சொந்த மின் உற்பத்தியை அதிகரிக்காமல் தனியாரி டமிருந்து அதிக விலை கொடுத்து மின்சாரத்தை வாங்கியதால் தான் தமிழ்நாடு மின்வாரியத்தின் கடன் ரூ.70ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்ட மன்ற குழுத்தலைவர் கே.பாலபாரதி சட்டமன்றத்தில் பேசினார்.
பேரவையில் நேற்று நடந்த தமிழக அரசின் நிதி நிலை அறிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று பாலபாரதி எம்.எல்.ஏ, “ மின்சாரத் தை பொறுத்தவரை நீண்டகாலம், இடைக்காலம் என்று அனைத் தையும் சேர்த்துதான் தனியாரிடமிருநது கொள்முதல் செய்வதாக அரசு கூறுகிறது. இந்த ஆட்சியில் எவ்வளவு மின்சாரம் கூடுதலா க உற்பத்தி செய்யப்பட்டுள்ளது என்ற விவரங்கள் பட்ஜெட்டில் இல்லை
.
மின்வாரியத்தின் மொத்த கடன் ரூ.74ஆயிரத்தி 113 கோடியாக உள்ளது. தோட்டத்தில் பாதி கிணறுபோன்று அரசின் மொத்த கடனில் சரிபாதியாக இது உள்ளது. உள்ளது. இதற்கு காரணம் என்னவென்றால் போதுமான மின்சாரத்தை அரசே உற்பத்தி செய்யாமல் தனியாரிடமிருந்து மின்சாரத்தை கூடுதல் விலை கொடுத்து கொள்முதல் செய்வதுதான் என்று குற்றஞ்சாட்டிப் பேசினார்.
இதற்கு பதிலளித்த மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், “அதிமுக ஆட்சிக்காலத்தில் பவானி கட் டளை மின்திட்டம் பிரிவு 1ன் மூலமாக 30 மெகாவாட் உற்பத்தி செய்யப்பட்டது. பெரியார் மின்நிலையம் யூனிட் ஒன்றில் 35 மெகாவாட் மின்சாரத்தை தரம் உயர்த்தி 42 மெகாவாட் உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் மூலம் கூடுதலாக 7 மெகாவாட் கிடைத்துள்ளது. வைகை அணை நீர்மின்சத்தி திட்டத்தின் மூலம் 2.5 மெகாவாட். ஆக 2011-12 ல் மொத்தம் 139 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
2012-13ல் சிம்மாதிரி யூனிட் 3ல் இருந்து 95 மெகாவாட், வல்லூரில் என்.டி.பி.சியுடன் கூட்டு ஒப்பந்தம் மூலமாக 69 மெகாவாட், பெரியார் மின் உற்பத்தி நிலையத்தில் 35 மெகாவாட் 42 மெகாவாட்டாக உயர்த்தப்பட்டதால் 7 மெகாவாட், பவானி கட்டளை தடுப்பணை யூனிட் 2ல் இருந்து 9 மெகாவாட் . ஆக மொத்தமாக 2012-13ல் 466.5 மெகாவாட் கூடுதலாக உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
2013-14ல் தமிழ்நாடு மின்சாரவாரியமும் தேசிய அனல் மின்கழகமும் இணைந்து வல்லூரில் யூனிட் 2 ன் மூலம் 450 மெகாவாட், மேட்டூர் அனல் மின்நிலையத்தில் இருந்து 600 மெகாவாட். வடசென்னை அனல் மின்நிலையத்தில் இருந்து 600 மெகாவாட், பி. ஆர் எனர்ஜி மூலமாக 7 மெகாவாட். பவானி கட்டளை தடுப்பணை 3 இல் இருந்து 30 மெகாவாட். ஆக மொத்தம் 2013-14ல் 1582 மெகாவாட் உற்பத்தி செய்யப் பட்டுள்ளது.
2014-15ல் தேசிய அனல் மின் கழகம் நிலை 2ல் இருந்து 600 மெகாவாட், மத்திய அரசிமிருந்து கிடைத்தது 562 மெகாவாட். ஆக இந்தாண்டு 1162 மெகாவாட் மின்சாரம் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மின் தொகுப் பில் இணைக்கப்பட்டுள்ளது. கடந்த 4 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் 3354.5 மெகாவாட் அளவுக்கு மின் உற்பத்தி செய்யப்பட்டு மின் தொகுப்பில் இணைக்கப்பட்டுள்ளது.
