சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

11 Nov 2014

காரை அலங்கரிக்க... அழகுபடுத்த...3

 பெர்ஃபாமென்ஸ்/PERFORMANCE
காருக்கு வெளியேயும்உள்ளேயும் செய்யும் மாடிஃபிகேஷன்களை விடஇன்ஜினில் செய்யும் மாடிஃபிகேஷன் காரின் பெர்ஃபாமென்ஸை மாற்றிவிடும்இது மிகவும் சவாலானது என்பதோடுஅதிக செலவு வைக்கக்கூடிய மாடிஃபிகேஷன்.
மிகச் சிறந்த சர்வீஸ் சென்டர்களில் மட்டுமே இன்ஜின் மாடிஃபிகேஷன் செய்ய வேண்டும்உங்கள் காரின் இன்ஜின் சக்தி 75 bhp என்றால்அதை 100 bhp ஆக மாற்ற முடியும்.

01 /ட்யூனிங் பாக்ஸ்
ட்யூனிங் பாக்ஸ் என்பது இன்ஜின் மற்றும் எலெக்ட்ரானிக் கன்ட்ரோல் யூனிட்டுக்கு இடையே வைக்கப்படுவதுஇதை ஆன் செய்து ஆஃப் செய்து பயன்படுத்தலாம்ட்யூனிங் பாக்ஸ் அல்லது பவர் பாக்ஸ் என்பது விலை குறைவானது என்பதோடுதேவையில்லை என்றால்எளிதில் அகற்றிவிடலாம்.  ட்யூனிங் பாக்ஸைப் பொருத்துவதால்காரின் வேகம் அதிகரிக்கும்இதை 0-100 வேகத்தை டெஸ்ட் செய்தே தெரிந்துகொள்ளலாம்தரமான ட்யூனிங் பாக்ஸுகள் 15,000 ரூபாய் முதல் 45,000 ரூபாய் வரை விற்பனையாகின்றன.

02 /இசியூ ரீ-மேப்
இசியூ ரீ-மேப் மிகவும் டெக்னிக்கலான விஷயம்இன்ஜின் ரீ-மேப் என்பது எலெக்ட்ரானிக் கன்ட்ரோல் யூனிட்டைத் திரும்பவும் ப்ரோகிராம் செய்வதுடெக்னிக்கல் விஷயங்களில் தேர்ந்த சர்வீஸ் சென்டர்கள் மட்டுமே இதைச் செய்ய முடியும்இன்ஜினை ரீ-மேப் செய்வதன் மூலம் 100 bhp சக்திகொண்ட காரை 125bhp சக்திகொண்டதாக மாற்ற முடியும்ஆனால்சக்தி அதிகரித்தால்மைலேஜ் குறையும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்ஹை-ரெவ்பீட்ஸ்டார்க் ஆட்டோ உள்ளிட்ட பல நிறுவனங்கள் இதைச் செய்கின்றனஇதற்கு 50,000 ரூபாய் வரை செலவாகும்.

03 /பிரேக்
இன்ஜினின் பவரை அதிகரிக்கும்போதுஅதற்கு ஏற்றதுபோல பிரேக்கையும் மாற்ற வேண்டும்கம்பெனி பிரேக்ஸ் என்பது காரின்  ஒரிஜினல் பவருக்கு ஏற்ற வகையில் டிசைன் செய்யப்பட்டிருக்கும்தரமான பிரேக் டிஸ்க் மற்றும் பிரேக் பேடுகளை மாற்றுவதற்கு 50,000 ரூபாய் வரை செலவாகும்.

