ஆறு, ஏரி, குளம், குட்டை, கிணறு இவையெல்லாம் மறந்து இன்றைக்கு தண்ணீர் என்றதும் சட்டென நம் நினைவுக்கு வருவது ‘அம்மா குடிநீரோ’ அல்லது அகுவா ஃபினோவோதான்.
நம் மண்ணுக்கு சொந்தமான தண்ணீரை அயல்நாட்டினர் அதிக விலைக்கு விற்கிறார்கள். இதை தவிர்த்து இயற்கை வளத்தை மக்களுக்கு இலவசமாய் தரவேண்டிய அரசு நிர்வாகமோ “நான் குறைந்த விலைக்கு தருகிறேன்“ என தண்ணீரை வைத்து வியாபாரப் போட்டி நடத்துகிறது.
நம்முடைய தண்ணீரை பன்னாட்டு நிறுவனங்கள் கொள்ளையடிப்பதையும், அதை நச்சுத்தன்மையாக மாற்றுவதையும் நமக்கு சொல்வதற்கே ஒரு ‘விஜய்’ தேவைப்படுகிறார். இப்படியான சூழலில், தண்ணீர் தனியார் மயமாதல் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த, தளிர்கள் மற்றும் ஐந்தினை வாழ்வியல் நடுவம் ஆகிய அமைப்புகள் சார்பாக தருமபுரியில் சில தினங்களுக்கு முன்பு 'தண்ணீர் தனியார் மயமாதல்' என்கிற தலைப்பில் கருத்தரங்கம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
அதில் சூழலியளாலர் நக்கீரன் கலந்து கொண்டு பேசினார். “இந்தியா வல்லரசாக 2020 வரைக்கும் உங்களையெல்லாம் தூங்க சொல்லியிருக்கிறது அரசாங்கம். ஆம், தூங்கும் போதுதானே கனவு வரும். மக்கள் விழிப்படைய கூடாது என்பதில் மிகக் கவனமாக இருக்கிறது நம் அரசாங்கம்.
ஒருமுறை வெளிநாட்டிலிருந்து எனக்கு தெரிந்த சிலர் தமிழகம் வந்தனர். தமிழகத்தில் ஒரு நிறுத்தத்தில் பேருந்து நின்றபோது அவர்களில் ஒருவர் அங்கிருந்த கழிப்பிடத்தில் சிறுநீர் கழித்தார். நான் அதற்கு கட்டணம் செலுத்தியதை பார்த்து அவர் அதிர்ச்சியடைந்தவராக ஏன் அவருக்கு காசு கொடுத்தீர்கள் என்று கேட்டார். “சிறுநீர் கழித்தற்கு“ என்றேன். அதற்கு அவர் “நான் யூரின் போக அவருக்கு எதுக்கு காசு தரணும்? இப்படியே கொடுத்துக்கொண்டிருந்தால் ஏழையாகிவிடமாட்டீர்களா..? என்று சாதாரணமாக கேட்டார்.

அது சாதாரண கேள்வி அல்ல..? அதை அப்படியே மாற்றி யோசித்துப்பாருங்கள். எனது நிலம்.. எனது தண்ணீர்.. இதை எனக்கு தாகமெடுக்கும்போது குடிப்பதற்கு எதற்கு கோகோ கோலாகாரனுக்கு காசு கொடுக்கணும். அவனென்ன அட்லாண்டாவிலிருந்தா தண்ணீர் எடுத்து நம்மிடம் விற்கிறான்? நம் மண்ணிலிருந்து எடுத்து அதை நமக்கே விற்பனை செய்கிறான். உயிரினங்கள் என்றிலிருந்து தண்ணீர் குடிக்க ஆரம்பித்ததோ அன்றிலிருந்து இன்றுவரை எந்த உயிரினங்களும் காசு கொடுத்து தண்ணீர் குடிப்பதில்லை. மனித இனம் மட்டும்தான் இன்றைக்கு காசு கொடுத்து தண்ணீரை குடித்துக்கொண்டிருக்கிறது.
