சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

24 Nov 2014

திருவட்டாரு எம்எல்ஏ லீமாரோஸ்

திருவட்டாரு எம்எல்ஏ லீமாரோஸ் அவரைத் தேடிச் சென்றபோது ஒரு டீக்கடையில் தனியாக நின்று டீ குடித் துக் கொண்டிருந்தார். யாரும் அவரு டன் இல்லை. தனி மனுஷி!

ஒருமுறை மக்கள் பிரச்சனைக்காக அரசு அலுவலகத்திற்குப் போன போது உள்ளே விட மறுத்துட்டாங்க. எம்எல்ஏன்னா ஆடம்பரமாக பெரிய படையோட வரணும்னு எதிர்பார்க்குறாங்க அதிகாரிங்க. என்னோட அடையாள அட்டையைக் காட்டினதற்கு அப்புறம்தான் உள்ளேயே விட்டாங்கஎன்கிறார். இந்தக் காலத்திலும் எம்எல்ஏவுக்கான எந்த அடையாளமும் இல்லாமல் இருப்பவர்.எங்க போனாலும் பஸ்தாங்க. பலமுறை எம்எல்ஏன்னு நடத்துனர் கிட்ட சொன்னாக் கூட நம்ப மறுக்கிறாங்க.

சாதாரண குடும்பத்துல இருந்து வந்தவள் நான். ஊர்ல என் அம்மாவும், அப்பாவும் கூலி வேலைக்குப் போறாங்க. இந்த மக்கள் என்னை மாதிரியான ஒரு ஏழ்மையான பின்னணியில் இருந்து வந்தவளை ஏற்றுக் கொண்டாங்க இல்லையா? அவங்களுக்கு தான் நான் நன்றி சொல்லணும்என்று சொல்லும் லீமாரோஸ் பணபலம் இல்லாமல் வெற்றி பெற்ற எம்எல்ஏ.

உங்களுக்கு என்று உள்ள சொத்து என்ன?’ என்றால், பெரியதாக சிரித்த வர்… ‘ஒன்றுமில்ல. 2002ல் இருந்து மூன்று மாசத்துக்கு ஒருமுறை 359 ரூபாய் பிரீமியம் கட்டுற மாதிரி ஒரு எல்ஐசி பாலிசி போட்டேன். அதான் என் சொத்துஎன்று நம்மை பதற்றப் பட வைக்கிறார்.

கட்சி இவருக்கு சம்பளமாக கொடுப்பது மாதம் 4 ஆயிரம்!

சட்டமன்றக் கூட்டத் தொடருக்கு வரும்போது கூட ரயிலில் இரண்டாம் வகுப்புலதான் வருகிறேன். .சி. கோச்ல வரலாமே என்று ரயில் பரிசோதனை அதிகாரிகள் கேட்கிறார்கள். எந்த கிளாஸ்ல வந்தா என்ன சார்? எல்லா ரயிலும் சென்னைக்குதானே வருகிறது?” என்று சொல்லும் லீமா ரோஸ், நன்மாறன் மாதிரியான எம்எல் ஏக்களை  மக்கள் கௌரவிப்பார்களா?No comments:

Post a Comment