சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

5 Mar 2015

தமிழகத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம்: பின்னணியில் அமெரிக்காவா?

தேனி மாவட்டத்தில் அமைக்கப்படவிருக்கும் நியூட்ரினோ ஆய்வுக்கூடத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் தொடர்பான கருத்தரங்கு சென்னையில் நடந்தது. பூவுலகின் நண்பர்கள் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ் வில், கலிலியோ அறிவியல் மையத்தைச் சேர்ந்த சத்யமாணிக்கம், நானோ இயற்பியல் ஆராய்ச்சியாளர் விஜய் அசோகன் ஆகியோர் நியூட்ரினோ மையத்தால் ஏற்படவுள்ள பாதிப்புகள், அதில் உள்ள சட்ட சிக்கல் கள் போன்றவற்றை விளக்கிப்பேசினர். 

‘மக்களுக்கான அறிவியலா ? முதலாளிகளுக்கான அறிவியலா?’ என்ற தலைப்பில் ஆவணப்படம் திரை யிடப்பட்டது. இதுவரை உலகளவில் நடந்துள்ள நியூட்ரினோ ஆய்வுகள், அதனின் எட்டப்படாத முடிவுகள் , அதன் ஆபத்துகள் குறித்த விளக்கம்  இந்த ஆவணப்படத்தில் இடம் பெற்றிருந்தது.


சத்யமாணிக்கம் பேசும்போது, " நியூட்ரினோ பற்றி அதனை ஆதரிப்பவர்கள் எவ்வுளவு புரிந்து வைத்திருக் கிறார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம். இந்த நாட்டில் அறிவியல் எப்போதும் சாமனிய மக்களுக்கு எட்டாத தூரத்தில்தான் வைக்கப்பட்டிருக்கிறது. இது அறிவியல் வளர்ச்சிக்கு பயன்படுவது ஒருபுறம் இருந்தாலும் அதற்காக மக்களின் வாழ்வாதாரங்கள், இயற்கை வளங்களை அழிப்பது ஏன்? என்ற கேள்விக்கு இதுவரை அரசும், அதிகாரிகளும் பதில் சொல்லவில்லை. இதற்கு முன்னமே கோலார் சுரங்கத்தில் இதை செயல்படுத்தி அது தோல்வியடைந்துவிட்டது.

பின்னர் பல இடங்களை அலசி பிரச்னை வராத இடமாக இதனை தேர்ந்தெடுத்துள்னர். இதற்காக 4.5 லட் சம் டன் வெடி பொருட்களைப் பயன்படுத்தி எட்டு லட்சம் டன் பாறைகளை வெட்டியெடுக்கப்போகிறார்கள்.  இதனால் எந்தப் பாதிப்பும் வராது என்று சொல்லுவதை யாரும் நம்பமாட்டார்கள். இவர்கள் சொல்லும் தண்ணீர் பயன்பாடும் மிகவும் குறைவு. இப்படி எல்லாவற்றையும் மக்களிடம் குறைத்துச் சொல்லி, அமெரிக்க நியூட்ரினோ ஆய்வு மையமான ஃபெர்மி ஆய்வகத்துடன் சேர்ந்து இந்த ஆய்வில் ஈடுபடப்போகிறார்கள். 

அங்கு நியூட்ரினோவை உருவாக்கி கற்றைகளாக செலுத்தி ஆய்வு செய்கி றார்கள். இயற்கை நியூட்ரினோ, செயற்கை நியூட்ரினோ இரண்டுக்கும் அதிக வித்தியாசங்கள் உள்ளன. செயற்கையாக உருவாக்கும் நியூட்ரினோ வுக்கு ஆபத்து பல உண்டு. அடிப்படை விஞ்ஞானத்திற்கு என்று சொல்லி 1500 கோடி ரூபாய் ஒதுக்கும் இந்த அரசு, அதன்மூலம் மறைமுகமாக ஏதோ செய்ய இருக்கிறார்கள். அதற்கு மக்களை பணயம் வைக்கிறார்கள். 

எங்களின் விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கு பல இடங்களில் இருந்தும் மிரட் டல்கள் வருகின்றன. ஆனால், இதனை நாங்கள் மக்களிடம் கொண்டு செல்லாமல் விடமாட்டோம். இதற்கான விழிப்புணர்வைத்தான் மக்களி டம் ஏற்படுத்தப்போகிறோம். மக்கள் எங்களுடன் கைகோர்க்க வேண்டும்" என்றார்.

வீடியோ கான்பரன்சிங் முறையில் பேசிய விஜய் அசோகன், "மற்ற நாடுகளில் அறிவியல் குறித்த ஆய்வு களை மக்களிடம் தெளிவுபடுத்திவிட்டுத்தான் அதனை துவங்குகிறார்கள். ஆனால், இந்தியாவில் அதன் நிலைமை தலைகீழ். செயற்கையாக உருவாகும் நியூட்ரினோக்களில் கதிர்வீச்சு அபாயம் உள்ளது என்பதை பல ஆய்வுகள் விளக்குகின்றன. இந்த திட்டத்திற்காக சரியான வரைவுகள் இருக்கிறதா என்றால், அதுவும் இல்லை. இது ஒரு ஆரம்பகட்ட ஆய்வு. இதற்காக சமானிய மக்களை வதைக்க வேண்டியது இல்லை. வான் வழியாக தகவல்களை அனுப்பாமல் நியூட்ரினோ கற்றைகள் வழியாக பூமிக்கு அடியில் அனுப்பி பரிசோ திக்க திட்டமிட்டுள்ள அமெரிக்காவிற்கு உதவியாக செயல்படுத்தவே இந்த ஆய்வுமையத்தை நிறுவியிருக் கிறார்கள். 

