சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

10 Nov 2014

பாவத்துக்கு தண்டனை இல்லை!



போபால் நகரத்தில் பச்சிளம் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உட்பட 25 ஆயிரம் பேர்களின் உயிரைக்குடித்த அமெரிக்காவின் யூனியன் கார்பைடு கம்பெனியின் அதிபர் வாரன் ஆண்டர்சன், அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள மருத்துவமனையில் கடந்த வாரம் மரணம் அடைந்தார். சட்டத்தின் பிடியில் இருந்து ஓடி ஒளிந்த ஆண்டர்சன், தான் செய்த பாவத்துக்கான தண்டனையை கடைசி வரையில் அனுபவிக்காமல், அமெரிக்காவில் சுகபோகமான வாழ்க்கையை வாழ்ந்துவிட்டு, 93-வது வயதில் இயற்கையாக மரணம் எய்துள்ளார்.


1984, டிசம்பர் 3-ம் நாள். அதிகாலை நேரம். அந்தக் கொடூரச் சம்பவம், உலகத்தையே உலுக்கியது. மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில், அமெரிக்க கெமிக்கல் கம்பெனியான யூனியன் கார்பைடு நிறுவனத்தில் நிகழ்ந்த விஷவாயு கசிவில், ஒரே இரவில் சுமார் 25 ஆயிரம் மக்கள் மாண்டனர். போபால் நகர வீதிகள் எங்கும் பிணக்குவியல்கள். நினைத்துப்பார்க்க முடியாத கொடுமை அது.

கடந்த 29 ஆண்டுகளில் லட்சக்கணக்கான மக்கள் ஊனமுற்றவர்களாக வாழ்ந்து வருகிறார்கள். விஷவாயுவின் தாக்கம் இன்றும் உள்ளது. அங்கு பிறக்கும் குழந்தைகள் ஊனமாகவே பிறக்கின்றன. உலகத்தை உலுக்கிய ஹிரோஷிமா, நாகசாகி குண்டு வெடிப்புச் சம்பவங்களுக்கு இணையான அந்தச் சம்பவம், உலக அரங்கில் மிகப் பெரிய தாக்கத்தை உண்டாக்கவில்லை.

விபத்து நடப்பதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக, யூனியன் கார்பைடு நிறுவனத்தின் இயந்திரங்களை சர்வீஸ் செய்ய அமெரிக்காவில் இருந்து வந்த பொறியாளர்கள், 30-க்கும் மேற்பட்ட இடங்களில் விபத்து நிகழ வாய்ப்புகள் இருப்பதாக எச்சரித்தனர். உடனடியாக இயந்திரங்களை மாற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளனர். அங்கு அடிக்கடி நடந்த விபத்துகள் குறித்தும் பத்திரிகைகள் செய்திகள் வெளியிட்டன. ஆனாலும் அரசு எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. விபத்து நடந்த பிறகு எங்கள் நிறுவனத்தில் இருந்து விஷக்கசிவு வரவே இல்லை என மறுத்தது யூனியன் கார்பைடு.
விபத்து நடந்த நான்கு நாட்களில், இந்திய மண்ணில் இந்திய அரசால் ஆண்டர்சன் கைது செய்யப்பட்டார்

அடுத்த இரண்டு மணி நேரத்தில் அமெரிக்காவிலிருந்து இந்திய அரசுக்கு ஒரு கட்டளை வந்தது. தனி விமானத்தில் ஆண்டர்சனை அமெரிக்காவுக்கு பத்திரமாக அனுப்பி வைத்தது இந்திய அரசு. யூனியன் கார்பைடு நிறுவனத்தின் இந்தியத் தலைவர் கேசுப் மஹிந்திராவுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. ஆனால், ஒருநாள்கூட அந்த நபர் சிறை சென்றது இல்லை. அன்றைய தினமே ஜாமீனில் வந்தார். ஆண்டர்சன், அமெரிக்காவில் தனது காதலியுடன் உலா வந்ததை அமெரிக்க ஊடகங்கள் புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டன.

வழக்கை காலி செய்வதற்காக, தந்திரமாக ஒரு காரியம் செய்தார்கள். கார் விபத்து ஒன்றில் ஆண்டர்சன் இறந்துவிட்டதாக இந்திய நீதி மன்றத்தில் பொய் சொன்னார்கள். அதன் பின்னணியில் காங்கிரஸ் மற்றும் பி.ஜே.பி ஆட்சிகளில் அமைச்சர்களாக இருந்தவர்கள் முக்கியப் பங்கு வகித்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்த வழக்கில், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தீர்ப்பு வந்தது. அந்தத் தீர்ப்பு மிகப்பெரிய அதிர்ச்சியை உண்டாக்கியது. பல ஆயிரக்கணக்கான அப்பாவி உயிர்கள் கொல்லப்பட்டு, அதற்கு இழப்பீடாக வெறும் 47 கோடி டாலர்களை யூனியன் கார்பைடு நிறுவனம் வழங்கியது. அதாவது, ஒவ்வோர் உயிருக்கும் தலா 5 லட்சம் ரூபாய்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதியின் பெயர் அகமதி. அவர், பதவிக்காலம் முடிந்த பிறகு, யூனியன் கார்பைடு நிறுவனத்துக்குச் சொந்தமான அறக்கட்டளையின் தலைவராகப் பொறுப்பேற்றார். யூனியன் கார்பைடு கம்பெனி, தற்போது 'டவ் கெமிக்கல்ஸ்ஆக மாறிவிட்டது. இன்றைக்கு, இந்திய ஆட்சியாளர்களின் ஆசீர்வாதத்துடன் நூற்றுக்கணக்கான 'யூனியன் கார்பைடுகள்இந்திய மண்ணில் சுதந்திரமாகச் செயல்படுகின்றன. ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வாங்கிக்கொடுத்த மூத்த வழக்கறிஞர் ஃபாலி நாரிமன், யூனியன் கார்பைடு கம்பெனிக்கு ஆதரவாக வாதாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது. யூனியன் கார்பைடு கம்பெனிக்கு ஆதரவாக வாதிட்ட இன்னொரு பிரபல வழக்கறிஞர், மத்திய பி.ஜே.பி அரசில் நிதி அமைச்சராக உள்ள அருண் ஜெட்லி.


பாவத்துக்குத் தண்டனையே கிடையாதா?


No comments:

Post a Comment