சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

9 Mar 2015

படிப்பு திணிப்பாக இருக்கக் கூடாது!'

சர்க்கஸ்ஸில் சிங்கம்: "யாராவது வாருங்கள்...இங்கே கொரில்லா உள்ளே வந்து விட்டது..."

கொரில்லா: சத்தம் போட்டு பேசாதே...நீபோட்ட வேஷம் மாதிரிதான் நானும் போட்டு இருக்கேன். சத்தமா பேசினா 2 பேருக்கும் வேலை போயிடும்."

இந்த ஜோக் மாதிரிதான் எங்கும் வேலை இல்லாத்திண்டாட்டம் தலை விரித்தாடுகிறது. 

வேலை வாய்ப்பகம் ஒவ்வொரு மாநிலத்திலும் செயல்படுகிறது. எதற்காக செயல்படுகிறது? வேலை கொடுப்பதற்காக என்று நினைத்தால்இல்லை என்றுதான் பெரும்பாலானவர்களின் பதிலாக உள்ளது. ஆட்சியாளர்கள் எல்லோரும் பணம் உள்ளவர்களுக்கே வேலை கொடுக்கிறார்கள் ‘வேலை இல்லை’ எனும் வார்த்தை இந்திய இளைஞர்களை அச்சுறுத்தும் ஒரு வார்த்தையாக உருவெடுத்து உள்ளது. ஒரு மனிதனின் அடிப்படைத் தேவையை பூர்த்தி செய்வது மட்டுமல்லாது அம்மனிதன், பூமியில் வாழும் வரை அவனுக்கு உறுதியாய், ஊக்கமாய் இருப்பது இந்த வேலையே.

பல படித்த இளைஞர்கள்தான் படித்ததற்கும், செய்கின்ற வேலைக்கும் சம்பந்தம் இல்லாமல் பணி செய்கின்றனர். இதில் பலர் ஆட்டோக்களை ஓட்டுபவர்களாகவும், தொண்டு நிறுவனங்களில் பணிபுரிபவராகவும், சுய தொழில்புரிபவர்களாகவும் பரிணமித்திருக்கிறார்கள். வேலைஇல்லாத் திண்டாட்டம் பல குற்றங்கள் உருவாக காரணமாக அமைந்து விட்டது. பல செயின் பறிப்பு முதல் நவீன தொழில் நுட்ப திருட்டுவரை படித்த  இளைஞர்கள் ஈடுபட்டு கைது ஆவது இப்போது நிறைய நடக்கிறது. 

2011ல், 3.5 சதவீதமாக இருந்த, வேலைவாய்ப்பின்மை, 2012ல், 3.6 சதவீதமாக உயர்ந்து, கடந்த ஆண்டில், அதாவது, 2013ல், 3.7 சதவீதமாக இருந்துள்ளது. கிராமப்புறங்களில் இருந்து, ஏராளமானோர், நகர்ப்புறங்களுக்கு இடம்பெயர்வதால், கிராமப்புறங்களில் வேலைவாய்ப்புகள் குறைந்து, அங்கு வேலையில்லா திண்டாட்டம் அதிகரிக்கிறது. அவ்வாறே, நகர்ப்புறங்களில், திறமையில்லாத, கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள் அதிகரிப்பதால், நகர்ப்புறங்களிலும் வேலையில்லா திண்டாட்டம் அதிகரிக்கிறது. 

NASSCOM (National Association of Software and Services Companies) அண்மையில் வெளியிட்ட புள்ளிவிபரத்தின்படி இந்தியாவில்  75 %  பொறியியல் பட்டதாரிகள் வேலைபெற தகுதியற்றவர்கள். ஒவ்வொரு வருடமும் 7,50,000 பொறியியல் பட்டதாரிகள் படித்துவிட்டு வெளியே வருகின்றனர். இது ஆண்டுக்கு  5 %   என்று வருடா வருடம் உயர்கிறது, கலை மற்றும் அறிவியல் பட்டதாரிகளின் எண்ணிக்கை 15,00,000க்கும் அதிகம். 

இதற்க்கு தீர்வாக  பல புதிய தொழில்கள்  தொடங்கப்படவேண்டும். அப்போதுதான் வேலை வாய்ப்பு பெருகும். பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு பிடிக்காத படிப்பை படிக்க சொல்லி கட்டாயப்படுத்தக்கூடாது. மேலும் மாணவர்களும் பிடித்த துறையை கண்டு, அதை படிக்கவேண்டும். இதனால் பாடத்திட்டத்தையும் தாண்டி நம் திறன் வளரும்.
'படிப்பு என்பது பிடிப்பாக இருக்க வேண்டுமே தவிர திணிப்பாக இருக்க கூடாது. திணிப்பு இல்லாத படிப்பின் மூலமே புதிய கண்டுபிடிப்புகளும் வேலை வாய்ப்பும் பெருகும். 
 



No comments:

Post a Comment