ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடர், அடுத்து முத்தரப்பு தொடர் என படுதோல்வியை சந்தித்த இந்திய அணிக்கு உலகக் கோப்பை போட்டியில் மீண்டும் நந்தியாக வந்து குறுக்கே நிற்கும் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்துவது சற்று கடினமான காரியம்தான். இந்த தொடரை பொறுத்த வரை, இந்திய அணி இதுவரை தோல்வியை சந்திக்கவில்லை. ஆனால் காலிறுதியில் வங்கதேச அணியுடன் நடந்த ஆட்டம் மெச்சும்படி இருந்தது என்றும் சொல்ல முடியாது. இதுவரை தோல்வியை சந்திக்காத நமது அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தினால்தான் இந்திய ரசிகர்களின் மனது சற்று ஆறுதல் அடையும்.
பேட்டிங்கை பொறுத்த வரை ஆஸ்திரேலிய அணிக்கு எல்லாவிதத்திலும் இந்திய அணி சமமாகத்தான் இருக்கிறது. தவான், ரோகித்,விராட் கோலி,சுரேஷ் ரெய்னா, தோனி, ரவீந்தர ஜடேஜா திடீரென விளாசும் அஸ்வின் என குறை சொல்ல முடியாத அளவுக்கு பேட்டிங் வரிசை இருக்கிறது. அதேபோல் ஆஸ்திரேலிய அணியிலும் ஆடம் ஃபின்ச், டேவிட் வார்னர், மைக்கேல் கிளார்க்,ஷேன் வாட்சன், மேக்ஸ்வெல், ஹடின் என பேட்டிங் வரிசையும் பலம்தான்.
பந்துவீச்சில் முகமது ஷமி,உமேஷ் யாதவ், மோகித் சர்மா இந்தியாவுக்கு கைகொடுக்கலாம். சிட்னி மைதானத்தை பொறுத்த வரை அஸ்வின் நிச்சயமாக இந்தியாவின் துருப்பு சீட்டு. ஆஸ்திரேலியாவை பொறுத்த வரை வேகப்பந்துதான் அவர்களின் தாரக மந்திரம். மிட்செல் ஸ்டார்க்,மிட்செல் ஜான்சன் ஆஸ்திரேலியாவுக்கு கைகொடுப்பார்கள். சிட்னி மைதானம் சுழற்பந்துக்கு சாதகமானது என்பதால் மேக்ஸ்வேல், ஸ்மித் போன்றவர்களும் பந்தை கையில் எடுக்க கூடும். பீல்டிங்கில் ஆஸ்திரேலிய அணியை விட இந்திய அணி சற்று பின்னடைவாகத்தான் உள்ளது. இந்த போட்டியில் வெற்றியை தீர்மானிக்கும் இடத்தில் டாசுக்கும் முக்கிய பங்கு வகிக்கும்.

எல்லாவற்றையும் விட இது போன்ற முக்கியமான ஆட்டத்தில் ஆஸ்திரேலியர்கள் ஸ்லெட்ஜிங்கில் ஈடுபட்டு எதிரணி வீரர்களுக்கு மனதளவில் தொல்லை தரும் வேலையில் ஈடுபடுவார்கள். கரணம் தப்பினால் மரணம் என்பதற்கு கடந்த 2006ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் நடந்த ஒரு சம்பவத்தை உதாரணமாக கூற முடியும். பெர்லினில் நடந்த இறுதி ஆட்டத்தில் இத்தாலி -பிரான்ஸ் அணிகள் மோதின.
இந்த போட்டியின் போது ஃபிரான்ஸ் கேப்டன் சினடேன் சிடேனை வெறுப்பேற்றும் வகையில் இத்தாலியின் மார்கோ மாட்டரசி காதுக்குள் ஏதோ கூறினார். அடுத்த வினாடி சிடேன், மார்கோ மாட்டரசியின் மார்பில் முட்டித் தூக்க உலகமே அதிர்ந்து போனது. சிவப்பு அட்டை பெற்ற சிடேன் களத்தை விட்டு வெளியேற்றப்பட்டார். 10 வீரர்களுடன் ஆடிய ஃபிரான்ஸ் இறுதியில் தோல்வியை சந்திக்க நேரிட்டது.
இத்தாலியர்கள் போலவே ஆஸ்திரேலியர்களும் எதிரணியினரை ஸ்லெட்ஜிங் செய்வதில் வல்வர்கள். ஆஸ்திரேலியாவில் இந்தியா சிங்கிள் வெற்றிக்கு லாட்டரி அடித்தது என்ற மேக்ஸ்வெலின் ஆணவப் பேச்சு, பாகிஸ்தான் வீரர் வகாப் ரியாசிடம் ஷேன் வாட்சன் நடந்து கொண்டதை உதாரணமாக கூற முடியும்.
இதுபோன்று ஸலெட்ஜிங்கில் ஈடுபடும் ஆஸ்திரேலியர்களை மிக கவனமாக சமாளிக்க வேண்டும். பேட் பிடிக்க தெரியாதவனெல்லாம் எங்க கூட விளையாட வந்துட்டான் என்று விராட் கோலியிடம் வந்து காதுக்குள் கிசு கிசுக்கலாம். இதற்கெல்லாம் மட்டையால்தான் விராட் கோலி பதில் அளிக்க வேண்டும்.மாறாக அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு நமது எனர்ஜியை வீணடித்து தவறிழைத்து விடக் கூடாது. சோ ஆஸ்திரேலியர்களிடம் இல்லை... இல்லை ஸ்லெட்ஜர்களிடம் கவனமாக இருங்கள்...நந்தியை முந்துங்கள்...!,,
No comments:
Post a Comment