சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

20 Nov 2014

ஈடில்லா இழப்புக்குப் பின் ஈடேறிய ஆசை!


திர்பாராத பல திருப்பங்களைக் கொண்டது வாழ்க்கை. அதற்குச் சமீபத்திய எடுத்துக்காட்டு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிறிஸ்டி (Kristy) - ரோய்ஸ் கிரிச்நர் (Royce Kirchner) தம்பதியினர்.
சில சமயங்களில் அபூர்வமாக மழையும், வெயிலும் சேர்ந்து நம்மை மகிழ்விக்கும். அது இந்த முறை கிரிஸ்டியின் வாழ்வில் பெய்துள்ளது. கிறிஸ்டிக்கு தினமும் டைரி எழுதும் பழக்கம் கிடையாது. ஆனால் தன் வாழ்வில் நடக்கும் அனைத்து விஷயங்களையும் 'யூ டியூப்பில்' பதிவேற்றிவிடுவார். அப்படி ஒரு முறை, கிறிஸ்டி, ''ஏழு வருட காலமாக, நானும், என் கணவர் கிரிச்நரும் குழந்தைப் பெற்றுக் கொள்ள ஆசையாக இருந்தும் அதற்கான வாய்ப்புகள் குறைவாக இருப்பதாக மருத்துவர்கள் சொல்கிறார்கள். எங்களுக்காக வேண்டி கொள்ளுங்கள். குழந்தையில்லை என்ற போதும், எனக்கும் கிரிச்நருக்கும் இடையில் எந்தவித பிரச்னையும் இருந்ததில்லை. குழந்தையில்லை என்ற குறையிருந்தாலும் நாட்களை அன்போடே எதிர் கொள்கிறோம்" என்ற பதிவுகளை போட்டு வந்தார். ஆனால், சமீபத்தில் அவரது யூ டியூப் பதிவு, அனைவர் மத்தியிலும் சோக ரேகையைப் பரவ விட்டுள்ளது.



அக்டோபர் எட்டாம் தேதி கிறிஸ்டியின் கணவர் கார் விபத்தில் இறந்துவிட்டார். 'அட... எப்படி இருந்த குடும்பத்துல இப்படி ஆயிடுச்சே' என்று மொத்த ஊரும் கிரிச்நரின் வீட்டுக்கு அஞ்சலி செலுத்த செல்ல, கவலைத் தோய்ந்த முகத்துடன் இருந்த கிறிஸ்டி, 'இன்றுதான் பரிசோதித்தேன். நான் கர்ப்பமாக இருக்கிறேன். ஏழு வருடங்களாக நானும், கிரிச்நரும் ஆசைப்பட்டது இன்று நிறைவேறிவிட்டது. இதைக் கிரிச்நருடன் உங்கள் எல்லாருடைய வீட்டுக்கும் வந்து தெரிவிக்க எண்ணியிருந்தேன். அது இனி முடியாது. அதனால்தான், கிரிச்நர் சவப்பெட்டியில் படுத்திருக்கும் போதே இதை உங்களிடம் சொல்கிறேன். இன்றோடு கிரிச்நர் என்னைவிட்டு சென்றுவிடுவார். அவரில்லாமல் என்னால் இந்த விஷயத்தை உங்களிடம் சொல்ல இயலாது" என்று உருகியிருக்கிறார்.


மேலும், 'கிரிச்நர் தன் அந்திம காலத்தில் மிகவும் சந்தோஷமாக இருந்தார். நான் சொல்லவில்லை என்றாலும் அவர் நான் கர்ப்பமாக இருந்ததை உணர்ந்தது போலவே இருந்தார். நான் உன்னையும், பிறக்க போகும் நம் குழந்தையையும் வானளவு நேசிப்பதாகச் சொல்வார். பிறக்கும் குழந்தையிடம், உனது தந்தை உன்னை எவ்வளவு நேசித்தார், உன்னை எப்படி வளர்க்க ஆசைப்பட்டார், வாழ்வின் எந்த ஒரு தருணத்திலும் அவரை நீ மறக்ககூடாது என்பதைத் தினமும் சொல்லி சொல்லிதான் வளர்ப்பேன். அவரது புகைப்படங்களைக் குழந்தையிடம் காட்ட பத்திரபடுத்தியுள்ளேன். ஒருவேளை நான் இறந்து அவர் உயிரோடு இருந்து இருந்தாலும் இதையே செய்திருப்பார்" என்றாராம் கண் கலங்க.


கிரிச்நர், இறப்பதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்புதான், கார் மேல் எடுத்திருந்த இன்ஷுரன்ஸை ரத்துச் செய்திருந்தார். கிரிச்நர் இறப்புக்குப் பின் கிறிஸ்டிக்குப் பணப்பிரச்னை வந்துவிடுமோ என்று பயந்த நண்பர்கள் கிறிஸ்டிக்காகவும், அவரது குழந்தைகாகவும் நிதி திரட்டி வருகிறார்கள். 


No comments:

Post a Comment