கொச்சபம்பா... தண்ணீர் வரலாற்றில் மறக்கமுடியாத பெயர். பொலிவியா நாட்டிற்கு 1998 ம் வருடம் உலக வங்கி, இரண்டரை கோடி டாலர் கடன் கொடுத்தபோது அவர்களிடையே ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தம், தண்ணீரை தனியார்மயமாக்க வேண்டும் என்பது. அதன்படி பொலிவியா நாட்டில் கொச்சபம்பா என்கிற மாகாணத்தின் தண்ணீரை பெக்டல் என்கிற தனியார் கம்பெனி வசம் ஒப்படைக்கிறார்கள்.
அவர்கள் கைக்கு போன அடுத்த மாதமே தண்ணீருக்கான விலை கூடியது. திடீர் விலை உயர்வால் மக்களிடையே சலசலப்பு உருவாகி நாளாக நாளாக 60 ரூபாய் சம்பாதிக்க கூடிய ஒருவர், அதில் 20ரூபாயை தண்ணீருக்கே தர வேண்டிய சூழல் ஏற்பட்டது. இப்படியான மோசமான சூழலுக்கு தள்ளப்பட்ட பிறகுதான் கொச்சபொம்பா மக்கள் விழித்தெழுந்தனர். போராட்டங்களை முன்னெடுத்தனர். ஆனால் அரசாங்கம் மழுப்பிக்கொண்டே இருந்தது. எதிர் நடவடிக்கையாக பணம் கட்ட முடியாதவர்களுக்கு தண்ணீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அதனால் மக்கள் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைத்து அந்த தண்ணீரை பயன்படுத்த துவங்கினர்.

பெக்டல் நிறுவனம் தனது அடியாட்களை அனுப்பி, அந்தத் தொட்டிகளை உடைத்தது. “தரையிலிருந்து எடுத்தாலும் வானத்திலிருந்து எடுத்தாலும் எத குடிச்சாலும் எங்களுக்கு நீங்க காசு கட்டணும் என்றனர். போராட்டங்களி லிருந்து பலர் ஒதுங்கி கொண்டபிறகு, ஒரு சாதாரண செருப்பு தைக்கும் தொழிலாளியின் பின் மக்கள் ஒன்றுதிரண்டனர். அந்த நிறுவனம் எங்கெங்கெல்லாம் குழாய் இணைப்பு வைத்திருந்தார்களோ அதையெல்லாம் உடைத்தனர். இதற்கு எதிராக துப்பாக்கிச் சூடு நடத்தியது அரசு. பலர் உயிரிழந்தனர். குடிக்கவே தண்ணீர் இல்லை. இனிமேல் இந்த உயிர் போனால் என்ன இருந்தால் என்ன என்று ஒரு முடிவோடு மக்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். “பெக்டலே ஓடு“ என்ற முழக்கம் ஓங்கியது. அதற்கு பிறகுதான் அந்நிறுவனம் நாட்டைவிட்டு வெளியேறியது.
அப்படி மக்களால் விரட்டி அடிக்கப்பட்ட அந்த நிறுவனத்தை ஆசியாவிலயே ஒரே ஒரு நாடுதான் இரு கரங்களையும் நீட்டி அழைத்துக்கொண்டது. அது நம் இந்தியா. அதிலும் தமிழ்நாடு. தமிழ்நாட்டில் திருப்பூர் மாநகரத்திலே. வந்தவுடன் குடிக்கிற மக்களுக்கு 4 ரூபாய் 50 காசு, கம்பெனிகளுக்கும் மட்டும் கூடுதல் விலை என்றனர். அவர்களால கம்பெனிகளுக்கு தண்ணீரை விற்பனை செய்ய முடியவில்லை. காரணம் திருப்பூர் விவசாயிகள் தங்களுடைய போர்வெல்லில் இருந்து மிகக்குறைந்த விலைக்கு தண்ணீரை கொடுத்ததே. உடனே அரசாங்கத்திடம் எனக்கு பிஸினஸ் இல்லை எங்களுக்கு லாபம் குறையக் கூடாது ஏதாவது ஏற்பாடு செய் என்றது. அந்த நிறுவனம். 1000 லிட்டரை 4 ரூபாய் 50 காசு என்று நம் தண்ணீரை நம்முடைய அரசாங்கம் வாங்கி கொண்டிருந்தது போக 1000 லிட்டர் 21 ரூபாய் என ஒரு நாளைக்கு 10 கோடி லிட்டர் தண்ணீரை வாங்கி கொள்வோமென்று கூறி இன்றைக்கும் தமிழக அரசு செயல்படுத்திக்கொண்டிருக்கிறது. இதைப்பற்றிய எந்த அறிதலும் அறிவும் இன்றி, நாமெல்லாம் தூங்கி கொண்டிருக்கிறோம்.
