சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

26 Mar 2015

'கோப்ப்ப்ப்ப்ப்பால் .... கோப்ப்ப்ப்ப்ப்பால்'

ம்ம தமிழ் சினிமால அழகான ஹீரோயின்கள் நிறைய பேர் இருந்திருக்காங்க. இப்பவும் இருக்காங்க. ஆனா வசீகரமான சொந்தக் குரலில் பேசி நடிக்கும் நடிகைகள் ரொம்பக் குறைவு. அந்த காலத்தில நடிகைகளுக்கு  தாய்மொழி வேறாக இருந்தாலும், தமிழைக்  கத்துகிட்டு சொந்தக் குரலில் பேசி, பாடி நடிச்சிருக்காங்க.

அதற்குக் காரணம் அப்போ இருந்த டைரக்டர்கள் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்தாங்க. நடிகைங்களுக்கு ஸ்கோப் இருக்குற கதைகளும் அப்போ நிறைய சினிமாவாக எடுக்கப்பட்டது. அதற்கு அந்தக் கால டைரக்டர்கள், நடிகர்கள் மற்றும் நடிகைகள் நாடகங்களிலிருந்து சினிமாவுக்கு வந்ததும் ஒரு காரணம்.

ஆரம்ப காலங்களில் தமிழ் சினிமாவில் தென்னிந்திய நடிகைகளின் ஆதிக்கம்தான் இருந்தது. ஒரு கால கட்டத்துல வட இந்தியாவிலிருந்து இருந்து நடிகைங்களை வரவழைச்சு தமிழ் படங்களில் நடிக்க வைப்பது ஒரு பேஷன் ஆச்சு. அதுக்கப்புறம் நடிகைகள் சொந்தக்குரலில் பேசி நடிக்கும் வழக்கம் காணாமப் போயிடுச்சு.

இப்போ சொந்தக் குரலில் தெளிவா தமிழ் பேசி நடிக்கிற ஹீரோயின்கள் அதிகமாக இல்லை. ஏன்னா பெரும்பாலான நடிகைகள் வடநாட்டுல இருந்து வருவதே. அதுவுமில்லாம இப்போ தமிழை கத்துகிட்டு சொந்த குரலில் பேசி நடிக்கிற அளவுக்கு அவங்களுக்கு டைம் இல்லை.

இன்னொரு முக்கியமான காரணம் அழகான ஹீரோயினா இருந்தாலும் சில பேருக்கு குரல் அவ்வளவு வசீகரமாக இருப்பதில்லை. அதனால் அவங்க உருவத்துக்கு பொருந்துகிற டப்பிங் ஆர்டிஸ்ட்டுகளின் குரலை தேர்வு செஞ்சு படத்துல உபயோகப்படுத்திக்கறாங்க. 

நடிகை பானுமதியோட தாய்மொழி தெலுங்குன்றதால அவங்க வசனம் பேசும்போது தெலுங்கு மொழி பாதிப்பு இருக்கும். ஆனாலும் அவங்க சொந்தக் குரலில் பேசி நடிச்சாங்க. பல படங்களில் நல்லா பாடவும் செஞ்சாங்க.

நடிகை சாவித்திரியின் தாய்மொழி தெலுங்கு. ஆனா அவங்களோட ஆரம்பகால படங்கள்ல தெலுங்கு பாதிப்பு இருந்தாலும், அதுக்கப்புறம் பல படங்களில் தமிழ்ப் பெண் போலவே தமிழ் பேசி நடிச்சிருப்பாங்க.

கன்னடத்துப் பைங்கிளி நடிகை சரோஜா தேவி சொந்தக் குரலில் தமிழ் பேசி பல படங்களில் நடிச்சிருக்காங்க. ஆனா படங்களில் அவங்க தமிழ் பேசும்போது கன்னடத்தின் பாதிப்பு அதிகமாக இருக்கும். 'புதிய பறவை' படத்துல சரோஜா தேவி நம்ம நடிகர் திலகத்தை 'கோப்ப்ப்ப்ப்ப்பாபால்' அப்டின்னு கூப்பிடுறதை இன்னிக்கும் பல நிகழ்ச்சிகளில் மிமிக்ரி ஆர்டிஸ்ட்கள் இமிடேட் பண்ணிக்கிட்டு இருக்குறாங்க.

நடிகை ஊர்வசி பல படங்களில் சொந்தக் குரலில் பேசி நடிச்சிருக்காங்க. அவங்க தாய்மொழி மலையாளம்ன்றதால அவங்க பேசுற தமிழில் மலையாளத்தின் பாதிப்பு அதிகமாக இருக்கும்.

