சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

17 Nov 2014

சாலை விதிகளைப் பின்பற்றினால் பெட்ரோல், உணவுக் கூப்பன் இலவசம்!

மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள்... உங்களில் எத்தனை பேர் சாலை விதிகளைச் சரியாகப் பின்பற்றுகிறீர்கள்? காரோ பைக்கோ ஓட்டும்போது, என்னென்ன டாக்குமென்ட்ஸ் இருக்க வேண்டும் என்கிற விஷயமாவது உங்களுக்குத் தெரியுமா? அப்படியே இருந்தாலும், ‘இன்னிக்கு ஒரு நாள் ஹெல்மெட் இல்லேன்னா என்ன... அதான் எல்லா டாக்குமென்ட்ஸும் இருக்கே?’ என்ற அலட்சியப் போக்கு உங்களிடம் எட்டிப் பார்க்குமா இல்லையா?

ஆமா... அப்படியே ரோடு ரூல்ஸை ஃபாலோ பண்ணிட்டாலும்..?’ என்று நம்மைப்போல் சலிக்கும் கம்யூட்டர்களைச் சமாளிக்கும் விதமாக, குஜராத் மாநிலத்தின் அஹமதாபாத்தில், வித்தியாசமான ஒரு முயற்சி காவல்துறையால் கடைப்பிடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

ஹெல்மெட் அணிவதிலிருந்து, லைசென்ஸ், ஆர்.சி. புக், இன்ஷூரன்ஸ் என்று சகல இத்தியாதிகளையும் வைத்திருந்து, சிக்னல்களையும் மதித்து, முன்னே செல்பவர்களுக்கு வழிவிட்டு ஓட்டும் அசாதாரணமான கம்யூட்டர்களுக்கு, அஹமாதாபாத் காவல்துறை, ஒரு லிட்டர் பெட்ரோல் மற்றும் உணவுக் கூப்பன்களைப் பரிசாக வழங்கியிருக்கிறது. ரமோல் நகரத்தில், ஒரு மெயின் சிக்னலில் வாகனங்களை நிறுத்தி, உண்மையாக சாலை விதிகளைப் பின்பற்றுபவர்களுக்கு இந்த இலவசத் திட்டத்தை நடு சிக்னலில் அமல்படுத்தி வருகிறது காவல்துறை.


‘‘நேற்று காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை ரமோல் நகரில் வெறும் 58 பேர் மட்டுமே சாலை விதிகளைச் சரியாகப் பின்பற்றி இருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு லிட்டர் பெட்ரோலுக்கான இலவச கூப்பனைப் பரிசாக அளித்திருக்கிறோம். பொதுமக்கள் மனதில், காவல்துறை என்றாலே வாகனங்களைப் பிடித்து அபராதம் வசூலிப்பவர்கள்தான் என்கிற முத்திரை பதிந்திருக்கிறது. இதன் மூலம் அவர்களுக்கு எங்களின் மேல் நன்மதிப்பும், சாலை விதிகளைப் பின்பற்றக் கூடிய ஆர்வமும் அதிகரிக்கும் என்று நம்புகிறோம்’’ என்று கூறினார் இன்ஸ்பெக்டர் சொலாங்கி.

இதற்காக பூர்ணிமா சர்வீஸ் ஸ்டேஷன் என்னும் பெட்ரோல் பங்க் உரிமையாளர்களிடம் பேசி நவம்பர் 20ம் தேதி வரை 5 நாட்களுக்கு இதற்கான ஒப்பந்தத்தைப் பெற்றிருக்கிறார் சொலாங்கி. நேற்று 100க்கும் மேற்பட்டோர் உணவுக் கூப்பன்களைப் பரிசாகப் பெற்றதையும் மகிழ்ச்சியாகச் சொன்னார் சொலாங்கி.

பரிசு கிடைச்சா என்ன? கிடைக்கலேன்னா என்ன? நாமும் சாலை விதிகளைப் பின்பற்றுவோமே!

No comments:

Post a Comment