சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

7 Mar 2015

தொடரும் பள்ளி வேன் விபத்து: அலட்சியத்தில் அதிகாரிகள்!

மிழகம் முழுவதும் தொடர்ந்து பள்ளி வேன்கள் விபத்துக்குள்ளாகி, அதன் மூலம் பலியாகும் மாணவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே வருகிறது. இந்த தொடர் விபத்துக்கு அரசு அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என குமுறுகின்றனர் பெற்றோர்.

கடந்த 2009ஆம் ஆண்டு வேதாரண்யத்தில் உள்ள தனியார் பள்ளி வேன் மாணவர்களை ஏற்றிக்கொண்டு சென்றது. அதை ஓட்டிய டிரைவர் போன் பேசிக்கொண்டே வேனை இயக்கி இருக்கிறார். அப்போது திடீரென எதிரே வந்த பஸ்ஸூக்கு வழிவிட முயற்சித்த போது எதிர்பாராத விதமாக வேன் அருகில் இருந்த குளத்திற்குள் விழுந்தது. 

இந்த விபத்தில் சிக்கிய மாணவர்களை காப்பாற்ற நினைக்காமல் வேன் டிரைவர் வேனில் இருந்து குதித்து தப்பி ஓடிவிட்டார். இதில் பத்து மாணவர்களும், உதவியாளரும் பலியானார்கள். இதையடுத்து, பள்ளி நிர்வாகத்தின் அலட்சியத்தால்தான் இந்த விபத்து நடந்துள்ளதாக தொடரப்பட்ட வழக்கில், உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, பெயரளவுக்கு மட்டுமே அதிகாரிகள் பள்ளி வாகனங்களை சோதனை செய்தனர்.

இதேபோல், கடந்த 13ஆம் ஆண்டு ஜூன் மாதம் புதுக்கோட்டையில் பள்ளிக்கு செல்வதற்காக அரசு பேருந்தை மாணவர்கள் நிறுத்தியபோது, அந்த பேருந்து நிற்காமல் சென்று விட்டது. இதையடுத்து, லோடு ஆட்டோவில் ஏறி மாணவர்கள் பள்ளிக்கு சென்றனர். அப்போது அந்த ஆட்டோ மீது டாரஸ் லாரி மோதி 10 மாணவர்கள் பலியானார்கள். அந்த அரசு பேருந்து டிரைவர் பேருந்தை நிறுத்தியிருந்தார் இந்த விபத்து தவிர்க்கப்பட்டிருக்கும்.
இதேபோல், நேற்று அரியலூரில் இயங்கி வரும் தனியார் பள்ளியின் வேன் மாணவர்களை ஏற்றிக்கொன்டு கல்லங்குறிச்சி பிரிவு ரோடு அருகே சென்ற போது எதிரே வந்த டிப்பர் லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில், 2 மாணவர்கள் உள்பட 4 பேர் பலியாகியுள்ளனர்.

அரியலூர் சிமெண்ட்களின் நகரம் என்பதால் ஒரு நாளைக்கு ஐநூறுக்கும் மேற்பட்ட லாரிகளும், டாரஸ் வண்டிகளும் அதிவேகமாக செல்வதால் பல்வேறு விபத்துகள் ஏற்பட்டு, பல்வேறு உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. எனவே, இந்த விபத்துக்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதேபோன்று தமிழகம் முழுவதும் தனியார் பள்ளி வேன்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகி, பலியாகும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கு அரசு அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என குமுறுகின்றனர் பெற்றோர்.

''இன்று வரை பல்வேறு பள்ளி வாகனங்கள் விபத்துக்குள்ளாகி ஏராளமான மாணவர்கள் பலியாகியுள்ளனர். இருப்பினும், இதற்கு காரணமான தனியார் பள்ளி நிர்வாகத்தின் மீதோ, வாகனத்தின் டிரைவர் மீதோ அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இது போன்ற உயிரிழப்பிற்கு முக்கிய காரணமே அதிகாரிகள் தான். அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்தால் இதுபோன்ற விபத்துக்கள் நடைபெற வாய்ப்பில்லை. விபத்துக்கள் நடந்த இரண்டு நாட்கள் மட்டும் பெயரளவுக்கு ஆய்வு செய்கிறார்கள். அதன் பிறகு பணத்தை வாங்கிக்கொண்டு அந்த நிகழ்வை மறந்துவிடுகிறார்கள்'' என குற்றம் சாட்டுகின்றனர் பொதுமக்கள்.

இதற்கிடையே, ''பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பள்ளி வாகனத்தில் அனுப்புவதை கெளவரமாக நினைக்கிறார்கள். ஆனால் அந்த வாகனத்தின் டிரைவர் சரியானவரா, அவரிடம் லைசன்ஸ் உள்ளதா? வாகனத்தில் சரியான எண்ணிக்கையில் குழந்தைகளை ஏற்றுகிறார்களா என்று எந்த பெற்றோர்களும் கவனிப்பதும் இல்லை, இதுகுறித்து பள்ளி நிர்வாகத்திடம் கேட்பதும் கிடையாது'' என்ற குற்றச்சாட்டும் எழுகிறது.

அதிகாரிகள் தங்களது பணியை சரியாக செய்தால் இதுபோன்ற விபத்துக்களை பெருமளவு குறைக்கலாம். அதேநேரத்தில் பெற்றோர்களும் இதுகுறித்து விழிப்புடன் செயல்படுவது நல்லது.

No comments:

Post a Comment