தென்னிந்திய நடிகைகளைவிட வடஇந்திய நடிகைகள் அதிகமாக தமிழ்ப்படங்களில் நடிக்க வந்ததால, பெரும்பாலானவர்கள் சொந்தக் குரலில் பேசி நடிக்கவில்லை. அப்படி வந்தவங்களில் ஒரு சிலர் மட்டும் சொந்தக் குரலில் பேசி நடிக்கும் ரிஸ்க் எடுத்தாங்க. ஆனா அவங்களும் அதைத் தொடரவில்லை.

'பஞ்ச தந்திரம்' படத்துல நடிகை தேவயானி சொந்தக் குரலில் பேசி நடிச்சிருப்பாங்க. அந்த படத்துல ஒரு சீன்ல "எவ்ளோ... பெரிய மாத்ர" அப்டின்னு தேவயானி சொல்ற டயலாக், படம் ரிலீஸ் ஆன சமயத்துலயும் சரி, இப்பவும் சரி ரொம்ப பாப்புலர்.

'மாயாவி' படத்துல நடிகை ஜோதிகா சொந்தக் குரலில் பேசி நடிச்சிருப்பாங்க. ஆனா அந்த படத்துல ஜோதிகா பேசுன டயலாக் ரொம்பக் கம்மி. எப்ப பார்த்தாலும் அழுதுட்டே, ஃபேஸ் எக்ஸ்பிரஷன்ஸ்-ஐ வச்சே ஒருமாதிரியா சமாளிச்சிருப்பாங்க.

"ஜெயம்கொண்டான்" படத்துல நடிகை பாவனா சொந்தக்குரலில் பேசி நடிச்சிருப்பாங்க. அவங்க தாய்மொழி மலையாளம் என்பதால அவங்க படத்துல தமிழ் பேசி நடிச்சிருந்தாலும் ஏதோ கேரளால ஸ்கூலில் படிக்கிற ஒரு பொண்ணு தமிழ் பேசுற மாதிரியே இருந்தது.

குஷ்பூ, சிம்ரன், நதியா போன்ற நடிகைகள் படங்களில் கடைசி வரை டப்பிங் ஆர்டிஸ்ட் உதவியோடு பேசி நடிச்சிட்டு, சொந்தக் குரல் பரிசோதனை செய்யாமலேயே விட்டுட்டாங்க. 

ஆனால் இப்போ டிவி நிகழ்ச்சிகள்ல அவங்க சொந்தக் குரலைக் கேட்கும்போது நல்லவேளை படங்கள்ல ரிஸ்க் எடுக்காம விட்டது நல்லதுதான் போலன்னு நினைக்கத்தோணுது.

பிறமொழி நடிகைகள் தமிழ்ப்படங்களில் என்னதான் தன்னோட திறமையை வெளிப்படுத்தினாலும், சொந்த குரலில் பேசாத ஒரே காரணத்துக்காக அவங்களுக்கு தேசிய விருது போன்ற விருதுகள் எதுவும் கிடைக்கிறதில்லை.


இன்னிக்கி தமிழ்நாட்டுல பொறந்தவங்க பேசுற தமிழ் , தமிழ் தெரியாதவங்க கஷ்டப்பட்டு தமிழ் பேசுற மாதிரிதான் இருக்கு. டிவில பேசுற தமிழ் அதவிட மோசம். தமிழ் நல்லா பேசத் தெரிஞ்ச நடிகைகள் வேணும்னு நம்ம இயக்குனர்கள் ரொம்ப காலமாக தேடிக்கிட்டே இருக்காங்க. இன்னும் கிடைச்ச மாதிரி தெரியலை.

இப்போ தமிழ் சினிமால இருக்குற ஹீரோயின்களோட வெற்றிக்கும், வளர்ச்சிக்கும் காரணம் அவங்களோட அழகான உருவம் மட்டும் இல்லை, திரையில் படம் பார்க்கும்போது நாம கேட்கும் அந்த டப்பிங் குரலும்தான். அந்த வசீகரமான குரலுக்குச் சொந்தக்காரர்கள் டப்பிங் கலைஞர்கள்தான்.

இன்னிக்கு டிரெண்ட்படி ஹீரோயின்களோட வெற்றிக்கு டப்பிங் கலைஞர்களின் உழைப்பும், பங்களிப்பும் ஒரு காரணமாக இருக்கு அப்படிங்கறதுதான் உண்மை.


No comments:

Post a Comment