சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

25 Nov 2014

ராசி இருந்தா வாங்க!

வேலை வாய்ப்பு விளம்பரங்கள்  எத்தனையோ பார்த்திருக்கிறோம். ஆனால் சமீபத்தில் மதுரை எங்கும் ஒட்டப்பட்ட ஒரு சுவரொட்டி ரொம்பவே வித்தியாசம்!

''மிதுனம், ரிஷபம், கன்னி, தனுசு, கும்பம், மகரம், கடகம் ராசிக்காரர்களுக்கு சிறப்பு அழைப்பு. மதுரையில் இயங்கிவரும் எங்கள் கிளைக்கு, நம்பிக்கையும் துணிவும்கொண்ட மேற்கண்ட ராசிக்காரர்கள், எங்களுடைய கட்டுமான நிறுவனத்துக்கு பிசினஸ் டெவலப்மென்ட் மேனேஜர், சேல்ஸ் மேனேஜர் பதவிக்குத் தேவை. கல்வித்தகுதி ப்ளஸ் டூ அதற்கு மேலும்...'' என்று குறிப்பிட்டிருந்தார்கள். கல்வித்தகுதியைவிட ராசியைத் தகுதியாக நினைக்கும் வித்தியாசமான நிறுவனமாக இருக்கிறதே என்று அதில் குறிப்பிட்டிருந்த எண்ணுக்கு தொடர்புகொண்டேன்

''கே.கே.நகரில் இருக்கும் எங்களுடைய வி..பி. ரியல் எஸ்டேட் ஆபீஸுக்கு நேரில் வாங்க'' என்றது குரல். அந்த ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் மக்கள் தொடர்பு உயர் அதிகாரியாக பணியாற்றும் சேகர் என்பவர் பேசினார்.


''இந்த உலகத்தில் எல்லாமே ஒரு கணக்கோடுதான் நடக்கிறது. அந்தக் காலத்துல மகான்களுக்கும் கிரகங்களுடன் தொடர்பு இருந்தது. அதனால்தான் அவர்களால் பல அற்புதங்களை செய்ய முடிந்தது.  நமக்கு மேலான ஒரு சக்தி இருக்கிறது. ஆனால், சில ராசியுள்ளவர்கள் என்ன செய்கிறார்கள் என்றால், நம்ம ராசிக்கு எந்த வேலையும் செட்டாகாது, முன்னேற்றம் ஏற்படாது, என்ற அவ நம்பிக்கையிலேயே காலத்தைக் கழிக்கிறார்கள். அப்படிப்பட்ட ராசிக்காரர்களைத்தான் நாங்கள் குறிப்பிட்டு வேலைக்கு அழைக்கிறோம். இங்கு அவர்களுக்கு பயிற்சியளித்து பாதையைக் காட்டுகிறோம். ராசியை சொல்லி வாய்ப்புகளை இழக்காதீர்கள் என்று தன்னம்பிக்கையூட்டி உருவாக்குகிறோம்.

வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு ஏதோ மூட நம்பிக்கையில் நாங்கள் அறிவித்ததுபோல் தெரியும். அப்படியல்ல. குறிப்பிட்ட சில ராசிகளைக் காரணமாக வைத்து சோர்ந்து போனவர்களை உற்சாகப்படுத்தும் விதமாகத்தான் இந்த ஏற்பாடு. அதே நேரத்தில் நாம் செய்கிற எல்லா விஷயங்களுக்கும் கிரக நிலைகளுக்கும் தொடர்பு உள்ளது. ஒரு கரு வயிற்றில் உருவாகி வளர்வதற்கு எந்த சக்தி உதவி செய்கிறதோ, அதே போன்ற ஒரு சக்தி மனிதர்களையும் அவர்கள் செய்யும் வேலைகளையும் இயக்குகிறது. செவ்வாய் கிரகத்துக்கே ராக்கெட் விடுகிற காலத்தில் இது எடுபடுமா என்றால், ஒருபக்கம் அறிவியல் என்றாலும் இன்னொரு பக்கம் இறை சக்தியையும் விஞ்ஞானிகள்  நம்புகிறார்கள்

இது போன்ற கால்குலேஷன்களை நம் முன்னோர்கள் போட்டு வைத்திருக்கிறார்கள். ஒருபக்கம் இந்த நம்பிக்கையும் இன்னொரு பக்கம் நம் செயலும் ஒன்று சேர வேண்டும் என்பதற்காகத்தான் இப்படி ஒரு முயற்சியில் இறங்கினோம்.  இந்த விளம்பரத்தைப் பார்த்து பல இளைஞர்கள் தொடர்புகொண்டு வருகிறார்கள். அவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்போம். எங்கள் விளம்பரம் முகநூலிலும் பலபேராலும் விரும்பப்பட்டு வருகிறது'' என்றார்.



சேலத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்த நிறுவனம், பெருநகரங்களுக்கு அருகில்  சிறு சிறு நகரங்களை உருவாக்கும் வகையில் ரியல் எஸ்டேட் தொழில் செய்வதாகச் சொல்கிறார்கள். போகிறபோக்கில் சர்டிஃபிகேட்டு களோடு ஜாதகப் புத்தகத்தையும் தூக்கிக் கொண்டு அலைய நேரிடலாம்!



No comments:

Post a Comment