ஹேய்.. ஹாய்.. என ஆட்டம் போட்டவாறே குதூகலமாய் குளித்தவாறு கும்மாளம் அடித்துக் கொண்டிருக்கிறார்கள் சிறுவர்கள். வரும்போதே சிலர் உணவு பொட்டலங்களுடன் வருவதோடு ஆற அமர குளித்துவிட்டு, கொண்டு வந்த உணவை நண்பர்கள், குழந்தைகளுடன் சாப்பிட்டு விட்டு, மினி குற்றாலத்தில் குளித்த கதகதப்பில் வீடு திரும்புகிறார்கள்.
தேனி மாவட்டம் போடி அருகே உள்ளது அணை பிள்ளையார் தடுப்பணை. பாசனத்துக்காக கண்மாய்களுக்கு தண்ணீர் திறந்து விடுவதற்காக கட்டப்பட்ட இந்த அணையில் கடந்த பத்து ஆண்டுகளாக தண்ணீர் வரத்து இல்லாமல் வறண்டு காணப்பட்டது. தற்போது தேனி மாவட்டத்தைச் சுற்றி பெய்து வரும் கனமழையின் காரணமாக கொட்டக்குடி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓட, இந்த அணை தற்போது ’திடீர்’ மினி குற்றாலமாகியிருக்கிறது. இது நாள் வரையிலும் வறண்ட பூமியை பார்த்த இடத்தில் கொட்டும் அருவி போல் காட்சி அளிக்கும் இந்த அணையை காண மக்கள் வந்த வண்ணம் உள்ளார்கள்.
கொட்டட்டும் பெருமழை!
No comments:
Post a Comment