சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

11 Nov 2014

சேலம் ஸ்டன்ட் கேர்ள்ஸ்!

சென்னை பெண்கள்தான் பைக் ஓட்டுவார்களா என்ன? கொஞ்சம் சேலம் பக்கம் வாங்க சார்?’ என மோட்டார் விகடன் ஃபேஸ்புக்கில் (facebook.com/MotorVikatan) மெசேஜ். கவாஸாகி 250 ஆர், பஜாஜ் பல்ஸர் 220, யமஹா ஸி15 என பவர்ஃபுல் பெர்ஃபாமென்ஸ் பைக்கில் பறந்துகொண்டிருந்தனர் சேலம் கேர்ள்ஸ்.

''நான் ராஜேஸ்வரி. சோனா காலேஜ்ல இன்ஜினீயரிங் படிக்கிறேன். பொண்ணுங்கன்னா, அவங்களோட தனித் திறமையை எல்லா ஃபீல்டுலயும் காட்டணும், சாதிக்கணும்்கிறது என் ஆசை. அதனால, எனக்குப் பிடிச்ச பைக் டிரைவிங்லேயே புதுசா ஏதாவது பண்ணணும்னு நெனச்சேன். பொதுவா, பொண்ணுங்கன்னாவே ஸ்கூட்டிதான் லாயக்குன்னு ஒதுக்குவாங்க. பெரிய பைக், பைக் ஸ்டன்ட் எல்லாமே ஆண்களுக்கானதுனு தனியா சட்டமா இருக்கு?




அந்த எண்ணத்தை முறியடிக்கணும்னு நானும் என் ஃப்ரெண்ட்ஸும் நெனைச்சோம். என் ஃப்ரெண்ட் கலைவாணியோட அண்ணன் இனியவன், சூப்பரா ஸ்டன்ட் பண்ணுவார். அவரோட சாகஸங்களைப் பார்த்துட்டு, எனக்கும் சொல்லிக்கொடுங்கனு கேட்டேன். லீவ் டைம்ல நிறைய பிராக்டீஸ் எடுத்தோம். இப்போ ஸ்டன்ட் ஷோ பண்ணுற அளவுக்கு ரெடி ஆயிட்டோம்!' என சர்ப்ரைஸ் கொடுத்தார் ராஜேஸ்வரி.
'கவாஸாகி நின்ஜா 250 ஆர் பைக், ஓட்டுறதுக்கு ஆரம்பத்துல பயமாதான் இருந்தது. இப்போ கலக்குவோம்ல!' என்று திராட்டிலை முறுக்கினார் கலைவாணி. ''இவங்களோட பைக்குக்கும் என்னோட பைக்குக்கும் இருக்கிற வித்தியாசம் வெயிட்தான். ஏன்னா, நின்ஜா 280 கிலோ. நான் 50 கிலோ. ஆனா, சர்வசாதாரணமா ஸ்டன்ட் செய்ய முடியுது!' என்ற கலைவாணியை இடைமறித்தார் அவரின் தங்கை கனிமொழி.
''நான் எஸ்.ஆர்.எஸ் காலேஜ்ல இன்ஜினீயரிங் படிக்கிறேன். யமஹா ஆர்15 பைக் வெச்சிருக்கேன். இந்த பைக், ரைடிங் போகவும் ஸ்டன்ட் பிராக்்டீஸ் பண்ணவும் ரொம்ப நல்லா இருக்கும். பைக் ஸ்டன்ட் ரொம்ப ரிஸ்க்; சேஃப்டி ரொம்ப முக்கியம். பிராக்டீஸ் செய்யும்போது சேஃப்டி கியர் இல்லாம பைக்கைத் தொட மாட்டோம். சீக்கிரமே பெரிய பைக் ஸ்டன்ட் ஷோ பண்ணிக் காட்டுறோம். அப்போ வாங்க!'' என்றார் கனிமொழி.  
''வீட்டுல எங்களை சப்போர்ட் பண்றாங்க. ஒரு வட்டம் போட்டு அதுக்குள்ள எங்களை அடைச்சுவைக்காம, சுதந்திரம் கொடுத்து என்கரேஜ் பண்றதாலதான், நாங்க கொஞ்சமாவது எங்க தனித்திறமையை எட்ட முடியுது!' என்கிறார்கள் உற்சாகமாக!


No comments:

Post a Comment