2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரை திமுக ஆட்சியில் அமராவதி சிறு மின்திட்டத்தில் இருந்து 4 மெகாவாட், பவானி கட்டளை கால்வாய் திட்டத்தில் இருந்து 30மெகாவாட், பெரியார் வைகை மின்திட்டத்தில் இருந்து 4மெகவாட், வழுதூர் எரிவாயு உற்பத்தி நிலையத்தில் இருந்து 92.52 மெகாவாட், கைகா மத்திய அரசு அணு மின் நிலையத்தில் இருந்து மாநிலத்தின் பங்கு 36 மெகாவாட், பயனீர் என்ற சுயேட்சையான தனியார் நிறுவனத்திடமிருந்து மொத்தமாக தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு கிடைத்தது உள்பட மொத்தம் 206.2 மெகாவாட் தான் உற்பத்தி செய்யப்பட்டது.
திமுகதான் தனியாரிடமிருந்து மின்சாரத்தை வாங்க ஒப்பந்தம் போட்டது. கூடுதலாக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவாக நீங்கள் கூறும் அந்த நான்கு தனியார் மின் நிலையங்களிடம் கொள்முதல் ஒப்பந்தம் போட்டதே திமுக ஆட்சிதான். திமுக ஆட்சியில் 110மில்லியன் யூனிட் மின்சாரத்தை ஒரு யூனிட் 20 ரூபாய் என்ற விலையில் 2200 கோடி கொடுத்து தனியாரிடமிருந்து வாங்கியுள்ளனர். சராசரியாக ரூ.15.50 காசு கொடுத்து வாங்கியுள்ளார்கள். திமுக ஆட்சியல் வாங்கிய மின்சாரத்தில் சரிபாதிதான் அதிமுக ஆட்சியில் வாங்கப்பட்டுள்ளது. கொள்முதல் விலை15 ருபாயில் மத்திய அரசுக்கு மூல உற்பத்தி பொருள் என்ற வகையில் 11 ருபாய் 50காசு சென்று விடுகிறது.
அதாவது எரிவாயு அல்லது டீசல் என்றால் ஐஓசி அல்லது பிபிசிஎல் போன்ற பொதுத்துறை எண்ணை நிறுவனங்களிடமிருந்துதான் உற்பத்திப்பொருள் கொள்முதல் செய்யப்படுகிறது. எனவே தனியார் நிர் ணயித்துள்ள விலையில் 80விழுக்காடு தொகை மத்திய அரசுக்குதான் செல்கிறது. ஒரு யூனிட்டுக்கு தனியார் மின் நிறுவனங்களுக்கு கிடைக்கும் தொகையோ ரூ.1.50 பைசாதான். மாநில அரசு மின்உற்பத்தி யில் துண்டுவிழுந்தால் தான் தேவைப்பட்டால் சில மணிநேரங்களுக்கு மட்டும் அவசரத் தேவைக்காக தனியாரிடமிருந்து ரூ.5.50 பைசா என்ற வகையில் மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது.
தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போட்டபடி கொள்முதல் செய்தாலும் ரூ.1.50 காசு கொடுக்க வேண்டும்., கொள்முதல் செய்யாவிட்டாலும் கொடுத் தாக வேண்டும். அது ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட கட்டணமாகும். ஒப்பந்தம் போட்டது திமுக, வாங்கியது அவர்கள். பற்றாக்குறை ஏற்பட்டால் தான் அதிமுக அரசு தனியாரிடமிருந்து மின்சாரத்தை வாங்குகிறது. இது எல்லா மாநிலங்களும் செய்வது தான். அதிமுக அரசை பொறுத்தவரை மின்உற்பத்தியை அதிகரித்து வருகிறது. தேவைப்பட்டால் தான் தனியாரிடமிருந்து மின்சாரத்தை வாங்கி வருகிறது" என்றார்.

No comments:
Post a Comment