்படுகிறது. 


No comments:

Post a Comment