சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

11 Nov 2014

தொழில்முனைவோரே... புதிது புதிதாய் கற்றுக்கொள்ளுங்கள்!

தொழில் முனைவோரக உருவாவதற்கு, முதலீடு, தொழில் சார்ந்த பட்டப்படிப்பு போன்றவை அதியாவசியமாக இருக்கலாம் ஆனால் முக்கியமான தேவை என்பது கற்றுக்கொள்ளும் திறனே ஆகும். நான் ஒரு தொழில்முனைவோர் ஆக வேண்டும் என்கிறவர்கள், ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக கற்றுக் கொள்ள வேண்டும். 

தற்போதுள்ள கார்ப்பரேட் உலகில் சுயமாக தொழில் செய்வது ஒரு போர் புரிதலுக்கு சமம் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. தொழில் முனைவோர்களுக்கென எழுதப்பட்ட பல தன்னம்பிக்கை புத்தகஙகளில் பண்டைய கால போர் உத்திகள் குறித்து கூறப்பட்டுள்ளதே இதற்கு சான்றாகும். தன்னம்பிக்கை மிகுந்த பல சாதனையாளர்கள் வாழ்க்கை முறையையும் அவர்கள் அனுபவங்களையும் அவர்களின் தத்துவங்களையும் கற்றுக்கொள்வது பல சமயங்களில் தொழில் முனைவோர்களுக்கு பயனுள்ளதாக அமையும். 

இன்றைய இளைய தலைமுறையினர்களின் மனதில் கார்ப்பரேட் முதலாளிகள் மட்டும்தான் தொழில் முனைவோர்கள் என்கிற எண்ணம் பதிந்துள்ளதை உணர முடிகிறது. அவர்கள் மட்டுமே தொழில்முனைவோர்கள் அல்ல, நமது வீட்டினருகில் டீ கடை வைத்திருப்பவரும் தொழில் முனைவோர்தான் என்பதை அவர்கள் உணர வேண்டும். 

இதற்கு உதாரணமான ஒரு சம்பவம், சேலம் மாவட்டம் கருப்பூரில் உள்ள எங்கள் கல்லூரிக்கு அருகில் நான்கு டீ கடைகள் உள்ளன. அதில் மூன்று கடைகள் இரவு 10 மணி வரை செயல்படும். ஆனால் ஒரு கடை மட்டும் 7 மணிக்கு மூடி விடுவார்கள். ஒரு நாள் அந்த கடை உரிமையாளர் செந்தில்குமாரிடம் காரணத்தைக் கேட்டேன். அவர் சொன்ன பதில் இதுதான், "இரவு 7 மணிக்கு மேல் கலேஜ் பசங்க மட்டும்தான் டீ சாப்ட வருவீங்க.

அவங்களை மட்டுமே டார்கெட் பண்ணி மட்டுமே கடைகளை திறந்திருந்தாலும், போட்டிக்கு மூணு டீ கடைகாரர்களும் இருப்பாங்க. பெருசா வருமானம் கிடைக்காது. ஆனா இந்த ஏரியாவுல அதிகாலை நான்கு மணிக்கே எழுந்து வேலைக்கு போறவங்க நிறையா பேரு இருக்காங்க. அதனால காலையில 3 மணிக்கே கடை திறந்த நல்லா வியாபாராம் ஆகும். ஏன் ஒரு நாளோட வருமானத்துல சரி பாதி காலைல ஏழு மணிக்குள்ள வரும் வருமானம்தான்" என்று சொன்னார். வடிக்கையாளர்களையும் போட்டியாளர்களையும் ஒருசேர புரிந்து கொள்வது வெற்றி பெறுவதற்கு அவசியமான ஒன்று என்பதை அந்த டீ கடைக்காராரிடம் என்னால் கற்றுக் கொள்ள முடிந்தது. 

இந்த டீக்கடை மட்டுமல்ல நம்மைச் சுற்றியுள்ள பல வியாபாரிகளிடம் இது போன்ற பல திறமைகள் இருக்கும். படிக்கும் வயதிலேயே இவற்றையெல்லாம் கற்றுக்கொள்வது அவசியம். நாமும் ஒரு தொழில்முனைவோராக உருவாகும்போது இந்த சிறு சிறு விஷயங்கள் கூட மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

No comments:

Post a Comment