சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

21 Mar 2015

நேற்று வாட்ச், இன்று முட்டை: போலிகளின் சொர்க்கம் சீனா!

ப்பொருள் சீனப்பொருள் வாங்கிடினும் அப்பொருள்
போலிபொருள் என்பது தெளிவு -இது புது குறள்.

சீன சந்தையை கலக்கும் ஆப்பிள் போலி ஸ்மார்ட்வாட்ச்கள் என்று நேற்றைய செய்திகளில் பார்த்து இருப்பீர்கள். ஆப்பிளின் ஸ்மார்ட்வாட்ச்சை வாங்க இன்னும் ஒரு மாத காலத்திற்கு மேல் காத்திருக்க வேண்டும்... அதற்குள் போலி.

போலியான உற்பத்திகளை செய்வதில் சீனாவிற்கு நிகர் சீனாவே தான். சீனப் பொருள்கள் என்றால் மலிவு; 'இன்னொரு side போலி. copy and paste ' என்பதுதான் சீனப் பொருள்களுக்கான தத்துவம். அமெரிக்கா, சீனாவின் போலிகளின் godown ஆகிவிட்டது. ஆரம்ப காலத்தில் மற்றைய நாட்டு நிறுவனங்களின் பொருட்களை போலியாக தயாரித்து சந்தைப்படுத்தத் தொடங்கியது சீனா. மலிவான விலை காரணமாக அவை சந்தையில் பெரும் வரவேற்பைப் பெற்றன. இவற்றின் வெற்றியைத் தொடர்ந்து பலவற்றையும் போலியாக தயாரிக்கத் தொடங்கியது

வேகமாக விற்பனையாகும் பொருள்கள் உற்பத்தியில் (எப். எம்.சி.ஜி) தோல், ஹேர் ஆயில், டூத்பேஸ்ட் போன்றவற்றை டாபர் நிறுவனமும், சிகரெட், காகித பெட்டிகள், வேளாண் பொருள்களை ஐ.டி.சி யும் தயாரிக்கின்றன.

இப்பொருள்களுக்கு உள்நாடு, வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு உள்ளது. இதை சீனாவில் சில கும்பல் அவர்களுக்கு சாதகமாக பயன்படுத்தி போலியான பொருள்களை தயாரிக்கின்றனர். இந்தியாவில் தயாரானது போன்ற போலி முத்திரைகளுடன் சட்ட விரோதமாக உலக நாடுகளுக்கு, குறிப்பாக இந்தியா மற்றும் ஆப்ரிக்க நாடுகளுக்கு அதிகம் ஏற்றுமதி செய்கின்றனர். அதனால், நம்நாட்டுக்கு ஆண்டிற்கு ரூ.26,500 கோடி வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

நோக்கியா, அடி டாஸ், ரீபோக், நிவியா போன்ற பன்னாட்டு பொருள்களையும் போலியாக தயாரித்து சந்தையில் விற்கின்றனர். மேலும், மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் போலியான மருந்து, மாத்திரைகளை தரமற்ற முறையில் தயாரித்து, குறைந்த விலைக்கு சந்தையில் விற்கின்றனர். 'இந்திய தயாரிப்பு' என அச்சிடப்பட்ட சீனாவில் தயாரிக்கப்பட்ட ஏராளமான மாத்திரைகள் அடங்கிய சரக்கு பெட்டகத்தை சமீபத்தில் நைஜீரிய அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

சீனாவில் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்த சாம்சங் நிறுவனத்தின் போலி செல்பேசிகள், பலமுறை இந்தியாவில் பிடிபடுகின்றன. தரம் குறைந்த சீனப்பொருட்கள் உள்நாட்டு வணிகர்கள், கைவினைஞர்கள் மற்றும் தயாரிப்பாளர்களை மட்டுமல்ல, தேசத்தின் ஒட்டுமொத்த தொழில்துறையின் செயல்திறனையே பாதிக்கின்றன.
இந்நிலையில் போலி தயாரிப்புகளின் உச்சமாக தற்போது அத்தியாவசிய உணவுப் பொருளான முட்டைகளையும் விட்டு வைக்கவில்லை சீனர்கள். போலி முட்டை தயாரிக்க 7 வித ரசாயனங்களை பயன்படுத்துகிறார்கள் சீனர்கள். அதில் கால்சியம் கார்பனேட், ஸ்டார்ச், ரெசின், ஜெலட்டின், அலும் மற்றும் சில ரசாயனங்கள் அடக்கம். இந்தப் படத்தில் போலி முட்டை தயாரிக்க உதவும் கால்சியம் கார்பனேட் ஒரு பாத்திரத்திலும், மஞ்சள் கருவுக்கு நிறம் சேர்க்க மஞ்சள் வண்ணக்கலவையும், மஞ்சள் கரு மற்றும் வெள்ளைப் பகுதி உருவாக்கும் மோல்டுகள் அருகருகே வைக்கப்பட்டுள்ளன.

ரசாயனங்களைக் கலந்து போலியாகத் தயாரிக்கப்பட்ட மஞ்சள் கரு மோல்டில் ஊற்றப்படுகிறது. மஞ்சள் கருவின் மேலே கால்சியம் கார்பனேட் மற்றும் சில ரசாயனங்கள் உதவியால் வெள்ளைக் கரு உருவாக்கப் படுகிறது. சற்று நேரத்தில் மஞ்சள் கருவைச் சுற்றி வெள்ளைப்பகுதி தயார். பின்னர் இது ஒரு மணி நேரம் காய வைக்கப்படுகிறது.
பாரபின் மெழுகில் தோய்த்தெடுக்கப்படும் போலி முட்டை. பிறகு, அதன்மேல் செயற்கை ஓடு பொருத்தப் படுகிறது. போலி முட்டையை உண்பதால் உடலில் மெது மெதுவாக விஷம் ஏறுகிறது என்றும், இதன் விளைவுகள் மோசமாக இருக்கும் என்றும் எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.

உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடு , வல்லரசு என கூறப்படுகின்ற  சீன தேசம், போலிகளின் சொர்க்கம் ஆகிவிட்டது. இது எத்தனை காலம் நீடிக்கும் எனபது தரமான பொருள்களையே வாங்க  வேண்டும் என்ற மக்களின் மன உறுதியை பொறுத்துதான் இருக்கும்.


No comments:

Post a Comment