சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

28 Nov 2014

அவசர கால அழைப்புக்கு 112.

அவசர கால மருத்துவ உதவிக்கு எண் 108 என்பது நமக்கு எல்லோருக்கும் தெரியும். 108 என்கிற எண்ணில் பிரத்யேகமாக இலவச அவசரகால 

ஊர்த்தியும் இயங்குகிறது.  ஆனால் 112 என்கிற எண்ணுக்குரிய பயன்பாட்டை பலரும் அறிந்து வைத்துக் கொள்வதில்லை. இந்த எண்ணும் முக்கியமான அவசர கால பயன்பாட்டுக்கு உரியதுதான்

மொபைல் போன் சிக்னல் கிடைக்காத இடங்களில் இருந்துகூட இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ள முடியும். தவிர மொபைல் போன் கீ லாக் ஆன நிலையிலும், முக்கியமாக சிம்கார்டு இல்லை என்றாலும், இந்த எண் மூலம் அவசர சேவை பெற்றுக் கொள்ளலாம்

இந்த சேவை பெரும்பாலும் மக்கள் கவனத்துக்கு வராமலேயே உள்ளது. ஆனால் காடுகள், மலை பகுதிகளில்  மாட்டிக் கொள்பவர்களுக்கு செல்போன் நெட்வொர்க் கிடைக்கவில்லை என்றாலும் இந்த சேவை மூலம் அவசர கால உதவி பெற்றுக் கொள்ளலாம்

நெட்வொர்க் குறைவாக கிடைக்கும் இடத்திலும் வாட்ஸ்அப் இயங்கும் என்கிற ஸ்மார்ட்போன் யுகம்தான் என்றாலும், இந்த அவசர கால உதவி எண்களை மறந்து விடாமல் இருப்பது  அவசரத்துக்கு உதவும்.


No comments:

Post a Comment