‘‘உங்க வீட்டுக்காரரோட சம்மதம் இல்லாமத்தான் இந்தப் படத்துல நடிக்கிறீங்களாமே?’’ என்று யாராவது கேட்டால், அவ்வளவுதான்... அழகான அமலா
பால், பொங்கி விடுவார்.
‘‘அமலா அவ்வளவுதான்... ‘வேலையில்லா பட்டதாரி’க்கு
அப்புறம் அமலா பாலைப் பார்க்கவே முடியாது’’ என்று கவலைப்பட்ட ரசிகர்களுக்கு ஒரு
நற்செய்தி: மீண்டும் திரைக்கு வருகிறது ப்யூட்டி. அதுவும் சும்மா இல்லை; பழையபடி ஸ்கூல் யூனிஃபார்மில் நடிக்கிறார் என்பதுதான் இனிப்புச் செய்தி.
ஆனால், சோகமான செய்தி, ஸ்கூல் டிரெஸ் தரிசனம் இங்கில்லை; மலையாளத்தில். ஆம்!
மலையாளத்தில்
‘டிராஃபிக்’ என்னும் படத்தை இயக்கி மெகா
ஹிட் கொடுத்த இயக்குநர் ராஜேஷ் பிள்ளை என்பவரின் ‘மைலி’
என்னும் படத்தில், நிவின் பாலிக்கு ஜோடியாக நடிக்கிறார் அமலா
பால்.
‘‘இந்தப் படத்தில் ஸ்கூல் டிரெஸ்ஸில் நடிக்கும்போது, அது
எனது பழைய நினைவுகளைக் கிளறிவிட்டுவிட்டது. என்
முதல் படமான 'மைனா'
வில் நான் ஸ்கூல் பெண்ணாக வருவேன். அது
செம ஹிட்!
சினிமாவில் என் குரு
பிரபு சாலமன் சார்தான். அவருக்கு எப்போதுமே என்
நன்றி! ஒரு பெண்
பிறந்ததில் இருந்து கடைசி வரை
என்ன மாதிரியான சுக-துக்கங்களைச் சந்திக்கிறாள் என்பது பற்றிய படம்
'மிலி'. இது முழுக்க முழுக்க ஒரு
பெண்ணைச் சுற்றியே... அதுவும் என்னைச் சுற்றியே நகரும் கதை
என்பதால், இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன்!
24 மணி நேரமும் ஷூட்டிங் போய்க் கொண்டிருக்கிறது. இயக்குநர் ராஜேஷ் பிள்ளை மிகவும் திறமைசாலி. இதுவும் மெகா
ஹிட் ஆக வேண்டும். இங்கு என்
கனவு படமாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது!’’ என்று திருவனந்தபுரத்தில் ஷூட்டிங்கில் இருந்தபடியே, தனது
ஃபேஸ்புக் பக்கத்தில் போஸ்ட் செய்திருக்கிறார் அமலா.
சட்டுப்புட்டுன்னு தமிழுக்கு வாங்க!
|
No comments:
Post a Comment