சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

5 Mar 2015

எப்படி தட்டி கேட்க முடியும்?

மீபத்தில் எங்கள் நிறுவனத்தில் நடப்பு நிதியாண்டுக்கான  (FY 2014-2015) வருமான வரி கணக்கிடல் ஆரம்பித்தது. அதற்கான ஆதாரங்கள் சமர்ப்பிப்பு துவங்கியது முதல், உடன் பணியாற்றுபவர்கள் மெடிக்கல் பில் வாங்கவும், ரூம் அக்ரிமெண்ட் தயார் செய்யவும் துவங்கினர். அவர்கள் கூறிய அனைத்தும் என்னை ஆச்சரியப்பட வைத்தது.
ஏறக்குறைய அனைத்து நிறுவனங்களிலும் இந்த மெடிக்கல் பில் விதி பொருந்துகிறது. நீங்கள் மெடிக்கல் பில் கொடுத்தால் உங்களுக்கு 15000 ரூபாய்க்கு (அதிகபட்ச வரம்பு)  வரி விலக்கு. அது உண்மையான பில்லாக இருக்க வேண்டுமென்று அவசியம் இல்லை, ஏனெனில் மெடிக்கல் ஸ்டோர்களில் இதற்கென்றே  தனியாக பில் புத்தகம் வைத்துள்ளனர்.  அவர்கள் 10% அல்லது 5% வாங்கிகொண்டு நமக்கு பில் தருகின்றனர்.


இந்த கமிஷன் அவர்கள் கட்டும் வரிக்காவாம். அதாவது நமக்கு 1000 ரூபாய் பில்லுக்கு அவர்கள் 100 ரூபாய் கமிஷன் வாங்குகிறார்கள். இந்த கமிஷன் தொகையில் ஒரு பங்கை அவர்கள் அரசிற்கு வரியாக கட்டுவார்களாம்.  

மற்றுமொன்று, HRA ( HOUSE RENT ALLOWANCE ) எனப்படும் ஹவுஸ் ரெண்ட் அலவென்ஸ், இதற்கு தேவையான ஆவணங்கள் ரெண்ட் அக்ரிமெண்ட் ( அரசின் முத்திரை தாளில் பதியப்பட வேண்டியது), மற்றும் ரெண்ட் ரெசிப்ட் ( வீட்டு உரிமையாளரின் கையெழுத்து ரெவென்யூ ஸ்டாம்புடன்).

இதற்கும் எளிய நடைமுறைகள். ரெண்ட் அக்ரிமெண்ட்டுகள் எளிதாக பதியலாம். இதற்கென்றே xerox கடைகளும், Fancy ஸ்டோர்களும் உள்ளன. நீங்கள் ஏதாவது ஒரு முகவரி மட்டும் கொடுத்தால் போதுமானது. உங்களுக்கு வேண்டிய அட்வான்ஸ் மற்றும் ரெண்ட் உடன் கூடிய ரெண்ட் அக்ரிமெண்ட் ( அரசின் முத்திரை தாளில் பதியப்பட்டது ) கிடைத்துவிடும்.  இதில் உங்கள் கையொப்பமும் வீட்டு உரிமையாளரின் கையொப்பமும் இட்டால் ரெண்ட் அக்ரிமெண்ட் ரெடி.  

பின் குறிப்பு : இங்கே வீட்டு உரிமையாரின் முகவரியும் கையொப்பமும் உங்கள் விருப்பம், நீங்கள் 'விவேகானந்தர் தெரு, துபாய் மெயின் ரோடு...!' என்று கூட போடலாம்.

அதன் பின் ரெண்ட் ரெசிப்ட், இங்கும் அதே உரிமையாளரின் முகவரியும் கையொப்பமும் ரெவென்யு ஸ்டாம்புடன்).  

இந்த இரண்டையும் வைத்து நீங்கள் 1,00,000 ரூபாய் வரை வரி சலுகை பெறலாம். அதற்கு மேலும் பெற வழிகள் உள்ளன.  இந்த வழிமுறைகள் அனைத்தும் அனைவரும் அறிந்ததே (  நான் என் நிறுவனத்தில் கண்டது ). இவை அனைத்தும் நிறுவனத்தின் ஆடிட்டர் ஒப்பதுலுடன் அரசுக்கு சமர்பிக்கப்படுகின்றன. அரசும் இதனை ஏற்றுகொள்கிறது. 

இதற்கு எதற்கு வரி விலக்கு என்று பெயர் ? 

பணிக்கு புதிதாய் சேர்ந்த எனக்கே இவ்வளவு விவரங்கள் அறியப்படும்பொழுது,  இது அதிகாரிகள் அறியாததா? 

இங்கே பல கேள்விகள் எழுகின்றன.

1. அரசை ஏமாற்ற மக்கள் போலி மெடிக்கல் பில் சமர்ப்பிக்கின்றபோது,   அரசு அதிகாரிகள், எம். எல். ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்களின் மோசடியை எப்படி தட்டி கேட்க முடியும்?


2. போலி பில் தரும் மெடிக்கல் ஸ்டோர்கள் அரசுக்கு வரி செலுத்துவர்களா?

3. ஆடிட்டர்கள் இதனை அறியாமல் ஒப்புதல் செய்கிறார்களா?

ஒன்றுதான் நினைவுக்கு வருகிறது. சமீபத்தில் பார்த்த திரைப்படம் "சதுரங்க வேட்டை" யில் நாயகன் கூறுவார், " குற்ற உணர்ச்சி இல்லாம செய்யற  எந்த தப்பும் தப்பே இல்லே". 


No comments:

Post a Comment