ஸ்மார்ட்போனில் சார்ஜ் தீர்ந்து போவதும், அந்த நேரத்தில் சார்ஜர் தேடி அலைவதோ அல்லது சார்ஜரை பொருத்த மின்சார வசதியை தேடி அலைவதோ பரவலாக எல்லோருக்கும் ஏற்படும் அனுபவம்தான். ஆனால் வருங்காலத்தில் இந்த பிரச்னை அநேகமாக இல்லாமல் போய்விடும் வாய்ப்பு இருக்கிறது.
எப்போது போனில் சார்ஜ் இல்லாமல் போனாலும் இருந்த இடத்திலேயே சார்ஜ் செய்து கொண்டு விடலாம். இதற்கு சார்ஜரே தேவை இருக்காது. அதெப்படி? என்று ஆர்வத்தோடு கேட்டீர்கள் என்றால், எல்லாம் வயர்லெஸ் செய்யும் மாயம் என்றுதான் சொல்ல வேண்டும்.
ஆம், ஸ்மார்ட்போன் உள்ளிட்ட சாதனங்களை வயர்லெஸ் மூலம் சார்ஜ் செய்து கொள்ளும் முறை தற்போது மெல்ல பிரபலமாகி கொண்டு வருகிறது. இதன் அடையாளமாக ஸ்பைனின் பார்சிலோனாவில் நடைபெற்று வரும் மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் எனும் கேட்ஜெட் கண்காட்சியில், ஸ்மார்ட்போன் உள்ளிட்ட சாதனங்களை சார்ஜ் செய்ய வழி செய்யும் மேஜை, நாற்காலி மற்றும் மின்விளக்கு ஆகியவை அறிமுகம் ஆகியிருக்கிறது. பர்னிச்சர்கள் உலகில் புகழ்பெற்ற ஸ்வீடன் நிறுவனமான ஐகியா இந்த மேஜை, நாற்காலிகளை அறிமுகம் செய்திருக்கிறது.
இந்த நவீன பர்னிச்சர்கள் ஒவ்வொன்றிலும் வயர்லெஸ் சார்ஜிங் பேட் இணைக்கப்பட்டிருக்கும். அவற்றின் மீது போனை வைத்தால் போதும் வயர்லெஸ் உயிர்பெற்று போன் சார்ஜ் பெறத்துவங்கிவிடும். தனியே கேபிள்களை பயன்படுத்தும் அவசியம் கிடையாது. மேஜை, நாற்காலி என்றால் அவற்றுடன் மின்சார் கேபி ளை இணைக்க வேண்டும். மின் விளக்கு என்றால் அந்த தேவையும் இல்லை. இவை தவிர தனியே சார்ஜிங் பேடையும் ஐகியா அறிமுகம் செய்திருக்கிறது. அவற்றை சுவற்றிலோ அல்லது வேறு எந்த பரப்பிலோ பொருத்தி , வயர்லெஸ் மூலம் சார்ஜ் செய்து கொள்ளலாம்.
வயர்லெஸ் மூலம் சார்ஜிங் செய்யும் வசதி, நவீன வாழ்க்கைக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமையும் என்றாலும் இதை சாத்தியமாக்கும் தொழில்நுட்பம் நூற்றாண்டு பழைமையானது என்பதுதான் சுவாரஸ் யமான விஷயம்.

வயர்லெஸ் சார்ஜிங் முறை மேக்னட்டிக் இண்டக்ஷன் எனும் முறையில் செயல்படுகிறது. இந்த வகை வயர்லெஸ் சாதனத்தில் டிரான்ஸ்மிட்டர் மற்றும் ரிசிவர் என இரண்டு பகுதிகள் இருக்கும். டிரான்ஸ்மிட் டரில் பாயும் மின்சாரம், காந்த மண்டலத்தை உருவாக்கும். இதன் மூலம் ரிசிவரில் வோல்டேஜ் உண்டாகும். இந்த மின்சாரம்தான் சாதனங்களை சார்ஜ் செய்ய கைகொடுக்கிறது. வயர்லெஸ் சாரிஜிங் முறையில் கேபிளுக்கே வேலை கிடையாது.
நவீன சாதனங்களில் அடிக்கடி சார்ஜ் தீர்ந்து போகும் பிரச்னைக்கு தீர்வு காண பலவகையான பேக்கப் வழிகள் உருவாக்கப்பட்டு வரும் நிலையில், வயர்லெஸ் சார்ஜிங் இதற்கான சரியான தீர்வாக அமையும் என கருதப்படுகிறது. ஆனால், இந்த வகையில் சார்ஜிங் செய்து கொள்ள ஸ்மார்ட்போனில் அதற்கு ஏற்ற வசதி இருக்க வேண்டும். புதிய போன்கள் எல்லாம் இந்த அம்சத்துடன்தான் வருகின்றன.
பார்சிலோனா கண்காட்சியில் அறிமுகமாகும் சாம்சங் ஸ்மார்ட்போன் உள்ளிட்ட புதிய போன்களில் இந்த வசதி இருக்கிறது. பழைய போனாக இருந்தாலும் கவலையில்லை, பொருத்தமான சார்ஜிங் கேஸ் மூலம் வயர்லெஸ் சார்ஜிங் வசதியை பயன்படுத்தலாம். வயர்லெஸ் சார்ஜிங் பேட்களும் தனியே சந்தையில் இருக்கும் நிலையில் ஐகியா இதை பர்னீச்சர்களுடன் இணைத்து வீட்டிற்குள் கொண்டு வந்துள்ளது விசேஷம்.

முதல் கட்டமாக, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சந்தைகளில் இந்த வயர்லெஸ் சாதங்கள் அறிமுகமாகி பின்னர் மற்ற நாடுகளுக்கு வர உள்ளது. அநேகமாக மற்ற நிறுவனங்களும் அடுத்தடுத்து இந்த பாதையை பின்பற்றலாம். இவை தவிர ஸ்டார்பக்ஸ் மற்றும் மெக்டோனால்ட்ஸ் போன்ற நிறுவனங்களும் வயலெஸ் சார்ஜிங் வசதியை தங்கள் மையங்களில் அமைத்து வருகின்றன. வருங்காலத்தில் மேலும் பல பொதுஇடங்களில் வயர்லெஸ் சார்ஜிங் மையங்கள் உருவாகலாம்.
ஆகையால் போனில் சார்ஜ் தீரும் பிரச்னையை மறந்தே போகலாம். ஆனால் இதில் உள்ள ஒரே சிக்கல், இப்படி வயலெஸ் மூலம் சார்ஜ் செய்யும் வசதியை வழங்க மூன்று வகையான முறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. மூன்று அமைப்புகள் இவற்றை உருவாக்கி பிரபலமாக்கி வருகின்றன. இவற்றில் கியூஐ எனும் முறையை தான் ஐகியா பின்பற்றுகிறது. வயலெஸ் பவர் கன்சார்டியம் அமைப்பு இதன் பின்னே இருக்கிறது. சாம்சங் போன்றவை இதில் உறுப்பினர்கள்.
இந்த மூன்று அமைப்புகளும் வயர்லெஸ் சார்ஜ் வசதிக்கான பொது வரையறையை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. இல்லை என்றால் ஒரு முறையில் செயல்படும் சார்ஜிங் இன்னொரு முறையில் செயல்படாமல் போகும்.

No comments:
Post a Comment