பவானியிலிருந்து தண்ணீரை எடுத்து திருப்பூருக்கு கொடுக்க, பெக்டல் நிறுவனத்துக்கு அரசு அனுமதி கொடுத்திருக்கிறது. திருப்பூரிலிருந்து பவானிக்கு வெறும் 56 கிலோமீட்டர் தொலைவுதான். ஆனால் சென்னைக்கு கொள்ளிடம் ஆற்றிலிருந்து தண்ணீர் போகிறது. வீராணத்திலிருந்து தண்ணீர் போகிறது. இதற்குள்ள தூரம் 200 கிலோமீட்டருக்கு மேல். 200 கி.மீ தண்ணீர் கொண்டு போகத்தெரிந்த தமிழக அரசுக்கு, வெறும் 56 கி.மீ க்கு முடியாதா? முடியும். ஆனால் இதற்கு பின் இருக்கும் அரசியல் மிக முக்கியமானது.
இப்படி இன்னும் நிறைய உதாரணங்கள் இருக்கின்றது. நம்முடைய தண்ணீரை நம்மிடம் விற்பதற்கு பன்னாட்டு நிறுவங்கள் மறைமுக சதி வேலைகளை செய்து கொண்டே இருக்கிறது. ஒட்டுமொத்தமாக நம்முடைய நிலத்தடி நீரை உறிஞ்சுவது , நம்முடைய நீரை அசுத்தப்படுத்துவது என இரண்டு வழிகளில் நம்முடைய தண்ணீர் கொள்ளையடிக்கப்படுகிற்து. இரண்டாவது முறையைதான் அதிகம் பயன்படுத்துகிறார்கள்.
பெரிய நாடுகள் நம்முடைய நாட்டில் கார் கம்பெனியை துவங்கி கார்களை தயாரித்து அதை தங்கள் நாட்டிற்கு ஏற்றுமதி செய்கின்றனர். காரணம் ஒவ்வொரு கார் தயாரிப்பதற்கும் லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் செலவாகும் என்பதே. சாயப்பட்டறைகள், தோல் தொழிற்சாலைகள் இன்னும் எத்தனையோ நிறுவனங்கள் நம்முடைய தண்ணீரை நாசமாக்கிகொண்டிருக்கின்றன.
ஆனால் நாமெல்லாம் வேலைவாய்ப்புக்காக அவர்கள் பின்னால் ஓடுகிறோம். விலை மதிப்பில்லாத தண்ணீரை விலையில்லாமல் எடுத்துக்கொண்டு நம்மையும் அடிமையாய் அதில் சேர்த்துக்கொள்கிறோம். நமக்கு அந்த வேலை தேவையா..? இன்றைக்கு நாம் குடிக்கும் ஒவ்வொரு லிட்டர் குளிர்பானத்திற்கு பின்னாலும், நச்சாக்கப்பட்ட 6 லிட்டர் தண்ணீர் இருக்கிறது.
நம்முடைய அடுத்த தலைமுறையினருக்கு சொந்தமான தண்ணீரையும் சேர்ந்த்து அழிக்கிறோம். இந்த குளிர்பானங்கள் மூலமாக, நம்மை அதற்கு பழக்கி கொண்டே இருக்கிறார்கள். பேருந்தில் பயணிக்கும்போது பார்த்தால் பால்புட்டி போல எல்லோருடைய கைகளும் ஒரு தண்ணீர் பாட்டில் இருக்கிறது.

'இது தண்ணீருக்கான அழிவு இல்லை... மனிதனுக்கான அழிவு!' என தெரிந்துகொண்டு விழித்தெழ வேண்டியது அவசியம்" என்று முடித்தார்.
No comments:
Post a Comment