சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

21 Nov 2014

தோனியின் நம்பர் 7!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனியை தெரியாதவர்கள் இருக்க மாட்டார்கள். அப்படி தெரிந்தவர்களுக்கு அவரது 7ம் நம்பர் பற்றி தெரிந்திருக்குமா என்றால்? உடனே நினைவுக்கு வருவது அவரது டி-ஷர்ட் எண் 7 என்பது மட்டும்தான். அது தவிர சில சுவாரஸ்யமான விஷயங்கள் அந்த 7ம் எண்ணுக்கு பின்னால் உள்ளன.அவற்றில் சில இதோ...

1.தோனி சர்வதேச கிரிக்கெட்டில் கேப்டனாக தனது ஏழாவது வருடத்தை பூர்த்தி செய்திருக்கிறார். 2007ம் ஆண்டு டி20 உலகக்கோப்பையில் கேப்டனாக்கப்பட்ட தோனி இதோடு ஏழு வருடங்கள் இந்திய அணிக்காக தலைமை தாங்கியுள்ளார்.

2.டி20 உலகக்கோப்பை,சாம்பியன் டிராபி, 2011ம் ஆண்டு உலகக்கோப்பை,இரண்டு ஐபிஎல் கோப்பை, இரண்டு சாம்பியன் லீக்  கோப்பை என 7 மிகப்பெரிய கோப்பைகள் தோனியின் கணக்கில் உள்ளன.
3.ஐபிஎல் போட்டிகளில் ஏழு ஐபிஎல் தொடரிலும் ஒரே அணியை வழிநடத்திய கேப்டனும் தோனிதான். ஏழு தொடரிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்தியுள்ளார்.


4.தோனியின் பிறந்தநாள் ஜூலை 7, அதுவும் கூட (7-7) தான்!

5.இந்தியா,இந்தியா , உலக லெவன், சென்னை சூப்பர் கிங்ஸ், பிகார், ஜார்கண்ட், ஆசியா லெவன் ஆகிய ஏழு அணிகளை தோனி வழிநடத்தியுள்ளார்.

6.தோனி ஆரம்பித்துள்ள வாசனை திரவிய நிறுவனத்தின் பெயர் எம்.எஸ்.தோனி 7

7. ஏழு உலககோப்பை போட்டிகளில் ஆடிய வீரர் என்ற பெருமையும் தோனியையே சாரும்.ஐந்து முறை டி20 உலக கோப்பை போட்டியில் கேப்டனாகவும், 2007ம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பையில் வீரராகவும், 2011ம் ஆண்டு உலகக்கோப்பையில் கேப்டனாகவும் செயல்பட்டார்.


இப்படி தோனியின் ஏழாம் எண் ரகசியங்கள் அதிகம். ஏழாவது ஆண்டில் கேப்டனாக அடியெடுத்து வைக்கும் தோனிக்கு அடுத்த உலகக் கோப்பை கேப்டனாக ஏழாவது உலகக் கோப்பை தோனியின் எழாம் எண் அதிர்ஷ்டம் கைகொடுக்குமா பார்ப்போம்.


No comments:

Post a Comment