முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருதை, அவரது வீட்டிற்கே நேரில் சென்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வழங்குகிறார்.
1942ஆம் ஆண்டு முதல் தீவிர அரசியலில் ஈடுபட்ட முன்னாள் பிரதமர் வாஜ்பாய், இந்தியாவின் 10வது பிரதமராக 16-5-1996 அன்று பதவி ஏற்றார். எனினும், எம்.பி.க்களின் மெஜாரிட்டியை நிரூபிக்க முடியாததால், 13 நாட்களிலேயே அவர் பதவி விலக நேர்ந்தது.
பின்னர், 1998ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றியதையடுத்து, இரண்டாவது முறையும் பிரதமராக அவர் பதவி ஏற்றார். இந்த முறையும் 13 மாதங்கள் மட்டுமே பிரதமராக அவர் பதவி வகிக்க முடிந்தது.
அதன் பிறகு, 1999ல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றதையொட்டி, 13-10-1999 அன்று மூன்றாவது முறையாக வாஜ்பாய் இந்தியாவின் பிரதமர் ஆனார். இம்முறை 5 ஆண்டுகாலம் தனது பதவியை நிறைவு செய்த வாஜ்பாய், பொக்ரான் அணு குண்டு சோதனை, கார்கில் போர் ஆகியவற்றை வெற்றிகரமாக நடத்தினார். இதன் மூலம் இந்தியாவின் ஆற்றலையும், பெருமையயும் உலக நாடுகளுக்கு உணர்த்தினார்.
2005ஆம் அண்டு அரசியலில் இருந்த ஒதுங்குவதாக அறிவித்த வாஜ்பாய், உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது பூரண ஓய்வில் இருக்கிறார்.
இந்நிலையில், வாஜ்பாய் 2014ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் மிக உயர்ந்த பாரத ரத்னா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டதாக மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது.
இதையடுத்து, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, வரும் 27ஆம் தேதி வாஜ்பாய் வீட்டிற்கே சென்று வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருதினை வழங்கி சிறப்பிக்கிறார். இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய மற்றும் பல மாநிலங்களை சேர்ந்த அமைச்சர்கள், பா.ஜ.க.வின் மூத்த தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.

No comments:
Post a Comment