04 /ஏர் ஃபில்ட்டர்
ஏர் ஃபில்ட்டரைப் பொறுத்தவரைஇன்ஜினில் எந்த மாற்றமும் செய்ய வேண்டியது இல்லைகாரிலுள்ள ஏர் ஃபில்ட்டரை எடுத்துவிட்டுஇதைப் பொருத்தினால் போதும்இது போன்ற பெர்ஃபாமென்ஸ் ஏர் ஃபில்ட்டர்களின் விலை 2,000 ரூபாயில் இருந்து 7,000 ரூபாய் வரை ஆகும்இதைப் பொருத்துவதன் மூலம் இன்ஜினின் செயல்பாட்டில் முன்னேற்றம் ஏற்படும்.
05 /டர்போ சார்ஜர்
டீசல் இன்ஜின் என்றால்டர்போ சார்ஜரைப் பொருத்தலாம்டர்போ சார்ஜர் என்பதுகூடுதலாகக் காற்றை அழுத்தத்துடன் இன்ஜினுக்குள் செலுத்திஇன்ஜின் செயல்பாட்டை அதிகரிக்கச் செய்யும்டர்போ சார்ஜரைப் பொருத்தும்போது இசியூ எக்ஸ்ட்ரா பவர் பூஸ்ட்டைத் தாங்கும் திறன் கொண்டதாஇன்ஜெக்டர்கள் அதற்கேற்ற டீசலைக் கடத்துமா என்பதை எல்லாம் சோதித்துவிட்டுத்தான் டர்போ சார்ஜரைப் பொருத்த வேண்டும்.
டர்போ சார்ஜர்களைப் பொருத்தும்போது குறிப்பிட்ட இடைவேளைகளில் இன்ஜின் ஆயிலை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும்இன்ஜின் ஆயில் குறைந்துவிட்டால்அது ஒட்டுமொத்த இன்ஜின் செயல்பாட்டையே குலைத்துவிடும்அதேபோல்ஒவ்வொரு முறையும் காரை ஸ்டார்ட் செய்துவிட்டு இரண்டு நிமிடங்கள் ஐடிலிங்கில் வைத்துவிட்டுத்தான் ஓட்ட ஆரம்பிக்க வேண்டும்டர்போ சார்ஜரைப் பொருத்த, 75,000 ரூபாயில் இருந்து 1.50 லட்சம் ரூபாய் வரை செலவாகும்.

06/சஸ்பென்ஷன்
ஃபன் டு டிரைவ் வேண்டும் என்பவர்கள்சஸ்பென்ஷனில் சில வேலைகளைச் செய்யலாம்இப்போது எல்லா கார்களுமே அலுங்கல்குலுங்கல் இல்லாத பயணத்துக்கு ஏற்ற வகையில் சாஃப்ட் சஸ்பென்ஷன் செட்-அப் இருக்கும்வளைத்துநெளித்து ஓட்ட வேண்டும் என்றால்ஸ்டிஃப் சஸ்பென்ஷன் செட்-அப் இருக்க வேண்டும்அதே சமயம் ரொம்பவும் ஸ்டிப்ஃபாக இருந்துவிட்டால்மேடு பள்ளங்களில் ஏறி இறங்கும்போதுமிகவும் இம்சையாக இருக்கும்முழுமையாக சஸ்பென்ஷன் செட்-அப் மாற்றி அமைக்க 1 லட்சம் ரூபாய் வரை செலவாகும்.

07 /எக்ஸாஸ்ட் சிஸ்டம்
காருக்குள் இருந்து வித்தியாசமான சத்தம் வருவதற்குக் காரணம்எக்ஸாஸ்ட்தான்இந்த எக்ஸாஸ்ட் சிஸ்டத்தில் பல வகைகள் உள்ளனஇது 7,500 ரூபாயில் இருந்து 40,000 வரை விற்பனை செய்யப்படுகிறதுஇதுவும் இன்ஜினின் பெர்ஃபாமென்ஸை அதிகரிக்கச் செய்யும்.

08 /சிந்தெட்டிக் ஆயில்

சிந்தெட்டிக் ஆயில் சாதாரண மினரல் ஆயில்களைவிட சக்தி வாய்ந்தவைசிந்தெட்டிக் ஆயில் இன்ஜின் உராய்வை பெருமளவு குறைப்பதால்பெர்ஃபாமென்ஸ் அதிகரிக்கும்சிந்தெட்டிக் ஆயில் polyalphaolefin உள்ளிட்ட பல வேதியியல் கலவையை உள்ளடக்கியதாகும்சிந்தெட்டிக் ஆயிலால் இன்ஜின் ஆயுள்காலமும் அதிகரிக்கும்

கேஸ்ட்ரால்மொபில்ஷெல் என பல பிராண்டுகளில் சிந்தெட்டிக் ஆயில் விற்பனை செய்யப்படுகின்றனகார் வாங்கிய உடனே சிந்தெட்டிக் ஆயிலுக்கு மாறுவது நல்லது அல்ல. 10,000 கி.மீ தாண்டியதும் மாற்றலாம்உங்கள் கார் யூஸர் மேனுவல் எந்த அளவுகொண்ட ஆயிலை நிரப்ப வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளதோஅதே அளவு ஆயிலைத்தான் மாற்ற வேண்டும். 500 ரூபாயில் இருந்து 1,500 ரூபாய் வரை சிந்தெட்டிக் ஆயில் விற்பனைக்குக் கிடைக்கிறது.


No comments:

Post a Comment