ஆண்ட்ராய்டு
5.0 லாலிபாப்!
கூகுள் நிறுவனம் HTC உடன் இணைந்து நெக்ஸஸ் 9 என்கிற புதிய டேப்லெட்டை அறிமுகம் செய்துள்ளது. இந்த டேப்லெட்டுக்கான ஆர்டர்கள் அக்டோபர் 17-ம் தேதி தொடங்கிய நிலையில், வருகிற நவம்பர் 9-ம் தேதி இந்த டேப்லெட் விற்பனைக்கு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த டேப்லெட்டின் மிகச் சிறப்பான விஷயம், கூகுளின் அடுத்தத் தலைமுறை மொபைல் ஆபரேட்டிங் சிஸ்டமான ஆண்ட்ராய்டு 5.0 லாலிபாப் இதில் இருப்பதே. இந்த ஆபரேட்டிங் சிஸ்டத்துடன் வெளிவரும் முதல் டேப்லெட் என்கிற பெருமையையும் நெக்ஸஸ் 9 பெற்றிருக்கிறது.
பிராசஸர்:
நெக்ஸஸ் 9, Nvidia
Tegra K1 சக்திவாய்ந்த பிராசஸரைக் கொண்டுள்ளது. அதனால் இந்த டேப்லெட்டின் மூலம் பல்வேறு செயல்பாடுகளை வேகமாகச் செய்து முடிக்க முடியும். அதேசமயம், வலுவான கேம்களுக்கும் (Game), அப்ளிகேஷன்களுக்கும் இந்த பிராசஸர் சாதகமாக அமையும். 2GB RAM என்பதும் டேப்லெட்டின் செயல்பாட்டு வேகத்துக்குச் சாதகமாகவே அமையும்.
டிஸ்பிளே:
இந்த டேப்லெட்டின் டிஸ்பிளே அளவு 8.9 இன்ச். ஐபிஎஸ் எல்சிடி தொழில்நுட்பத்துடன் இதன் டிஸ்பிளே வடிவமைக்கப்பட்டுள்ளது கவனிக்க வேண்டிய விஷயம். இது கொரில்லா க்ளாஸ் 3 பாதுகாப்பு மற்றும் QXGA உடன் 2048×1536
பிக்ஸல்கள் கொண்டதாக இருக்கிறது.
கேமரா மற்றும் பேட்டரி:
பொதுவாக, டேப்லெட்டை வடிவமைக்கும்போது அதில் கேமராவுக்கு முக்கியத்துவம் வழங்காமலே பெரும்பாலும் வடிவமைக்கப்படும். ஆனால், இதில் f / 2.4
aperture மற்றும் எல்இடி ப்ளாஷ் கொண்ட 8 மெகாபிக்ஸல் பின்புற ஆட்டோஃபோகஸ் கேமரா மற்றும் 1.6-மெகாபிக்ஸல் ஃப்ரன்ட் கேமராவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. டேப்லெட்டின் பேட்டரி திறனானது 6700mAh என்கிற அளவில் பொருத்தப்பட்டுள்ளது. இதற்குமுன் இந்த நிறுவனம் வெளியிட்ட நெக்ஸஸ் 7 டேப்லெட்டில் இருக்கும் பேட்டரியைவிட இது மிக அதிகத் திறன் கொண்டது என்பது சிறப்பு.
சேமிப்பு:
புதிய நெக்ஸஸ் டேப்ெலட்
16GB, Wi-Fi மாடல் $399 விலையில் (சுமார் ரூ24,500),
32GB, Wi-Fi மாடல் $479 (தோராயமாக ரூ.29,500) மற்றும் 32GB LTE மோட் $599 (சுமார் ரூ. 37,000) ஆகிய மூன்று விதங்களில் வெளிவருகிறது.
கீபோர்டு:
இந்த டேப்லெட்டின் இன்னொரு சிறப்பம்சம், ஆப்ஷனல் கீபோர்டுடன் வெளிவருகிறது. இதற்கென்று தனியே பேட்டரியுடன் வெளிவருவதால், பேட்டரி செலவு குறித்து கவலை கொள்ளத் தேவையில்லை. தேவை என்கிறபோது டேப்லெட்டுடன் இணைத்தும், தேவையில்லாதபோது தனியே பிரித்து வைத்தும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இதர சேவைகள்:
3.5 மி.மீ ஆடியோ ஜாக், மைக்ரோ-USB, ஜிபிஎஸ், Wi-Fi, மற்றும் ப்ளூடூத் ஆகியவையும் இந்த டேப்லெட்டில் அடங்கும். மேலும், கூகுள் நெக்ஸஸ் 9 டேப்லெட் அம்சங்களான HTC-ன் பூம் சவுண்ட் மற்றும் டூயல் மைக்ரோபோன்களுடன் டூயல் ஃப்ரன்ட் ஸ்பீக்கர்களைக் கொண்டுள்ளது.
3.5 மி.மீ ஆடியோ ஜாக், மைக்ரோ-USB, ஜிபிஎஸ், Wi-Fi, மற்றும் ப்ளூடூத் ஆகியவையும் இந்த டேப்லெட்டில் அடங்கும். மேலும், கூகுள் நெக்ஸஸ் 9 டேப்லெட் அம்சங்களான HTC-ன் பூம் சவுண்ட் மற்றும் டூயல் மைக்ரோபோன்களுடன் டூயல் ஃப்ரன்ட் ஸ்பீக்கர்களைக் கொண்டுள்ளது.
No comments:
Post a Comment