சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

3 Mar 2015

இளைஞர்களை கவரும் 'இளநீர் சர்பத்!'


வ்வொரு மனிதனுக்கும் அவனது திறமைக்கேற்ப ஒரு தொழில். அதில் கடும் உழைப்பைச் செலுத்தி அர்ப்பணிப்புடன் செயல்படுவதில்தான் வெற்றியின் சூட்சுமம் அடங்கியுள்ளது. மதுரை தமிழ்சங்கம் ரோட்டில் 35 வருடங்களாக  கடை வைத்து வியாபாரம் செய்து வருபவர் ரவி. 


கடைக்கு போர்டு இல்லை; காரணம் கடைக்கு பெயரில்லை. குறைந்தபட்ச பிரம்மாண்டமும் இல்லை. ஆனால் வாடிக்கையாளர்கள் எப்போதும் வந்தவண்ணம் உள்ளனர். ரவி விற்பனை செய்வது, இயற்கை பானமாம் இளநீர். 'இளநீர்தான் எங்கு பார்த்தாலும் இருக்கே... அப்படியென்ன ஸ்பெஷல் இந்தக் கடையில்?' என்கிறீர்களா?...

இளநீரோட இனிப்பான சர்பத் கலந்து அதில் அதன் வழுக்கையை சிறிது சிறிதாக நைத்து, கோடைகாலம் என்றால் ஐஸ் சேர்த்து ''இளநீர் சர்பத்'' தயார் செய்து கொடுக்கிறார். இந்த புதுவித சுவைக்கு பிரத்யேகமாக வருகிறார்கள் வாடிக்கையாளர்கள். 

“பெரிய பெரிய நிறுவனங்களின் குளிர்பானங்கள் உடலுக்கு கெடுதி என்பது பலருக்கும் தெரிந்த விஷயம் தான். ஆனால் நாக்கிற்கு சுவை தருவதால் கெடுதல் தெரிந்தும் மக்கள் அவற்றை வாங்கிக் குடிக்கின்றனர். இயற்கை நமது உடலை குளிர்வித்து அதன் மூலம் பல வியாதிகளை தீர்க்கும் அற்புத பானமாக இளநீரை படைத்திருக்கிறது. அவற்றின் மருத்துவ குணங்களை மக்கள் புரிந்துகொண்டால் யாரும் வேறு பானங்க ளின் பக்கம் திரும்பிப்பார்க்க மாட்டார்கள். 

ஆரம்பத்தில் இளநீர் கடைதான் ஆரம்பித்தேன். பிறகுதான் எல்லாரும்போல பத்தோடு பதினொன்றாக ஏன் நாமும் வெறும் இளநீர் விற்கவேண்டும் என முடிவெடுத்து இப்படி சுவையான இளநீர் சர்பத் தயாரித்து கொடுக்க ஆரம்பித்தேன். நல்ல வியாபாரம் நடக்கிறது. கோடை காலங்களில் அதிகமா வருமானம் கிடைக்கும். இரு பெண் குழந்தைகளையும் படிக்க வைக்கிறேன், மழை காலங்களில் கொஞ்சம் சிரமம்தான். ஒரு கிளாஸ் 30 ரூபாய் னு தர்றேன்” என்கிறார் ரவி.
தேனப்பன் என்ற வாடிக்கையாளர், “ நான் வாட்ஸ் அப்ல பார்த்தேன். என் நண்பர்கள் அனைவரும் இங்கு வந்து செல்வோம் வாட்ஸ் அப்ல யும் இவரைப் பற்றி குறுந்தகவல் அனுப்பி வருகிறோம். உங்க இளநீர் சர்பத் நல்லா இருக்கு. கடைக்கு ஒரு பேர் வையுங்க சொன்னா கேட்க மாட்றாரு” என்கிறார் இளநீர் சர்பத் தைச் சுவைத்தபடி.

வெயில் காலம் என்றால் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை கிடைக்கும், மற்ற நாட்களில் மாலை 4 மணியோடு வியாபாரத்தை முடித்துக்கொள்கிறார் ரவி.

''கருப்பு கலரு விஷக்கோலா வேணாம் கரும்பு ஜீஸு,  இளநீர் வாங்கி குடிப்போம்'' என மதுரை இளைஞர்கள் இங்கு முற்றுகையிடுவது பாராட்டுக்குரியது. 



No comments:

Post a Comment