செயற்கை நியூட்ரினோவால் கதிர்வீச்சு ஏற்படும். உலக வல்லரசின் பொருளாதாரக்காடாக நம் சந்தையை மாற்றி வைத்திருக்கிறார்கள். அதனால்தான் மற்ற நாடுகள் எதிர்க்கும் இந்த திட்டத்தை நம் நாட்டில் செயல் படுத்த இருக்கிறார்கள். இதனைப்பற்றி இதன் திட்ட இயக்குனர் மாண்டல் முதல் எந்த அதிகாரியும் திட்ட அறிக்கையை தெளிவுபடுத்தவில்லை. மற்ற நாடுகளில் அமைக்கப்பட்டுள்ள நியூட்ரினோ ஆய்வகங்கள் செயல்படாமலும், மூடப்பட்டும் வரும் நிலையில் இப்படி ஒரு ஆய்வகம் தேவைதானா?" என்று கேள்வி எழுப்பினார்.

"ஒரு திட்டம் வரும்போது கட்டுமானம், போக்குவரத்துகள், வாழ்வியல் பாதிப்புகள் வருவது இயல்பு என்று வாதம் செய்பவர்கள் அதற்காக பல லட்சம் மக்களை பலிகடாவாக்க முடியாது. அம்மாவைவிட நமக்கு பல்லுயிர் தளமான மேற்கு தொடர்ச்சி மலைகள் முக்கியம். தற்போது பெரிய வரலாற்று முரண் நடை பெற்று வருகிறது.

நமக்கு பல விஷயங்களை சொல்லிக்கொடுத்த தோழர்களுக்கு நாம் இந்த விஷயத்தில் பாடம் புகுத்த வேண்டியுள்ளது. இந்த திட்டத்தால் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்பது எல்லாம் சுத்தப் பொய். தமிழ்நாட்டில் இதனை ஆதரிக்கும் தோழர்கள் , கேரளத்தில் இதற்கான அனுமதியை வாங்க முடி யுமா? தமிழ்நாட்டில் எந்த மாவட்டமும் சுற்றுச்சூழல் பிரச்னையில் சிக் காமல் இல்லை. மாஸ்கோவில் மழை பெய்தால் மதுரையில் குடைபிடிக்கும் பழக்கத்தை தோழர்கள் கைவிட வேண்டும்" என்று ஆவேசப்பட்டார் 'பூவுல கின் நண்பர்கள்' சுந்தர்ராஜன். 

இத்திட்டத்திலுள்ள சட்ட சிக்கல்கள் குறித்து பேசிய வழக்கறிஞர் வெற்றிச் செல்வன், "இது எந்த மாதிரியான திட்டம் என்பது அவர்களுக்கே தெரியா மல்தான் முதலில் இதை அணு உலை மற்றும் அணு உலைக்கழிவு என்ற பிரிவில் மனு போட்டார்கள். இந்த பிரிவுக்கும், இவர்கள் சொல்லும் திட்டத்திற்கும் அணு அளவும் சம்பந்தமில்லை. இதனை நாங்கள் நீதிமன்றத்திற்கு எடுத்து சென்ற பிறகு அதனை திரும்ப பெற்றுக் கொண்டார்கள். மாசுக்கட்டுப்பாடு வாரியம் என்ற ஒன்று இங்கு பெயரளவில் கூட இயங்காத ஒரு துறையாக இருக்கிறது. 

மக்களை எல்லாவிதத்திலும் ஏமாற்றப் பார்க்கும் இந்த அரசு, இதில் மட்டும் எப்படி மக்களிடம் வெளிப்படை யாக இருக்கும் என்று சொல்லமுடியும். அதோடு வருங்காலத்தில் நியூட்ரினோவை ஆயுதமாகவும் பயன் படுத்த சாத்தியக்கூறுகள் உள்ளன. இவர்கள் இதில் வெற்றி எதுவும் அடையாவிட்டால் மலையைக் குடைந்து இவர்கள் கட்டும் அந்த சுரங்கத்தில் அணுக்கழிவுகளைக் கொட்டி வைப்பதற்காகக்கூட இதனை செய்யலாம். காரணம் இந்தியாவில் அதிக அளவில் அணு உலைக்கழிவுகள் தேங்க ஆரம்பித்துவிட்டன.
 

வாழ்வதற்குத் தகுதியற்ற மாநிலமாக தமிழகத்தை மாற்றப் போகிறார்கள். இவர்கள் சொல்லும் அதே வகைப்பாறைகள்தான் கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களிலும் இருக்கிறது. அங்கெல்லாம் ஏன் நியூட்ரினோ ஆய்வகத்தை அமைக்கவில்லை. அப்படியே இது வளர்சிக்கான திட்டமென்றால் அதற்கு ஏன் மற்ற மாநிலங்களும் எங்களுக்குத் தாருங்கள் என்று கேட்கவில்லை. இதில் இருந்தே நம்மைத் திட்ட மிட்டு ஏமாற்றுகிறார்கள் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இதனால்தான் ஊர் ஊராகச் சென்று நாங்கள் மக்களைச் சந்திக்கத் தயாராகி வருகிறோம்” என்றார்.


No comments:

Post a Comment