சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

28 Nov 2014

படகோட்டும் பதின்பறவைகள்!


''சியர்ஸ்ஸ்ஸ்ஸ்!''
கடல் நீர் தெறிக்க சிலிர்த்துச் சொல்கிறார்கள் ஐஸ்வர்யாவும் வர்ஷாவும். தென்கொரியாவில் நடைபெற்ற 17வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் படகோட்டும் (Sailing) பிரிவில் வெண்கலம் வென்று திரும்பியுள்ள இளம்தமிழச்சிகள். ஆசிய படகோட்டும் போட்டிகளில் பெண்கள் பிரிவில் இந்தியாவுக்கு கிடைக்கும் முதல் பதக்கம் இது.


சென்னை, எம்..பி. கல்லூரியில் சோஷியாலஜி இரண்டாம் ஆண்டு படிக்கிறார் ஐஸ்வர்யா. 'என் அக்காவுக்கு கடலாராய்ச்சியில் ஆர்வம். எட்டு வருஷத்துக்கு முன்ன ஒரு கோடை விடுமுறையில அவ செய்லிங் கத்துக்கப் போனப்போ, நானும் கூடப் போனேன். அப்படி ஆரம்பிச்ச ஆர்வம், இன்னிக்கு உங்க முன்ன வின்னிங் செய்லரா நிக்கிறேன்.!'' என்கிறார் தடதடக்கும் பேச்சில்.


'நான் முதல் முதலா செய்லிங் பண்ண தொடங்கியது 10 வயசுல. பிடிச்சு, உழைச்சு பிராக்டீஸ் செஞ்சதால... அண்டர் 10, அண்டர் 12 நேஷனல் சாம்பியன்ஷிப் வாங்கினேன். இப்போ மூணு வருஷமா நானும் ஐஸ்வர்யாவும் டீம் மேட்ஸ். இதுக்குக் காரணம், எங்க கோச் பீட்டர் டேவிட் கான்வே. அவர்தான் நாங்க ஒரே டீம்ல இருந்து செய்ல் பண்ணினா வெற்றியைத் துரத் தலாம்னு கணிச்சாரு. இப்போ நாங்க டீம் மேட்ஸ் மட்டும் இல்ல, பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸ்!'' என்று ஐஸ்வர்யா தோளை அணைக்கும்  வர்ஷா,  ப்ளஸ் ஒன் படிக்கிறார். ''கோச்சிங் காரணமா ஸ்லுக்குப் போக நேரமில்ல. பிரைவேட்டாதான் எக்ஸாம் எழுதப்போறேன்'' என்கிறார் வர்ஷா.

இவர்கள், சமீபத்தில் போபாலில் நடந்த இன்லேண்ட் நேஷனல் சாம்பியன் போட்டியில் பெண்களுக்கான பிரிவில் தங்கமும், பொதுப் பிரிவில் வெள்ளியும் தட்டி இருக்கிறார்கள் என்பது எக்ஸ்ட்ரா செய்தி.
'இதுவரைக்கும் செய்லிங்ல இந்தியாவில இருந்து யாரும் ஒலிம்பிக் தகுதிச் சுற்றுல தேர்வானது இல்ல, வைல்ட்கார்டு மூலமாதான் போயிருக்காங்க. அடுத்த ஒலிம்பிக்ல, தகுதிச் சுற்றில தேர்வாகி ஒலிம்பிக் போகணும். அதுதான் எங்களுக்கு இப்போதைய டார்கெட். ஒலிம்பிக் தங்கம், வாழ்நாள் கனவு!''

கைகள் கோத்து உயர்த்துகிறார்கள் தண்ணீர்ப் பறவைகள்!


No comments:

Post a Comment