சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

17 Mar 2015

கணினியிலேயே எவரெஸ்ட்டை சுற்றிப்பார்க்கலாம்!

வரெஸ்ட்,  உலகின் உயரமான மலைச்சிகரம் என்பதும், அதன் மீது ஏறி சாதனை படைப்பது என்பது விடாமுயற்சியின் உச்சம் என்பதும் உங்களுக்கு தெரிந்திருக்கும். பனி படர்ந்த எவரெஸ்ட் சிகரத்தை புகைப்படங்களில் நீங்கள் பலமுறை பார்த்து ரசித்திருக்கலாம். இப்போது எவரெஸ்ட் சிகரத்தை குளோசப்பில் பார்க்கும் வசதி அறிமுகமாகி இருக்கிறது. 

ஆம், கூகுளின் 'ஸ்டீரிட்வியூ' சேவையில் இப்போது எவரெஸ்ட் மலைப்பகுதியும் இணைந்துள்ளதால், இருந்த இடத்தில் இருந்தே எவரெஸ்ட்டை சுற்றியுள்ள பகுதியை பார்த்து ரசிக்கலாம். 

கூகுள் தனது வரைபட சேவையின் ஒரு பகுதியான ஸ்டிரீட்வியூ மூலம் உலகின் பல பகுதிகளை 360 டிகிரியில் பார்க்க கூடிய வகையில் புகைப்பட தொகுப்பாக வழங்கி வருகிறது.

இந்த வரிசையில் இப்போது எவரெஸ்ட் சிகரம் அமைந்துள்ள நேபாள பகுதியையும் கூகுள் சேர்த்துள்ளது. நேபாளத்தின் கும்பு (Khumbu ) பகுதியில் தான் இந்த மலைச்சிகரம் அமைந்துள்ளது. கூகுள் தனது ஸ்டிரீட்வியூ படக்குழுவினருடன் இந்த பகுதியில் கடந்த ஒராண்டுக்கு முன் உலா வந்து இங்குள்ள காட்சிகளை பதிவு செய்துள்ளது. டிரெக்கர் என்று சொல்லப்படும் காமிராவுடன், மலையேறுவதை பழக்கமாக கொண்ட ஷெர்பா சமூகத்தினர் வசிக்கும் கிராமங்கள், அங்குள்ள மடாலாயங்கள், தேசிய பூங்காக்கள் ஆகியவற்றை காட்சிப்படுத்தியுள்ளது.

இதன் மூலம் எவெரெஸ்ட் செல்லும் பாதையில் உள்ள முக்கிய இடங்களை 360 கோணத்தில் பார்த்து ரசிக்கலாம் என்பதோடும், பனி படர்ந்த பிரதேசத்தில் உள்ள கிராம மக்களின் வாழ்க்கை கீற்றுகளையும் பார்க்கலாம். நேபாள மலைப்பகுதியில் காணப்படக்கூட்டிய யாக் வகை மாடுகளையும் காணலாம்.

ஏற்கனவே ஆழ்கடல் முதல் பனிப்பிரதேசம் வரை பல வகையான இடங்களுக்கு சென்று அங்குள்ள் காட்சிகளை ஸ்ட்ரீட்வியூவில் கொண்டு வந்துள்ள கூகுள் , எவரெஸ்ட் மலைப்பகுதியை ஸ்டிரீட்வியூவுக்குள் கொண்டு வந்துள்ளது.

இதற்காக கூகுள் ஸ்டோரி சைக்கிள் எனும் அமைப்பு மற்றும் அபா ஷெர்பா எனும் மலையேறும் வீரருடன் இணைந்து செயல்பட்டுள்ளது. அபா ஷெர்பா சாமானியர் அல்ல. 21 முறை எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய சாதனையாளர். மலையேறும் வீர்ர்களுக்கு வழிகாட்டுவதை தொழிலாக கொண்ட அபா, உலகிலேயே அதிக முறை எவரெஸ்ட்டில் ஏறி சாதனை படைத்த பின்னர், தற்போது மலையேறுதலில் இருந்து ஓய்வு பெற்று இப்பகுதி மக்களின் நலனுக்காக பாடுபட்டு வருகிறார்.
கூகுள் படக்குழுவினருடன் அவர்தான் சுற்றித்திரிந்து இங்குள்ள காட்சிகளை படம் படிக்க உதவியிருக்கிறார்.

"எவரெஸ்ட்டை எல்லோருக்கும் தெரியும். ஆனால் இங்குள்ள கிராமங்களில் வாழும் மக்களின் வாழ்கை எந்த அளவு கடினமானது என்று யாருக்கும் தெரியாது!" என்று அவர் இந்த முயற்சி தொடர்பாக கூகுள் ஸ்டிரீட்வியூ வலைப்பதிவில் எழுதியுள்ள விருந்தனர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மலையேறுவது தவிர வேறு பணிகள் கொண்ட மேம்பட்ட வாழ்க்கையை தனது சமுகத்தினருக்கு உருவாக்க பாடுபட்டு வருவதாக குறிப்பிட்டுள்ள அபா, கூகுளின் இந்த முயற்சி மூலம் எவரெஸ்ட் கிராம வாழ்க்கையை மற்றவர்கள் புரிந்து கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

ஆண்டுதோறும் மலைப்பகுதியில் இறக்கும் ஷெர்பாக்கள் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை என்றும் அவர் வேதனையுடன் கூறியுள்ளார். கூகுள் சமீபத்தில் அமேசானில் உள்ள மழைக்காடுகளையும் ஸ்ட்ரீட்வியூ சேவையில் கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது. ஜிப்கார் என்று சொல்லப்படும் கம்பியில் தொங்கியபடி இயங்கும் வாகனத்தில் டிரெக்கர் காமிராவை வைத்து மழைக்காடுகளை கூகுள் படம் பிடித்துள்ளது. 

எவரெஸ்ட் ஸ்டிரீட்வியூ தொடர்பான கூகுளின் வலைப்பதிவு: http://google-latlong.blogspot.in/


No comments:

Post a Comment